Tuesday, 21 June 2011

சாபம்


          
           

ஒரு தாய்க்கு   நான்   சேயாக,பிறந்தேன்,
ஒரு சேயிக்கு நான் தாய் ஆகி விட்டேன்.

தாயும்  சேயுமான உலகம் ஒரு மாயை தான்
மாயையில் மலைபோல் தேவைகள் உண்டு.

தாய் நாட்டை விட்டோம் ,பிற நாட்டில் வந்தோம்,
பிறந்த நாள் கொண்டாட்டமோ தாய் ஹோட்டலில்.

எல்லோரும் விரும்புவதும் தாய் சாப்பாடு தான்.
உப்பில்லா பண்டங்கள்,தேங்காய் பாலுடன்.
காரவும் இல்லை,புளிப்பும் இல்லையே,
வேகாத காயுடன் ,தாளித்து கொட்டாமல்
பார்த்தாலே பசி தீரும் வருவதை கண்டால்.

என்னவோ தெரியலை,எனக்கு மட்டும் ஏனோ ?
உமிநீர் ஒழுகுது சரவணாவை நினைத்தால்.

வாரம் ஒரு முறை சரவணாவில்செல்வேன்,
பழமுதிர் சோலையில் காய் வாகியப்பின்,.

 சோளா  பட்டுரா  குறுமாவுடன் ஒரு ப்ளைட் ,
ஸ்ட்ரோங் ஆன பில்ட்டர் காபியும் ஒரு கப்.

மிடுக்குடன் நடந்தேன் பைகளும் ஏந்தி,
பிடுங்கி எடுத்தார்கள் ஆட்டோவும் உந்தி.

ஏறுங்கள்  தாயே வயதாகி விட்டதே,
சொல்லுங்கள் தாயே எங்கே போகணும்?

தாருங்கள் தாயே உங்கள் இஷ்டப்படியே,
மினிமம்  கூலி ரூபாய் ஐம்பது மட்டுமே.

 வந்தாகி விட்டதே  நான் பாதி தூரம்,
 நடந்தே போகிறேன்,மிச்சம் தூரமும்,

அஞ்சு ரூபாய்க்கு வருவையா ஆட்டோ ?
அதிகமாய் யாரையும் ஏத்தவும் மாட்டாய்.

போடி பாட்டியம்மா சாவு க்ராக்கியே
ஆட்டோ என்னா உன் பாட்டனின் சொத்தா?

அஞ்சு ரூபாய்க்கு எவனடி ஏத்துவான்?
நெஞ்சத்தில் ஈரம் இருக்குதா உனக்கு?

கொளுத்தும் வெய்யிலில் போயேன் நடந்து,
மயங்கி விழுந்தால் எனக்கென்ன வந்தது!

உன்னுடன் பேசி ஏன் கிராக்கியும் போச்சு,
கொள்ளி பிசாசே நீ எக்கேடும் கெட்டு போ.

அவனுடன் பேசி வெய்யிலும் மூத்தது,
திரும்பவும் எனக்கு பசியும் எடுத்தது.

நடந்தேன் வேகமாய் கால்களை நீட்டி,
சப்பலும் அறுந்தது கல்களில் தட்டி.!

காய்கறி பையுடன் ,சப்பலும் கையுமாய்,
வீட்டில் நுழைந்தேன் மயங்கி விட்டேன்.

விழித்து கொண்டதும் நினைத்து பார்த்தேன்,
ஆட்டோககாரனின் சாபமோ என்னவோ!


ஜெயம்.
22-6-2011

No comments:

Post a Comment