அந்த காலம் அது ஒரு பழமையான பழக்கம்,
மாதம் ஒரு முறை விளக்கெண்ணை பழக்கம்.
குச்சியும் கையுமாய் பக்கத்தில் நிற்பார் என் அப்பா,
விளக்கெண்ணெயும் எடுத்து வருவாள் என் அம்மா,
விளக்கெண்ணை கண்டால் வரும் எனக்கு வாந்தி
சண்டி ஆட்டம் போடுவேன் ,கைகளால் மாந்தி,
கோபம் கொண்டு அப்பா என் மூக்கை பொத்துவார்,
மூக்கை பொத்தினால் வாயும் திறக்குமே!
எத்தனை கூர்மயாம் அப்பாவின் மூளையும்,,
அப்பாவின் அப்பாவும் இதை தான் செய்தாரோ?
ஊத்துடி சீகிரம் விளக்கெண்ணையை வாயில்,
அம்மாவும் என் வாயில் எண்ணையை ஊத்துவாள்.
ஊத்தின எண்ணை அத்தனையும் நான் துப்புவேன்,,
கோபத்துடன் அடிப்பார்,குச்சியால் என் அப்பா!
திரும்பவும் அம்மா இரண்டு அவுன்சுடன் வருவாள்,
மூக்கை பொத்தி வயத்துக்குள் இறக்குவாள்.
எழுப்பி விட்டு என் முதுகில் தட்டுவாள் ஒருபுறம்,
அழுதுகொண்டே ஓடுவேன் நான் பின்புறம்.
நம் பிரதான மந்தரியும் எனனை போல் தானோ?
வாய் திறக்காமல் படுத்தி எடுப்பாரோ?
சுனாமி வந்தாலும் ,பூகம்பம் வந்தாலும்,
அமுக்காக நிற்கிறார் வாய் திறக்காமலே !!
அதிசயம் தான் போங்க பிரதமரின் கரிசனம் ,
தலைப்பாகும் தாடியுமாய் அவரது தரிசனம்.
வாய் கிழிய கத்தினார்கள்,அண்ணாவும் ராம்தேவும்
உண்ணாவ்ருதம் கொண்டார்கள் தலைவர் இருவரும்,
பிரதமரின் வாயிலோ கொழக்கட்டயா என்ன?
விளக்கெண்ணை தந்திரம் தான் பிரதமரின் மந்த்ரமோ?.
மூக்கை பொத்துங்கள் பலமாக பிரதமரின்,தானாக திறந்திடும் அவர் வாயுடன் குரலும்.
பொத்திய மூக்குடன் பேச்சை துடருவோம்,
பிரதான மந்த்ரியின் வாயை கிளறுவோம்.
,
அண்ணாவும் ராம்தேவும் அம்பு விட்டார்கள்,
ஊழலை ஒழிக்கும் உண்ணாவ்ருதத்தால்
பிரதான மந்தரியும் நமக்கென்ன வம்பென்று
ஊழலை காக்கிறார் மௌன விருதத்தால்.
எப்படி இருக்குதம்மா நம்ம ஊர் செய்திகள்
நம்ம ஊர் ஏழைக்கு இல்லையா வசதிகள்?
நாளுக்கு நாள் விலை வாசி ஏறுது,
எரி வாயு விலையோ வானத்தை தொடுது,
வெக்கமே இல்லையா மந்த்ரி வர்கமே!
பக்கம் பக்கமாய் போடுதே உங்கள் ஊழலை.!
காலணா செலவில்லாமல் ஓடுதே உன் குடும்பம்,
கிடைப்பது எல்லாமே உனக்கு ஓசியில் தானே!
சம்பளமும் அதிகம் கிம்பளமும் யதேஷ்டம்
யோக ஜாதகம் தான் உங்களின் அதிர்ஷ்டம்
வரி கெட்டாமலே பணத்தை குவிக்கலாம்,
ச்விச்ஸ் வங்கி தான் இருக்கவே இருக்கே!
ஜெயம்
28-6-2011
.