Monday, 13 June 2011

விளையாட்டு சண்டை

        
என் பெரியப்பா வீட்டு திண்ணை, நீளமான திண்ணை,
நானும்  என் பங்கஜமும்  பாண்டியாடும் திண்ணை.

பாண்டியாடும்போது வரும் ஆஹா நர்வாசனை ,
முருங்கக்காய் சாம்பாரும்,இடிச்சக்கை தொரனும்.

யார் அதிகம் சேகரிப்பாள்,கல்சட்டி துண்டுகள்,
கோடு போட வேண்டுமே பாண்டி ஆடும் பொது.

அம்மாவுக்கு  தெரியாமல்  உடைப்பேன் ஒரு சட்டியை,
கோடுபோட்டு ஆடவெக்கும் மாக்கோல் கல்சட்டியை.

நாளை ஆட வரும்போது  மாகல்லுடன்  வருவேன்,
நீயும் நாளை வரும்போது மாகல்லுடன் வருவாய்.

சபதம்  செய்து ரெண்டுபேரும் ஆர்வத்துடன் பிரிந்தோம்.
மறுநாள் வீண்டும் சந்தித்தோம் ஆளுக்கு அஞ்சு  கல்லுடன்.

நீ  உன் கல் எடுக்கவேண்டும் முதல் கோடு போட,
முடியவே முடியாது இது எங்கள் வீட்டு திண்ணை.

ரெண்டுபேரும் சண்டை போட்டு முடியை இழுத்து கொண்டோம்,
என் மாக்கல் எல்லாம் எடுத்து சென்று கிணத்தில் போட்டு விட்டாள்.

செய்வதறியாமல் கிணத்தை  எட்டி எட்டி பார்த்தேன்,
வருத்தம் தாங்காமல் வாய் பொத்தி நின்றேன் .

பழி வாங்க நான் அவளை கோணங்கி காட்டினேன்,
ஜோராக வந்து  என்னை கடித்து விட்டு சென்றாள்.

அழுதுகொண்டே அம்மாவிடம்   கோளு சொல்ல போனேன்
அம்மாவோ காத்திருந்தாள் என்னை அடிப்பதற்காக.

ஆவி வந்த கல்சட்டியை உடைத்தது  யாரோ
ஓடி வந்து என்னிடம் நீ கோள் சொல்கிறாயா
வாடி அம்மா சீமாட்டி உனக்கு  பூசல் உண்டு
ஏண்டி அம்மா கல்சட்டியை உடைத்து விட்டு போனாய் .

நீலி ஆட்டம் போடுறாயா நல்லவளை  போல
கல்சட்டி இல்லாமல் கொழம்பு  வைப்பது எப்படி?

அப்பா வாந்தால் கொழம்பில்லாமல்  சமாளிப்பது  எப்படி ?
அப்பா கோபம் தெரிஞ்சிருந்தும் செய்கிறாயே  இப்படி.

அம்மா அவள் கடித்து விட்டாள் என் வயத்தை பாரு
வேணம் கட்டைக்கு வேணம் அது கடவுள் தந்த சிக்ஷை .

போரும் அம்மா போரும் உன் கல்சட்டி புராணம்,
என்னைவிட கல்ச்சட்டிதான் உனக்கு பிரதானம்.

மாக்கல்  அத்தனையும் , கிணத்தில் போன சங்கமம்,
உனக்கென்ன தெரியும் அம்மா என்னுடைய சங்கடம்.

போடி பொண்ணே நோசபுழுக்கே கோடி புண்யம் உண்டு
நல்ல புத்தி  தரணம் என்று சாமியை  வேண்டு .

ஜெயம்
30-5-2011

No comments:

Post a Comment