Saturday, 9 July 2011

புதையல் .

         
          

பத்மநாபசாமி  கோயில் ஒரு புராதன மந்திர்
அனந்த பத்மநாபன் படுத்திருக்கும் கோலம்,

அனந்த சயனமாக படுத்திருப்பார் விஷ்ணு,
பார்ப்பதற்கே மிகவும் பரவசமான தோற்றம்

வரிசையில் நின்று தான் சுவாமியின் தரிசனம்,
மூன்று வாசல் வழியாக மூர்த்தியின்  தரிசனம்.

ராஜாதி ராஜாக்கள் பரித்த நம் கேரளம்,
ராம ராஜ்ஜியம் போல் திளங்கி நின்றது.

வெளிநாட்டுடன் செய்தார்கள் வியாபரம்
முந்திரி பருப்புடன் மற்று மசால் பொருட்களும்

ஏற்றுமதி செய்தார்கள் கப்பலில் சென்று,
ஏலக்காய்,கிராம்பு பட்டையும் ஓமவும்.

இறக்குமதி செய்தார்கள்  தங்கமும் வைரமும்,
பலவிதமான  பெல்ஜியம் கற்களும்.

வித விதமாக நகை நட்டு செய்தார்கள்,
பத்மநாபஸ்வமிக்கே அர்ப்பித்து விட்டார்கள்.

மார்த்தாண்ட வர்மாவும் பின் வந்த ராஜாவும்,
பத்மநாபாசாமியின் ஆழ்ந்த பக்தர்களாம்.

சிறப்பாக ராஜ்ஜியம் பரித்தார்கள் எல்லோரும்,
பிரஜைகளும் வாழ்ந்தார்கள் குறை ஒன்றும் இல்லாமல்,

பக்தர்கள் எல்லாம் அள்ளி கொடுத்தார்கள்,
விஷ்ணுவின் பாதத்தில் அர்ப்பணித்தார்கள்.

தங்கமும்,வைரமும்,வெள்ளியுமாக,
தங்கத்தால் சிலைகளும்,வைரத்தால் ஹாரங்களும்,

மூட்டை மூட்டையாக தங்க காசுகளும்,
தங்கத்தில் பாத்ரமாம்,வெள்ளி தட்டுகளாம்,

ஆங்கிலேயன்  கையில் சிக்காமல் இருக்க.
பாதாள அறைகள் பணிதாராம் கோயிலில்,

ஒவ்வொரு அறையிலும் புதையலை வைத்தாராம்,
இரகசிய பூட்டுடன் அறைகளை மூடினார்.

பல்லாண்டு சூக்ஷித்த புதையல் அத்தனையும்,
பரிசோதனை போட்டுதாம் தற்போது சுப்ரீம் கொடதி !!!

ஒரு லக்ஷம் கோடிக்கு  மேல் மதிப்பாம் அதன் விலை,
வைத்த கண் வாங்காமல் பார்க்குதாம் அரசியல் வாதிகள்.

ராஜாக்கள் சூக்ஷித்த அத்தனை பொருள்களும்,
கண்மூடி திறக்கும் முன் மாயமாய் மறைந்திடும்.

ஒரே ஒரு நொடியில் ச்விச்ஸ் வங்கி சென்றிடும்.
லோக்பால் பில்லும் வராமலே போய்விடும்

அண்ணாவை போல் ஒரு தேச த்யாகியின்,
போராட்டம் காணுமா பாரதம் வெற்றியை?

மந்த்ரிகளின் பதவியோ மக்களின் பிச்சயாம்,
தீர்ப்பு அளிப்பதோ மந்த்ரிகளின் சட்டமாம் .

கொள்ளை அடிப்பதற்க்கா மக்களின் வோட்டு ?
உண்மையை சொன்னால் கசக்குமா என்ன?

ஏழைகள் எத்தனை பிச்சை எடுக்கிறார்கள்?
தெருவிலேயே படுத்து தூங்குகின்றார்கள்.

மந்த்ரிகள் அனைவரும் கூத்தடிக்கிறார்கள்.
கன்னியும் கள்ளுமாய் ஹோட்டல் அறைகளில் .

பொது நலம் என்று பணம் பறிக்கிறார்கள்,
ச்வயநலம் மட்டும் தான் மிஞ்சுது உண்மையில் .

உண்மையை சொல்லி விளக்கம் கெட்டால்,
பதவி என்ற பாணத்தால் அடக்குகிறார்கள் மக்களை.

துணிச்சலுடன் முன்வந்து எதிர்க்கும் மக்களை,
கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் இவர்கள்.

ஜாக்ருதை மக்களே மிகவும் ஜாக்ருதை,
நம்பவே கூடாது மந்த்ரிகளின் வார்த்தையை.

பேசி பேசியே கழுத்து அறுக்கிறார்கள்,
வெளி வேஷம் வெள்ளை,அடிப்பதோ கொள்ளை.

அம்சமாக ஒன்றும் செய்வதும் இல்லை,
வம்சத்தின் வ்ருத்திக்கு மட்டுமே  லாயக்கு.!!!
ஜெயம் .
10-7-2011

No comments:

Post a Comment