Tuesday, 19 July 2011
ஆனந்த சிலந்தி.
குறுக்கும் நடுக்கும் ஓடுதாம் சிலந்தி பூச்சி
மிகவும் சிறப்பாக பின்னுதாம் நெட்வர்க்.
வலையின் அமர்ந்து செய்யுதாம் த்யானம்,
கண் ஒன்றை மூடி மறு கண்ணை திறந்து,
வலை வீசி காக்குதாம் இரையை பிடிக்க,
தானாக சிக்குகிறது சிலந்தியின் இரைகள்.
மாட்டித்தாம் இரைகள் ஆயிர கணக்கில்,
சிலந்திக்கோ கொண்டாட்டம்,இரைக்கோ திண்டாட்டம்.
கெட்டி போட்டுதாம் ஆண் பெண் பாராமல் ,
உடம்புக்கே ஸ்வந்தமான பசையான நூலால் .
வலையில் சிக்கி தவிக்குதாம் இரைகள்,
மாட்டி கொண்டோமே இனி என்ன செய்வது?
ஆனந்தம் பரமானந்தம்,சச்சிதானந்தமாம்,
சிலந்தியின் அவதாரமோ நித்யானந்தனும்?
பவனி வருகிறான் ரத்ன சிம்ஹாசனத்தில்
கையில் ஒரு தண்டமும்,வாயெல்லாம் பல்லுமாய் .
தங்க கிரீடமும்,பட்டு வேஷ்டியும் தரித்து,
அசட்டு சிரிப்புடன்,பெண்களை பார்ப்பதும்,
அய்யோ கடவுளே அருவெறுப்பா இருக்குதே
சிறையில் கிடந்தும் திருந்தவில்லையே என்?
குண்டலினி சக்தியால்,மிதக்க வைக்கிறேன்,
வஜ்ராசனத்தில் அமர்ந்து குதியுங்கள் ஷீடரே
விரித்த முடியுடன் ஆவேசமாய் ஆடுங்கள்,
கழுத்து சுளுக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.
தவக்களை போல் குதித்து வாருங்கள்,
குதூகலத்துடன் என் பக்கம் வாருங்கள்,
குண்டலியின் சக்தி உங்களுக்கே தெரியும்.
கங்காருவை போல் உயரத்தில் குதியுங்கள்,
அத்தனை பேரையும் ஆலிங்கனம் செய்கிறேன்.
வானில் மிதக்கலாம் , பறவை போல் பறக்கலாம்,
குண்டலினி சக்தியால் சொர்கமே போகலாம்.
அத்தனை பேருக்கும் அனுபவம் ஆனந்தம்,
ஒத்தர் ஒத்தர் ஆக என் அறைக்குள் வாருங்கள்.
காட்டுகிறேன் என் ஞான திருஷ்ட்டியால்,
உங்களுக்கெல்லாம் என் விஸ்வரூபத்தை.!!
மக்களே உங்களுக்கு புத்தியே இல்லையா?
ஏமாந்து போகவே ஜன்மம் எடுத்தீர்களா?
காவி அணிந்தவர் கடவுளா என்னா?
உதர நிமித்தம் பஹு கருத வேஷமாம்.
ஏமாந்த மக்கள் இருக்கின்ற காலம்,
எமாத்துவதற்கே இந்த காவி வஸ்த்ரம்.
விழித்து கொள்ளுங்கள் மக்களே சீக்ரமாய்,
கிழித்து விடுங்கள் அவன் போலி வேஷத்தை
ஜெயம் .
20-7-2011.
Tuesday, 12 July 2011
தூளி .
பனிமழை பெய்யுது இலையெல்லாம் முத்துக்கள்.
கதிரவன் உதித்ததும் வைரம் போல் மின்னுது.
காலை வேளையில் தோட்டத்தில் சென்றேன் ,
ஜில் என்ற காற்றுடன் காலாற நடந்தேன்.
முடியும் பறக்குது,கண்ணை மறைக்குது,
கதிரவன் வந்ததும் தென்றலும் மறையுது.
காலாற நடந்தேன் தெருவோரமாக,
மண்தோண்டி டிராக்டரும் வந்து விட்டது.
அஸ்திவாரம் போட்டு ,அடுக்கு மாடி கெட்ட.
பெரியாள் நாலு பேர்,சித்தாள் ஆறுபேர்.
சோத்து மூட்டையுடன் வந்து விட்டார்கள்.
இடுப்பில் குழந்தையும் தலையில் பாண்டுமாய்
சோத்து தூக்குடன் வந்தார்கள் சித்தாள்.
கடப்பாறையும் ஏந்தி,தலைப்பாவும் சுத்தி,
பீடியும் கையுமாய் வந்தார்கள் பெரியாள்.
போடுடா மணலை,சிமென்ட்டுடன் கலந்து ,
தண்ணீரை ஊத்தி கலவையை கூட்டுடா.
மம்மட்டியுடன் வந்தான் சிறுவன் ஒருவன்,
மிடுக்குடன் கலந்தான் கலவையை களிப்பாக ,
சித்தாளை கூப்பிட்டு ,தலையில் வைக்கிறான்,
சித்தாளும் பாண்டுடன் படி ஏறி செல்கிறாள்.
பக்கத்தில் மரகொம்பில் தொங்குதாம் ஒரு தூளியும்.
பச்சை குழந்தை ஒன்று தூங்குதாம் தூளியில்.
கொளுத்தும் வெய்யிலில் ,மரத்தின் அடியில்,
தௌட்டு கலர் நாயொன்று காக்குதாம் காவல்.
குழந்தை அசைந்தால்,நாய் வாலை அட்டுமாம்.
குழந்தை அழுதால் நாயும் அழுமாம் வானத்தை நோக்கி.
நாயின் ஊளையை கேடடு,மார் கெட்டி விடுமாம்,
சித்தாளும் வந்து தாய் பால் கொடுப்பளாம்.
குடிப்பதை நிறுத்தி சிரிக்குமாம் குழந்தை.
கைகளை தூக்கி நாயுடன் விளையாடுமாம்,
நாயும் குழந்தையை ஆசையுடன் நக்குமாம்.
சட்டென்று சித்தாளும் மூடுவாள் முந்தானையை,
குழந்தையை தூக்கி போடுவாள் தூளியில்.
தூக்கில் இருந்து சோத்தையும் எடுப்பாள்,
நாய்க்கு முதல்லே சோத்தை போடுவாள்.
மிச்சம் உள்ளதை அவளும் தின்பாள்.
ஏழை குழந்தைகள் வளரும் இவ்விதம்,
வெய்யிலும் மழையும் பொருட்படுத்தாமல்.
சேத்திலும் புரளும்,மணலிலும் உருளும்
மற்று பசங்களுடன் சண்டையும் போடுமாம்.
தாய் திரும்பும் வரை வேறு என்ன வேலை?
படிப்பதும் இல்லையே பள்ளியில் சென்று.
தீவர வாதிகள் ஆக பிறப்பதும் இல்லை,
சூழ்நிலை ஒன்று தான் காரணம் அதற்க்கு.
கிடைப்பதில்லை தாய் தந்தையின் அன்பு ,
வீட்டில் எப்பவும் சண்டையும் சச்சருவும்.
கும்மாளம் அடிக்கிறான் குடித்து விட்டு ,
அப்பனாம் அவன் ஸ்வய போதமில்லாமல்.
வீட்டைவிட்டு ஓடுறான் பையனும் ஒருநாள்
தீவர வாதியின் பிடியில் சிக்குகிறான்.
அறியாத வயதில் இரையாகி விடுகிறான்,
தாய் தந்தையின் ஞாபகமே இல்லாமல்.
பணமும் பயிற்சியும் சேர்ந்தே கிடைக்குது
துப்பாகியால் எப்படி சுட வேண்டும் என்று.
ஒருநாள் எதிரியின் கைதியாகி விடுகிறான்,
தூக்கு தண்டனைக்கு ஆளாகி விடுகிறான்.
தூளியில் தொங்குகிறான் பச்சிளம் வயதினில் ,
தூக்கில் தொங்குகிறான் தீவரவாதி ஆனபின்
குடிபோதையில் இருந்த ராமராஜரும்
ஒய்வு பெற்ற ஒரு ராணுவ வீரராம்.
சுவர் ஏறி குதிச்ச சிறுவன் தில்சனை
காரணம் இல்லாமல் சுட்டு கொல்கிறார்.
சின்னம் சிறு பய்யன் தில்சன் என்றவன்,
இரையாகி விட்டான் துப்பாக்கி சூட்டுக்கு.
துப்பாக்கியை தூக்கி கூவத்தில் எறிந்தார் ,
தில்சனின் சிநேகிதன் பார்த்துவிட்டான் அதை.
மாட்டினார் போலீசில் ,கைதாகி விட்டார்,
தூக்கில் தொங்குவார் அவர் கூடிய சீக்ரம்.
கத்தினாள்,கதறினாள் தன் மகனுக்காக,
பொணம் ஆகி விட்டானே தன் மகன் என்று.
பதாம் பருப்புடன் வீட்டிற்கு வருவான்,
பள்ளியை விட்டு வீடு திரும்பும் போது.
துள்ளி குதிச்சு அள்ளி அள்ளி கொடுப்பான்.
தூளியில் போட்டு தாராட்டிய என் மகன்.
ஜெயம்
13-7-2011.
பணமும் பயிற்சியும் சேர்ந்தே கிடைக்குது
துப்பாகியால் எப்படி சுட வேண்டும் என்று.
ஒருநாள் எதிரியின் கைதியாகி விடுகிறான்,
தூக்கு தண்டனைக்கு ஆளாகி விடுகிறான்.
தூளியில் தொங்குகிறான் பச்சிளம் வயதினில் ,
தூக்கில் தொங்குகிறான் தீவரவாதி ஆனபின்
குடிபோதையில் இருந்த ராமராஜரும்
ஒய்வு பெற்ற ஒரு ராணுவ வீரராம்.
சுவர் ஏறி குதிச்ச சிறுவன் தில்சனை
காரணம் இல்லாமல் சுட்டு கொல்கிறார்.
சின்னம் சிறு பய்யன் தில்சன் என்றவன்,
இரையாகி விட்டான் துப்பாக்கி சூட்டுக்கு.
துப்பாக்கியை தூக்கி கூவத்தில் எறிந்தார் ,
தில்சனின் சிநேகிதன் பார்த்துவிட்டான் அதை.
மாட்டினார் போலீசில் ,கைதாகி விட்டார்,
தூக்கில் தொங்குவார் அவர் கூடிய சீக்ரம்.
கத்தினாள்,கதறினாள் தன் மகனுக்காக,
பொணம் ஆகி விட்டானே தன் மகன் என்று.
பதாம் பருப்புடன் வீட்டிற்கு வருவான்,
பள்ளியை விட்டு வீடு திரும்பும் போது.
துள்ளி குதிச்சு அள்ளி அள்ளி கொடுப்பான்.
தூளியில் போட்டு தாராட்டிய என் மகன்.
ஜெயம்
13-7-2011.
Saturday, 9 July 2011
புதையல் .
பத்மநாபசாமி கோயில் ஒரு புராதன மந்திர்
அனந்த பத்மநாபன் படுத்திருக்கும் கோலம்,
அனந்த சயனமாக படுத்திருப்பார் விஷ்ணு,
பார்ப்பதற்கே மிகவும் பரவசமான தோற்றம்
வரிசையில் நின்று தான் சுவாமியின் தரிசனம்,
மூன்று வாசல் வழியாக மூர்த்தியின் தரிசனம்.
ராஜாதி ராஜாக்கள் பரித்த நம் கேரளம்,
ராம ராஜ்ஜியம் போல் திளங்கி நின்றது.
வெளிநாட்டுடன் செய்தார்கள் வியாபரம்
முந்திரி பருப்புடன் மற்று மசால் பொருட்களும்
ஏற்றுமதி செய்தார்கள் கப்பலில் சென்று,
ஏலக்காய்,கிராம்பு பட்டையும் ஓமவும்.
இறக்குமதி செய்தார்கள் தங்கமும் வைரமும்,
பலவிதமான பெல்ஜியம் கற்களும்.
வித விதமாக நகை நட்டு செய்தார்கள்,
பத்மநாபஸ்வமிக்கே அர்ப்பித்து விட்டார்கள்.
மார்த்தாண்ட வர்மாவும் பின் வந்த ராஜாவும்,
பத்மநாபாசாமியின் ஆழ்ந்த பக்தர்களாம்.
சிறப்பாக ராஜ்ஜியம் பரித்தார்கள் எல்லோரும்,
பிரஜைகளும் வாழ்ந்தார்கள் குறை ஒன்றும் இல்லாமல்,
பக்தர்கள் எல்லாம் அள்ளி கொடுத்தார்கள்,
விஷ்ணுவின் பாதத்தில் அர்ப்பணித்தார்கள்.
தங்கமும்,வைரமும்,வெள்ளியுமாக,
தங்கத்தால் சிலைகளும்,வைரத்தால் ஹாரங்களும்,
மூட்டை மூட்டையாக தங்க காசுகளும்,
தங்கத்தில் பாத்ரமாம்,வெள்ளி தட்டுகளாம்,
ஆங்கிலேயன் கையில் சிக்காமல் இருக்க.
பாதாள அறைகள் பணிதாராம் கோயிலில்,
ஒவ்வொரு அறையிலும் புதையலை வைத்தாராம்,
இரகசிய பூட்டுடன் அறைகளை மூடினார்.
பல்லாண்டு சூக்ஷித்த புதையல் அத்தனையும்,
பரிசோதனை போட்டுதாம் தற்போது சுப்ரீம் கொடதி !!!
ஒரு லக்ஷம் கோடிக்கு மேல் மதிப்பாம் அதன் விலை,
வைத்த கண் வாங்காமல் பார்க்குதாம் அரசியல் வாதிகள்.
ராஜாக்கள் சூக்ஷித்த அத்தனை பொருள்களும்,
கண்மூடி திறக்கும் முன் மாயமாய் மறைந்திடும்.
ஒரே ஒரு நொடியில் ச்விச்ஸ் வங்கி சென்றிடும்.
லோக்பால் பில்லும் வராமலே போய்விடும்
அண்ணாவை போல் ஒரு தேச த்யாகியின்,
போராட்டம் காணுமா பாரதம் வெற்றியை?
மந்த்ரிகளின் பதவியோ மக்களின் பிச்சயாம்,
தீர்ப்பு அளிப்பதோ மந்த்ரிகளின் சட்டமாம் .
கொள்ளை அடிப்பதற்க்கா மக்களின் வோட்டு ?
உண்மையை சொன்னால் கசக்குமா என்ன?
ஏழைகள் எத்தனை பிச்சை எடுக்கிறார்கள்?
தெருவிலேயே படுத்து தூங்குகின்றார்கள்.
மந்த்ரிகள் அனைவரும் கூத்தடிக்கிறார்கள்.
கன்னியும் கள்ளுமாய் ஹோட்டல் அறைகளில் .
பொது நலம் என்று பணம் பறிக்கிறார்கள்,
ச்வயநலம் மட்டும் தான் மிஞ்சுது உண்மையில் .
உண்மையை சொல்லி விளக்கம் கெட்டால்,
பதவி என்ற பாணத்தால் அடக்குகிறார்கள் மக்களை.
துணிச்சலுடன் முன்வந்து எதிர்க்கும் மக்களை,
கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் இவர்கள்.
ஜாக்ருதை மக்களே மிகவும் ஜாக்ருதை,
நம்பவே கூடாது மந்த்ரிகளின் வார்த்தையை.
பேசி பேசியே கழுத்து அறுக்கிறார்கள்,
வெளி வேஷம் வெள்ளை,அடிப்பதோ கொள்ளை.
அம்சமாக ஒன்றும் செய்வதும் இல்லை,
வம்சத்தின் வ்ருத்திக்கு மட்டுமே லாயக்கு.!!!
ஜெயம் .
10-7-2011
Friday, 8 July 2011
குரோய்டன் பார்க்
ஏன் வீட்டு பக்கத்தில் அழகான பார்க் ஒன்று
வாக்கிங் முடிந்தபின் களைப்புடன் வருவேன்,,
பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பேன்.
நாயுடன் வருவான் வெள்ளையன் ஒருவன்,
கறுப்பு கவர்ஒன்று கையில் சுத்தி இருப்பான் .
வெள்ளையனும் பார்கிலே நாயுடன் ஓடுவான் ,
நாயும் ஓடுமாம்,மிக உத்ஸாகத்துடன்,
திடீரென்று நாயும் நின்றபடியே நிற்குமாம்,
இழுத்தாலும் நகராமல் பிடிவாதம் பிடிக்குமாம்,
குனிந்த தலையுடன் தட்டாமாலே சுத்துமாம் , .
மோப்பம் பாத்து விட்டு அப்பியும் போடுமாம்.
வெள்ளையனும் அஞ்சாமல் கவறுக்குள் போடுவான்,
ஒரு கையில் நாயும் மறுகய்யில் பீயுமாய்,
வெள்ளையன் போவதை வேடிக்கை பார்ப்பேன்.
நாய் வளப்பதெல்லாம் சுலபம் இல்லை இந்நாட்டில்,.
சட்டம் ஒன்று இருக்குதாம் இந்நாட்டு கவுன்சிலில்,
ராத்திரி வேளையில் நாய் குரக்கலாகாது, ,
நாயும் ப்ரீயாக தெருவில் அலைய கூடாது,
நாயின் கழுத்திலே சிப் ஒன்று இருக்குமாம்,
சிப்பிர்க்குள் நாயின் ஜாதகமே இருக்குமாம்..
நாய் தொலைந்து போனாலும் கவலை ஒன்றும் இல்லையே ,
சிப்பிருக்கும் வரை நாய் வீடு திரும்புமாம்..
வீடடுக்கு வீடு கிழவிகள் இருக்கார்கள்,
கிழவிகள் எல்லாம் ஒண்டி கட்டைகள்.
நாய் ஒன்று இருக்கும் ,கிழவியின் வீட்டில்,
நாய் மட்டும் தான் கிழவியின் காவலன்.
கிழவிகள் நாயுடன் வாக்கிங் போவார்கள்,
கிளப்பில் சென்று அங்கே பௌலிங் ஆடுவார் .
கிழவிகள்க்கெல்லாம் பாய் ப்ரெண்டும் உண்டு.
எல்லோரும் சேர்ந்து கும்மாளம் அடிப்பார்
கிளப்பிலே சாப்பிட்டு குடிப்பதும் வழக்கம்
கிழவிகள் எல்லாம் போவர்கள் பார்லரில்,
பேசியல் செய்து பளிச்சென்று வருவார்கள்.
நாய்களும் பிரென்சுடன் விளையாடி பழகும்,
யஜமானர் வந்ததும் அவருடன் போய் விடும்.
நாயை குளுப்பாட்டி நட்டுள்ளே வச்சாலும்
பீ தின்ற போகாதாம் இந்த ஊர் நாய்கள்.
ஜெயம்
8-7-20
Subscribe to:
Posts (Atom)