Monday, 13 June 2011

மோக்ஷம்




"'நான் " என்ற   அஹந்தை நம்மிடம்  இருந்தால
மோக்ஷம்  என்ற வார்த்தைக்கு அர்த்தமே இல்லை.

எத்தனை பிறவி ,எத்தனை  பிறவி ,பிஞ்சாகவும் பழமாகவும் ,
எத்தனை ஜன்மம்  எத்தனை ஜன்மம் எடுத்தால் நீ  தருவாய் மோக்ஷம்
 எப்படி  வாழ்ந்தால்  தருவாய் மோக்ஷம்,
கடுவுளே சொல் குறைந்த பக்ஷம்.

நிச்சயம்  உண்டு   உனக்கு  மோக்ஷம்  ,
கொஞ்சம்   கொஞ்சமாய்  உன்  அஹந்தையை  துறந்து ,
நீ   ஒரு   ஞானியாய்  பழமாய்  வாழ்க்கையில்  கலந்து,
அத்தனை  பேருக்கும்   நன்மையை   செய்து  எளிமையாய்  வாழ்ந்து ,
உண்மையை  பேசி,கடவுளை  நம்பி  அஹிம்சையுடன் பகிர்ந்து ,
இரவும்  பகலும் , கடவுளை நினைந்து
ஏங்கி உருகி பிரார்த்தனை  செய்து
மனசா வச்சா, கர்மணா,ஒரு பிராணிக்கும் த்ரோஹம் செய்யலால் ,சதா உன்னை தியாகம் செய்தாய் அனால்  கிடைக்கும் மோக்ஷம் ,என்கிறார் இறைவன்.
அனால் அது , உன் கர்மத்தை    பொறுத்தது. ஏதாவது ஒரு பிறவியில் நீ ஒரு  மகானாய் பிறந்து,தன்னிலம்  இல்லாமல் ,    பிறர்க்காக உழைத்து ,சரீரம் "நான்"   அல்ல   "நான் " என்றது  ஆத்மாதான்,இந்த உண்மையை ,நீ அறிவாய் அனால்              அடையுவாய் மோக்ஷம், உடனே தருவேன்.


அஹந்தையை துறப்பது முடியுமா நம்மால்?
இந்த சம்சார ஸாகரத்தில் முழுகிய நம்மால்,
நான் என்ற நினைப்பு அனுதினம் வந்து ,
ஆயிரம் தடவை நம் புகழ் பாடி
நான் அதை  செய்தேன்  நான் இதை செய்தேன்,பாராட்டு பெற்றேன் .

நம் புகழ் நாமே பாராட்டி  பேசுவோம்,
பிறர் அதை கெட்டு அசை போட வேண்டும்,
நீ என்ன செய்வாய்  அது உன் ச்வயநிலம் .
"நான்" என்ற அஹன்தையின்  தனி நிறம்.

வாரம் ஒரு முறை இருந்து பார் மௌனம்,
அப்போது தெரியும்  மௌனத்தின் தனி  பலம் ,
மௌனம் காப்பது நல்ல உடல் பயிற்சி ,
"சும்மா இரு என்பது ரமணரின் பயிற்சி ,
ரமணரின் வார்த்தை உபதேச ஸாரம்,
எல்லா யுகத்திலும் நிலைத்த ஸாரம்.
ஜெயம்
24-5-2011

No comments:

Post a Comment