Tuesday, 12 July 2011

தூளி .

                             
                    
                    

 பனிமழை பெய்யுது இலையெல்லாம் முத்துக்கள்.            
கதிரவன் உதித்ததும் வைரம் போல் மின்னுது.

காலை வேளையில் தோட்டத்தில் சென்றேன் ,
ஜில் என்ற காற்றுடன் காலாற நடந்தேன்.

 
முடியும் பறக்குது,கண்ணை மறைக்குது,
கதிரவன் வந்ததும் தென்றலும் மறையுது.


காலாற நடந்தேன் தெருவோரமாக,
மண்தோண்டி டிராக்டரும் வந்து விட்டது.
அஸ்திவாரம் போட்டு ,அடுக்கு மாடி கெட்ட.


பெரியாள் நாலு பேர்,சித்தாள் ஆறுபேர்.
சோத்து  மூட்டையுடன் வந்து விட்டார்கள்.


இடுப்பில் குழந்தையும் தலையில் பாண்டுமாய்
சோத்து தூக்குடன் வந்தார்கள் சித்தாள்.

கடப்பாறையும் ஏந்தி,தலைப்பாவும் சுத்தி,
பீடியும் கையுமாய் வந்தார்கள் பெரியாள்.


போடுடா மணலை,சிமென்ட்டுடன் கலந்து ,
தண்ணீரை ஊத்தி கலவையை கூட்டுடா.

மம்மட்டியுடன் வந்தான் சிறுவன் ஒருவன்,
மிடுக்குடன் கலந்தான் கலவையை களிப்பாக ,

சித்தாளை கூப்பிட்டு ,தலையில் வைக்கிறான்,
சித்தாளும் பாண்டுடன் படி ஏறி செல்கிறாள்.

பக்கத்தில் மரகொம்பில் தொங்குதாம் ஒரு தூளியும்.
பச்சை குழந்தை ஒன்று தூங்குதாம் தூளியில்.

கொளுத்தும் வெய்யிலில் ,மரத்தின் அடியில்,
தௌட்டு கலர் நாயொன்று காக்குதாம் காவல்.

குழந்தை அசைந்தால்,நாய் வாலை அட்டுமாம்.
குழந்தை அழுதால் நாயும் அழுமாம் வானத்தை நோக்கி.
நாயின் ஊளையை கேடடு,மார் கெட்டி விடுமாம்,
சித்தாளும் வந்து தாய் பால் கொடுப்பளாம்.
குடிப்பதை நிறுத்தி சிரிக்குமாம் குழந்தை.

கைகளை தூக்கி நாயுடன் விளையாடுமாம்,
நாயும் குழந்தையை ஆசையுடன் நக்குமாம்.

சட்டென்று சித்தாளும் மூடுவாள் முந்தானையை,
குழந்தையை  தூக்கி போடுவாள் தூளியில்.

தூக்கில் இருந்து சோத்தையும் எடுப்பாள்,
நாய்க்கு முதல்லே சோத்தை போடுவாள்.
மிச்சம் உள்ளதை அவளும் தின்பாள்.

ஏழை குழந்தைகள் வளரும் இவ்விதம்,
வெய்யிலும் மழையும் பொருட்படுத்தாமல்.

சேத்திலும் புரளும்,மணலிலும் உருளும்
மற்று பசங்களுடன் சண்டையும் போடுமாம்.

தாய் திரும்பும் வரை வேறு என்ன வேலை?
படிப்பதும் இல்லையே பள்ளியில் சென்று.

தீவர வாதிகள் ஆக பிறப்பதும் இல்லை,
சூழ்நிலை ஒன்று தான் காரணம் அதற்க்கு.

கிடைப்பதில்லை தாய் தந்தையின் அன்பு ,
வீட்டில் எப்பவும் சண்டையும் சச்சருவும்.

கும்மாளம் அடிக்கிறான் குடித்து விட்டு ,
அப்பனாம் அவன் ஸ்வய போதமில்லாமல்.

வீட்டைவிட்டு ஓடுறான் பையனும் ஒருநாள்
தீவர வாதியின் பிடியில் சிக்குகிறான்.

அறியாத வயதில் இரையாகி விடுகிறான்,      
தாய் தந்தையின் ஞாபகமே இல்லாமல்.

பணமும் பயிற்சியும் சேர்ந்தே கிடைக்குது
துப்பாகியால் எப்படி சுட வேண்டும் என்று.

ஒருநாள் எதிரியின் கைதியாகி விடுகிறான்,
தூக்கு தண்டனைக்கு ஆளாகி விடுகிறான்.

தூளியில் தொங்குகிறான் பச்சிளம் வயதினில் ,                 
தூக்கில் தொங்குகிறான் தீவரவாதி ஆனபின்

குடிபோதையில் இருந்த ராமராஜரும்
ஒய்வு பெற்ற ஒரு ராணுவ வீரராம்.

சுவர் ஏறி குதிச்ச சிறுவன் தில்சனை
காரணம் இல்லாமல் சுட்டு கொல்கிறார்.

சின்னம் சிறு பய்யன் தில்சன் என்றவன்,
இரையாகி விட்டான் துப்பாக்கி சூட்டுக்கு.

துப்பாக்கியை தூக்கி கூவத்தில் எறிந்தார் ,
தில்சனின் சிநேகிதன் பார்த்துவிட்டான் அதை.

மாட்டினார் போலீசில் ,கைதாகி விட்டார்,
தூக்கில் தொங்குவார்  அவர் கூடிய சீக்ரம்.

கத்தினாள்,கதறினாள் தன் மகனுக்காக,
பொணம் ஆகி விட்டானே தன் மகன் என்று.

பதாம் பருப்புடன் வீட்டிற்கு வருவான்,
பள்ளியை விட்டு வீடு திரும்பும் போது.

துள்ளி குதிச்சு அள்ளி அள்ளி கொடுப்பான்.
தூளியில் போட்டு தாராட்டிய என் மகன்.



ஜெயம்
13-7-2011.

No comments:

Post a Comment