Monday, 13 June 2011

ஹெல்மெட்

 ஆறாய் பெருகுதம்மா என் கண்ணுநீர்,
 தவறாகி விட்டதம்மா என் கூட்டண்ணி
  நம்பினேன் நண்பர்களின் பின்னணி ,
  எமாத்திவிட்டார்கள் மொத்தமாய்.

விடமாட்டேன்  நான் என் ராசாத்தி மகளை,
காபாத்த  வந்திடுவேன் நான் அவளை,
அஞ்சாமல் போராடுவேன்  சுப்ரீம் கோர்டினில்
வாதாடி  ஜெயிச்சூடுவேன்  இந்த கேசிநில்,.

விடமாட்டேன் தர்சமயம் கூட்டணியை,
விட்டால் ஒட்டிக்கும் இரட்டை இலை,
கழுகுபோல் வட்டமிடும் பச்சை இலை.
மறைந்திருந்து  தாக்கும் சூழ்நிலை.

என்னம்மா செய்வேன் என் கனிமொழியே?
உன் துன்பங்கள் அத்தனையும்  ஒழிய , சொல்லுவார் எவரும் இல்லையே ஒரு வழி,
கறுப்பு கண்ணாடிக்குள் துடிக்குது என் விழி.

தேவையா நமக்கு  இந்த சோதனை,
குடும்பத்துக்குள் இத்தனை ரோதனை,
அடுத்து நான் செய்வதும்  ஒரு சாதனை,
பொறுத்திருந்து பாருங்கள் அத்தனையும்.

நேராக சென்றிடுவேன் முதியோர் இல்லம்,
என் மனைவிகள்  இருவரும் தருவார்  ப்ரதி பலம்,
மக்களை பெத்த மனமே மத்தளம் கொட்டு,
உன் தந்தை கலைஞ்சருக்கோ இரட்டை குட்டு.

தாங்குமா தந்தையின்  இந்த சொட்டை தலை,
ஓங்கி குட்டும் உன் தாய்க்களின் கலை,
எங்கு படித்தார்களோ கறாத்தை கலை,
எனக்கு தெரியாமலே போட்ட வலை.

தாங்குவதற்கு  ஓர்  ஹெல்மெட் வேண்டுமே ,
மண்டை ஒடயாமல் பாதுகாக்க வேண்டுமே
தொண்ணூறு வயதிலும் இரட்டை மனைவியா?
அனுபவம் சொல்லுதே நான் ஒரு பாபியாய்

இந்த பாபிக்கும் உண்டு கடவுள் வாஸனை.
யாருக்கும்  தெரியாமல் கும்பிட்டேன் ஈசனை.
ஈசனே நீ எனக்கு திசை ஒன்று காட்டுவாய்.
திக்கற்று நிற்கும் மகளையும் கார்ப்பாய்

தூங்குவதற்கு எனக்கொரு இடம் வேண்டும்,
எங்கே நிம்மதி,எங்கே நிம்மதி,அங்கே எனக்கொரு இடம் வேண்டும்.
ஜெயம்
13-6-2011

No comments:

Post a Comment