Thursday, 5 October 2017

ஒரு பெண்ணின் மனமாற்றம் .

   
 தெரு தெருவா அலைந்து பூக்கள் திருடுவேன்  ஸிட்நியில் அப்பொ,
தெரு தெருவா அலைந்து " சில்க்கியின் " பூ எடுக்குகிறேன் இப்பொ.

ஏன் கணவர் பக்தி  ச்றத்தயா பூஜை பண்ணிக்கொண்டிருந்தார் அப்பொ,
மணக்கும் புஷ்ப்பங்களை நோக்கி தெருவெல்லாம் ஓடுவேன்  அப்பொ.

விதவிதமான பூக்களை திருடி தோளில் தொங்கும் பைய்யெல்லாம்  பூவாஸனை,
நம் வீட்டு மல்லிக்கு மணமே இல்லயெந்று தோண்ரும் நம்மள் மன யோசனை.

என் கணவர் பூஜை செய்யும் பழக்கம் ஒரேயடியாக நின்றுவிட்டது இப்போ,
நானும் பூ திருடும் பழக்கத்தை ஒரேயடியாக நிறுத்திவிட்டேன் இப்போ.

அன்று பூக்களை பூஜைக்காக திருடுவதை ரொம்பவே ரசித்தேன்,
இன்று பூக்கள் தாய் செடியில் பூத்து  குலுங்குவதை ரசிக்கிறேன்.

பூக்களே நீங்கள் தாயுடன் இருந்து உங்கள் அழகை காட்டுங்கள்,
உங்கள் நறுமணத்தால் உங்கள் தாயின் உள்ளத்தை மயக்குங்கள்.
                                                   சுபம் .
                                               ------------

Wednesday, 27 September 2017

199 ஸதி மொஹல்லா .

                                                 199 ஸதி  மொஹல்லா .
                                                             ---------------------------------

நிம்மியின் தந்தை"ஜீவன் ஜ்யோதி " என்றும்  " LIC'யில் வேலை பார்த்தார்.
மீரட்டிலிருந்து  ரூர்க்கிக்கு அவரை மாற்றி விட்டார்கள் அதிகாரிகள் .

ரூர்க்கியில் எங்கள் வாடகை வீடு அம்மைந்தது ஸதி மொஹல்லாவில்,.
சகுந்தளா என்றும் "உன்னாஜி " தான் அந்த வீட்டு சொந்தக்காரியம்மாள் .

உன்னாஜியும் குடும்பவும் பஞ்சாபில் இருந்து ரெபியூஜியாக வந்தவர்கள்.
பார்டிஷனுக்கு முன்பு அது ஒரு முஸ்லீம் குடும்பம் வஸிச்ச பழைய வீடு.

உன்னாஜி அவள் கணவர் ராம்லாலின் இரண்டாம் தாரமாவாள் .
அவர்களுக்கு பிறந்த செல்வங்களோ ஒரு பெண்ணும் ஒரு ஆணும்.

கீதா என்ற ஏழு வயது பெண்ணும் காக்கா என்றும் ஐந்து வயது பையனும்..
உண்ணாஜி குடும்பம் மாடியில், எங்களுக்கு கொடுத்தது கீழ் போர்ஷன்
.
எனக்கு பிறந்ததோ நிம்மி  என்ற பெண்ணும்  குப்பன்என்ற பையனும்,
நிம்மியின்  வயதோ ஐந்திருக்கும் குப்பனின் வயதோ மூன்றரை இருக்கும்.

வந்து இறங்கின மாறானாளே இவர் தன் புதிய ஆபீஸ் சென்றுவிட்டார்..
நானோ சாமான்களை ஒழுங்கப்படுத்தும்  வேலையில் முழுகிவிட்டேன்

ஆபீசுக்கு கிளம்பும் முன் என்னிடம் பலமுறை எச்சரிக்கை விட்டார்,
கொழந்தைகள் கவனம் தான் முக்கியம் என்று படித்து படித்து சொன்னார்

குப்பனோ கண்மூடி திறக்கும்முன் வெறும் மலேசியா பாண்ட்டுடன் ,
யாருக்கும் தெரியாமல் எங்கோ தொலைதூரம் ஓடி மறைந்துவிட்டான்.

நிம்மியிடம் கேட்டுப்பார்த்தேன் அவள் பயந்து போய் பேந்த பேந்த முழித்தாள்
எங்கே போயி தேடுவேன் குப்பனை என்று ஓரெழவும் தெரியாமல் விழித்தேன்.
.
கால்களில் சப்பல் இல்லாமல் விரித்த தலைமுடியுடன் அலறி ஓடினேன்,
சந்து பொந்துகளில் ஒன்றுவிடாமல்  என் அருமை குப்பனை தேடினேன்.
.
என் குப்பனை காணாமல் கண்கள் நனைந்தவண்ணம் வீடு திரும்பினேன்
வீடு திரும்பும்போது குருவாயூரப்பனுக்கு மணி கெட்டுவதாக வேண்டினேன்..
,
என் குப்பனை என்னிடம் ஒப்படைக்க மாட்டாயா என் குழலூதும் கண்ணனே
சந்து திரும்பி வீடுநுழையும்போது குப்பனை கூட்டி வந்தவன் ஒருஅண்ணனே.
 ..
அவன் காலையில் மலேசியா பாண்ட்டுடன் பாத்திருக்கான் என் குப்பனை
அவன் உன்னாஜியின் தம்பி முரளீதர் சிங்க் ,ராம்லாலின் மச்சினன் தான்.

குப்பனை கண்டதும் புரிந்துகொண்டேன் கண்ணனின் திருவிளயாடலை
குப்பனோ கட்டைவிரலை சப்பியவாறு ஓடி வந்தென்னை கெட்டினான் .,

உன்னாஜியின் தம்பி சொல்லித்தான் எனக்கு தெரிந்தது குப்பனின் ஓட்டம்,
ஒரு கரும்பு வண்டியின் பின்னால் குப்பன் ஓடுவதை அவன்  கண்டானாம் .

குப்பனின் பெரியப்பா வசிச்சது பலராம்பூர் சுகர் பேக்டரி காம்பௌண்டில் ,
அங்கே குப்பனும் மற்ற பசங்களும் கரும்பு வண்டி பின்னால் ஒடிப்பழக்கம் .

சிறுவயது பயம் அறியாது இது எவ்வளவு உண்மையான வாக்கியம்,
குருவாயூரப்பன் கருணையால் குப்பனை கிடைத்தது என் பாக்கியம்.
                         
                                                சுபம்.
                                              ----------






Monday, 4 September 2017

சிங்கார சென்னை



சென்னையில் குடிநீர் எல்லாம் வெத்தி போகும் காலம்,
நெருங்கி விட்டதாம் பஞ்சாங்கம் கூறும்  ஒரு ஸ்லோகம் 
.
பொசுக்கும் வெய்யிலில் தாகமெடுக்கும் வேளையில் 
குடிக்க தண்ணீர் இல்லாமல் தொண்டைவறளும் வேளையில் ,

எல்லா ஜீவராசிகளும் கொஞ்சம் கொஞ்சமா காணாமல் ,
போகும் காலம் நெருங்கி விட்டதாம் வெய்யில் தாங்காமல்
..
கடலில் இருந்து வரும் உப்புத்தண்ணீர் பெருவெள்ளமாக ,
வந்து நிறைந்திடுமாம் குட்டை கொளம் எல்லாம் வேகமாக 

தென்னை மரங்கள் வளர்ந்து காடாக மாறிடுமாம் சென்னை
 நாம் இருப்போம் செழிப்பாக இனி சென்னை மாநிலமெல்லாம் 

போய் தொலையட்டும் இந்த மானிட ஜென்மங்கள் எல்லாம்
காட்டுக்குள் ஜனிச்சுடுமாம்  பூச்சியும் புழுக்களும் தானாய் 

புழு பூச்சியாய் பூச்சியோ ஓர் அழகிய பட்டாம்பூச்சியாய் ,
சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியும் மின்மினியா பூச்சியும்

காட்டில் வசிச்சிடும் ஜீவராசிகள் அத்தனையும் குதூகலமாய் 
சின்ன சின்ன ஆசைகளும் சிறகடிக்கும் ஆசைகளுமாய் ,

ஒன்னாய் சேர்ந்து வாழ்ந்திடுவோம்  மனிதனின் மறைமுகமாய் 
ஒற்றுமையுடன் வாழ்ந்திடுவோம் காட்டில் மிக ரஹஸ்யமாய் ,

மனிதனை போல் ஓர்  காண்டாமிருகம் உலகில் எங்குமில்லயே 
அவனை இங்கு வரவிடாமல் தடுப்போம் சூழ்ச்சி ஒன்று செய்து .

தென்னை மரத்தில் ஏறி தேங்காயை பறிப்பவனும்  இல்லையே 
தித்திக்கும் தேங்காய் தண்ணியை குடிக்க மானிடனும்இல்லயே .

ரொம்பவும் துள்ளதே வந்துவிட்டேன் நான் வாநரனாய்  ,
ஏறிடுவேன் தென்னை மரத்தில் ,தேங்காயை போட்டுடுவேன்,

வயறு நிறையே சாப்பிடுங்கள் கொட்டாங்கச்சியை சேமியுங்கள்,
நல்ல குளிர் காலம்  வந்ததும் கொட்டாங்கச்சியை எரியுங்கள் .

கொட்டாங்கச்சி எரியும்போது கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள் 
வானரத்தான் சொல்வதெல்லாம்  நீங்கள் தட்டாமல் கேளுங்கள் .

.நல்லகாலம் வந்திடுமாம் இனி தென்னை மர சென்னையில்,
எல்லா வித மரங்களுடன் மாறிடுமாம் ஓர் சிங்கார சென்னையாய் ..
                                             சுபம் -------------------------

Tuesday, 29 August 2017

"ஸோனாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

"ஸோனாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
======================================


நான் சொல்லும் கதயின் நாயகி"ஸோனா"
அவள் பிறந்து கொஞ்ச நாளில் தாயை பிரிந்தவள்

இநறு அவள் மூன்றாவது பிறந்தநாள் விழாவில்
குளுப்பாட்டி குறியிட்டு கங்காரு கறியும் விழுங்கிநாள்.

அவள் உடம்பு எல்லாம்  வெள்ளை கறுப்பு நிறம் ,
முகமோ பார்ப்பதற்கு ஒரு அழகியின் தரம்..

பாதி மடிந்த தவிட்டு வெள்ளை காதுகளும்,
நெத்தியின் நடுவில் வெள்ளை நிற மச்சவும்,

வஞ்சாமரை போல் வெள்ளை நிற  வாலுடன்
யார் யாரோ வந்தாலும் வரவேற்க்க வந்திடுவாள்.

சின்னஞ் சிறு கொழந்தைகள் என்றால்  அவளுக்குக்கோ உசிரு ,
ஆனால  என்ன" சிதம்பர ரஹஸ்யமமோ" பூனை என்றால் அவள் சத்துரு .

வாக்கிங் போகலாமா என்று கேட்டால் போதுமே  அது ஆனந்த லஹரி
துள்ளி  குதித்து விளயாடி நக்கிவிடுவாள் நம்முகத்தை எஹறி எஹறி.

பேசத்தான் முடியவில்லை வாயில்லா பூச்சி ,
போன ஜென்மத்தில்  செய்த நல்ல கர்மாவின் ஆக்ஷி .

நாயாக பிறந்தாலும் சத்தியமாக இருப்பாள் மனதிற்குள்,
உயிரே போனாலும் தாண்டமாட்டாள் சமையல் அறைக்குள்.

பசி முத்தி போனாலும் மெளனமாக படுத்திருப்பாள்,,
திருட்டு குணம் கிடையாது ,பட்டினியாய் இருந்தாலும

பேயில் (Bay)போயி நீச்சல் அடிப்பாள் மிக மிக சுலபமாக
மாஸ்டருடன் போவாள்  திநமும் வெகுதூரம் கால்நடயாக.

ஆனால் காறி லே  செல்வது அவளுக்கு பிடிக்காத விஷயம்,
என் என்று கேட்டால் ,காறிலேறினால் வாந்தி வரும் நிமிஷமாய் .

கிரொய்டன் பார்க் சென்றால் அவள் முகம் மலரும்,
பார்க்கில் அங்கிட்டும் இங்கிட்டுமாக ஓட்டமா ஓடுவாள்.

சறுக்குமரத்தில்  ஏறி " சர்ர்ர்ர்ர் " என்று சறக்கிடுவாள்
போதும் என்று சொல்லும் வரை சறுக்கிகொண்டே இருந்திடுவாள்.


அத்தனை பேருடன் வாலாட்டி விளையாடுவாள் மௌனமாய் ,
ஆனால் பூனையை கண்டாலோ அவளுக்கு வந்திடுமே ஒரு க்ரோதம்

மௌனம் கலைந்து ஆக்ரோக்ஷமாக கத்தி என்னை இழுத்து ஓடுவாள்,
ஸோநா இழுக்கும் வேகத்தில் என்னால் ஓடத்தான் முடியுமா என்னா?

கால் சறுக்கி,முட்டு ட்விஸ்ட்டாகி "சர்ர்ர்ர்"ந்னு உருண்டு விழுன்தேன் தறயில்,
ஸோனா நிமிஷமாய் ஓடி வந்து என் முகத்தை நக்கிகொடுத்தாள் விரைவில்


 என்னால் தானே நீங்கள் விழுந்தேள் என்று "ஸோறி"சொல்வதுபோல்
நின்றாளே காதை மடக்கி,தலை குனிந்து,வாலை சுருட்டி,கண்ணீருடன்

அதை பார்த்ததும் நான் சட்டென்று எழுந்தேன் நடந்தேன் மிடுக்காக
ஸோனாவும் என்னை பார்த்து மெதுவாக நடந்தாள் என்னுடன் சமத்தாக
                                             
                                                                    சுபம்
                                                                    --------



"ஸோனாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்  "