ஜலக்.ஜலக்.பாயல் பாஜே,எங்கிருந்து வருது இந்த சலங்கை சத்தம்?
என் அம்மாவின் திரு முகம் பார்க்க நான் போடும் கொலுசு சத்தம்
குட்டியும் கட்டையும் குளிர் அறியாது என்பது உண்மையா?
குட்டி தன் கால்களால் தொட்டிலில் அடிப்பதில் தெரியுமே!
காலையில் எழுந்ததும் கால் அடிப்பது என்னுடைய மந்திரம்,
அம்மாவை என்னருகில்,வரவழைக்கும் என்னுடைய தந்திரம்.
குளிராம் குளிரு,என் கால்களில் சாக்ஸ் போடவேண்டுமாம்,
பாழாய் போன குளிர் என்னை என்னதான் பண்ணிவிடுமாம்?
குல்லாவும் மொஜாவும் போட்டாத்தான் பாஷணா?
போட விடமாட்டேன் பார் ஏன் அம்மாவை சுலபமா.
ப்ரீ ஆக விட்டாத்தான் என்னவாம் இந்த அம்மாக்கு,
வீட்டில் தான் எப்பவும் ஏசியும் ஹீட்டறும் ஓடுதே!
குல்லாவை போட்டால் நான் கைகளால் பிடிங்கிடுவேன்
ஒரு மோஜா போட்டதும் மறு மோஜா தெறிச்சிடும் காற்றிலே.
போட்டத்தையே போட்டு அம்மாவும் களைத்திடுவாள்
இதுதாண்டா சாக்கு என்று கட்டை விரலை சப்புவேன்.
கட்டை விரல் திடீர் என்று வாயில் இருந்து நழுவி விடும்,
பொத்தென்று கைகால் விழ,பேந்த பேந்த முழித்திடுவேன்,
ட்ரை ட்ரை ட்ரை எகைன்,அம்மா சொல்லி கேட்டிருக்கேன்,
வீண்டும் கால்களை தூக்கிவிட்டு கட்ட விரலை பிடித்திடுவேன்.
பிடித்த விரலை விடாமல் நான் பவிழ வாயில் நுழைத்திடுவேன்.
சுவாரஸ்யமாக சப்பும்போது குடும்பமே என்னருகில் கூடிவிடும்.
கிளிக் ,கிளிக் கட்டை விரலை சப்பும் போஸ் காமறாவில் பதிஞ்சாச்சு,
இனி ஈமைலாக இந்த போஸில் நான் உலகம் சுற்றும் வாலிபையோ?
அய்யோ அம்மா வெட்கக்கேடு அனுப்ப வேண்டாம் யாருக்குமே,,
பெரியவள் ஆனால் அதை பார்த்து என் மானமெல்லாம் போய்விடுமே!
போடாதே என் போட்டோவை பெயஸ் புக் என்றும் டைம் பாஸில்,
வம்பை தவிர ஒன்றுமே இல்லையே கண்டறாவி இந்த பெயஸ் புக்கில்.
போடி போ பைத்தியக்காரி,பத்தாம்பசலியைப் போல் பேசாதே ,
பள்ளிக்கு போகும் பாப்பா கூட டச் ஸ்க்ரீன் கேக்கும் காலமிது.
கால சக்ரம் மாறும் போது நடப்பதெல்லாம் ஓர் அதிசயமாம்.
தேசம் போல வேஷம் போட்டால் தேடி வருவது அத்ரிஷடமாம்
அம்மா தாயே விட்டு விடு என்னை என் மனம் போகும் போக்கிலே,
நான் விரும்பும் வாழ்க்கை எல்லாம் என் எள்ளுபாட்டியின் ஈறாவிலே.
மாட்டை கெட்டி,பால் கறந்து ஒரு கிராமதில்த்தான் வாழுவேன் நான்,
பச்சை மரமும்,பிச்சை கொடியும் கொஞ்சும் கிளியும் இருக்குமிடம்.
மாங்காய்,தேங்காய்,பலாக்காய் தொங்கும் இடமே எனக்கு சொர்க்கம்,தான்,
பாத்தி போட்டு கீரை வெதச்சு ,காய்கறி தோட்டம் போட்டுடுவேன் நான்.
வேண்டாம் கண்ணே வீண் பிடிவாதம் தோட்ட கனவை மறந்துவிடு,
தோட்டம் போட்டு கொட்டை கெட்டும் மன கோட்டை சிதைந்துவிடும்.
மாட்டேன் தாயே விடமாட்டேன் நான் பசுமை நிறைந்த கிராமத்தை,
கூடிய சீக்ரம் தொடங்கிடுவேன் நான் புத்தம் புதிய பழமுதிர் சோலை!!!
சுபம்
--------