Monday, 13 June 2011

பரதனின் விஜயம்

அப்பதோ எனக்கு வயது ஒன்பது,
தெரியவே தெரியாது பயம் என்பது.

என் அப்பா வழக்கமாய்  போடுவார் குடத்தை,
கிணதினில் போடுவார் தண்ணீர் இழுக்க.
கயத்தை கெட்டி குடத்தை போடுவார்,
இடதாலும் வலதாலும் சேர்ந்து இழுப்பார்.

பரதன் என்ற பய்யன் உதவிக்கு வருவான்.
குடத்து தண்ணீரை தென்னைக்கு விடுவான்.
வருவான்  பரதன்  காலிகுடத்துடன்
போவான் திரும்பியும் நிறை குடத்துடன்.

போனார் என்னப்பா  வெத்தலை போட
பரதனும் போனான்  சிகரட் ஊத
இதுதான் தககம் என்று நான் பாத்தேன்,
உடனே குடத்தை கிணத்தினுள் போட்டேன்.

குடமோ பெரிசு ,நானோ  சிறுமி.,
கிணத்தினுள் குடமும் முங்கிவிட்டது
இழுத்தேன் இழுத்தேன் குடத்தை இழுத்தேன்,
பாதிதான் வந்தது,களைத்து போனேன்.

காலில் கயறோ சிக்கி கொண்டது,
எனக்கோ தெரியவில்லை அது.
விட்டேன் கயித்தை,கிணத்தினுள் விட்டேன்
வேகமாய் போனேன் தலை கீழாக .

என் கால்கள் மட்டும் சிக்கியது எங்கோ,
உடம்பும் கைகளும் தலைகீழாக.
பரதா என்று நான் கூச்சல் போட்டேன்,
என் அம்மாவும் குரல் கெட்டு ஓடோடி வந்தாள்
விஷயம்  தெரியாமல்  முழித்து நின்றாள்.

பரதன்  வந்தான் தூக்கினான் என்னை
ஆபத்திலிருந்து  காபத்தினான் உடனே
சீறி எழுந்து  வந்தாளே என் அம்மா ,
கோபத்துடன்  வந்தாளே அடிக்க.

அடிக்க வேண்டாம்  தண்டனை குடுக்க,.
சொல்லுங்கள்  அவளிடம்  சத்தியம் அடிக்க
நூத்தெட்டு தோப்பிகரணம் போடுவேன்,
கிணத்து பக்கமே திரும்பவும் மாட்டேன்.

அம்மாவுக்காக  சொன்னேன் பொய்யை
ஹுக்கியும் நூத்தெட்டு போட்டாச்சென்று .

நானா போடுவேன் நூற்றெட்டு  ஹுக்கி,
அம்மாவை எமாத்திவிட்டேன் நான் சுட்டி. .

பரதன் வார்த்தைக்கு  மதிப்பு  கொடுத்தாள்
தண்டனை தராமல் விட்டு விட்டாள்.
நான் தான்  பயன்தான்குள்ளி அல்லவே ,
பயம் என்பது அறியாதத ஒன்பது.
        
                   ஜெயம்
                   1-6-2011

No comments:

Post a Comment