Friday, 8 July 2011
குரோய்டன் பார்க்
ஏன் வீட்டு பக்கத்தில் அழகான பார்க் ஒன்று
வாக்கிங் முடிந்தபின் களைப்புடன் வருவேன்,,
பெஞ்சில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பேன்.
நாயுடன் வருவான் வெள்ளையன் ஒருவன்,
கறுப்பு கவர்ஒன்று கையில் சுத்தி இருப்பான் .
வெள்ளையனும் பார்கிலே நாயுடன் ஓடுவான் ,
நாயும் ஓடுமாம்,மிக உத்ஸாகத்துடன்,
திடீரென்று நாயும் நின்றபடியே நிற்குமாம்,
இழுத்தாலும் நகராமல் பிடிவாதம் பிடிக்குமாம்,
குனிந்த தலையுடன் தட்டாமாலே சுத்துமாம் , .
மோப்பம் பாத்து விட்டு அப்பியும் போடுமாம்.
வெள்ளையனும் அஞ்சாமல் கவறுக்குள் போடுவான்,
ஒரு கையில் நாயும் மறுகய்யில் பீயுமாய்,
வெள்ளையன் போவதை வேடிக்கை பார்ப்பேன்.
நாய் வளப்பதெல்லாம் சுலபம் இல்லை இந்நாட்டில்,.
சட்டம் ஒன்று இருக்குதாம் இந்நாட்டு கவுன்சிலில்,
ராத்திரி வேளையில் நாய் குரக்கலாகாது, ,
நாயும் ப்ரீயாக தெருவில் அலைய கூடாது,
நாயின் கழுத்திலே சிப் ஒன்று இருக்குமாம்,
சிப்பிர்க்குள் நாயின் ஜாதகமே இருக்குமாம்..
நாய் தொலைந்து போனாலும் கவலை ஒன்றும் இல்லையே ,
சிப்பிருக்கும் வரை நாய் வீடு திரும்புமாம்..
வீடடுக்கு வீடு கிழவிகள் இருக்கார்கள்,
கிழவிகள் எல்லாம் ஒண்டி கட்டைகள்.
நாய் ஒன்று இருக்கும் ,கிழவியின் வீட்டில்,
நாய் மட்டும் தான் கிழவியின் காவலன்.
கிழவிகள் நாயுடன் வாக்கிங் போவார்கள்,
கிளப்பில் சென்று அங்கே பௌலிங் ஆடுவார் .
கிழவிகள்க்கெல்லாம் பாய் ப்ரெண்டும் உண்டு.
எல்லோரும் சேர்ந்து கும்மாளம் அடிப்பார்
கிளப்பிலே சாப்பிட்டு குடிப்பதும் வழக்கம்
கிழவிகள் எல்லாம் போவர்கள் பார்லரில்,
பேசியல் செய்து பளிச்சென்று வருவார்கள்.
நாய்களும் பிரென்சுடன் விளையாடி பழகும்,
யஜமானர் வந்ததும் அவருடன் போய் விடும்.
நாயை குளுப்பாட்டி நட்டுள்ளே வச்சாலும்
பீ தின்ற போகாதாம் இந்த ஊர் நாய்கள்.
ஜெயம்
8-7-20
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment