Monday, 13 June 2011

குப்பை ரூம் (second part )

தந்தையின் கதை  கேட்டு நேசித்தேன் குப்பையை,
பூஜித்தேன்  என் தந்தையை  ஓர் .ஆதர்சவாதியாய் .
தப்பாக எடை போட்டேன் ஓர் சோம்பேறி மனிதனாய்,
தந்தையே உன்  மனம் நொந்துதா என் சொல்லினால்?
குப்பையில் கடந்த நீ , எப்படித்தான்  வளர்ந்தாய்?
உன்னை தன் குழந்தையாய் யார் எடுத்து ஊட்டினாள்?
உன் ஸ்வந்தம் தாயும் தகப்பனும் எவரோ ?
கல் நெஞ்சம் கொண்ட அந்த தாயும் எவளோ?    
குப்பையை நோக்கி  உன்னை  எறிந்ததும் ஏனோ ?
அய்யோ  தந்தையே உனக்கு எத்தனை துயரம் ,
உன் தாரமும்  எப்பவோ போய்விட்டாள்  உயரம்.
தந்தையே நீ வாழ்ந்தாய்  உன் மகளுக்காக மட்டும்,
மறுமணம்  செய்யாமல் ,செய்தாயே தியாகம். 
தந்தையே  உன்னை நான் கைவிடமாட்டேன் ,
வாழ்நாள் முழுவதும் உன்னுடன் இருப்பேன்.
வேண்டாம் எனக்கு திருமண வாழ்க்கை,
தந்தையை காப்பது தான் என் கொள்கை.

வாழ்நாள் எல்லாம் நேசிப்பேன்,என் தந்தையை,
பாசத்தை கொட்டும் என் தந்தையார் குப்பனை.
ஏன் தந்தையின் சரிதம்  ஓர் குப்பை கதையல்ல ,
அதொரு  குடிமகனின்  மகத்தான  சரித்ரம்.
ஜெயம்
27-5-2011

No comments:

Post a Comment