Monday, 13 June 2011

ராமுவின் துணிச்சல்

ராமுவின் துணிச்சல்


சூர  புலி ராமசந்திரன்  என்னுடைய தந்தை,
ராமு  என்று செல்லபெயரால்  அழைப்பாள் என் பாட்டி.
ஊரே நடுங்கும் எந்தன்  தந்தையின்  குரல் கேட்டால்,
நடுநிசியில் திருட வரும்  திருடனும் நடுங்குவான்.

வெத்தலை  பாக்கு போடும் பழக்கம் உண்டு என் தந்தைக்கு,
பாக்குடன் புகையிலை, சேர்த்து போடுவார் என் தந்தை.
ஓசியில்  வெத்தலை போட வரும்  நண்பர்களும்  உண்டு
வம்பு பேசி போகும்போது கையில் எடுத்தும் செல்வார்கள்.

பக்கத்து வீட்டு மாமா மூச்செறக்க வருவார்,
சட்டென்று தந்தையிடம் ஓடிவர சொல்வார்.

அவர் தோட்டத்தில் பார்த்தாராம் பச்சிலை பாம்பொன்றை,
உடனடியாக வந்து அதை சாகடிக்க வேண்டுமாம்.

பாம்படிக்கும் வீரனாச்சே என்னுடைய  தகப்பன்,
பாம்பை பிடிக்க விரைவார் கம்புடன் என் தகப்பன்.

கம்பெடுத்து  பாம்பின் தலையில் உன்னம் பார்த்து அடிப்பார்,
பாவம் அது கண் இருண்டு மயக்கம் போட்டு விழுமாம்.

பாம்பின் வாயை பிளந்து துணிச்சலாக விஷ பல்லை காட்டுவார்,
இன்னம் இரண்டு அடி அடித்து முழுக்க சாவடிப்பார்.

பாம்பை தூக்கி குச்சியாலே  மேலே வீசி எறிவார்,
தெருவில் போகும் அய்யர் தலையில் பாம்பும் போய் விழுமாம்,

பாம்பை பார்த்த அய்யரோ ,பயந்து நடுங்கினாராம்.
வேடிக்கை பார்த்த என் தந்தையோ பொட்டி சிரித்தாராம்.

வேண்டாமடா ராமு  உனக்கு இந்த விஷ பரீக்ஷை,
நாகதோஷம் வந்தால்,நமக்கு இல்லை ரக்ஷை.

பாம்பின் சாபம் போல்லாத்ததப்பா
குடும்பத்துக்கு  அது மிக சாபமப்பா.
ஜெயம் .
14-6-2011






.

No comments:

Post a Comment