சங்கடமான அரசியலை விட்டு சன்யாசம் தேட போறேன் ,
ப.ஜ.காவின் அட்டஹாசம் தாங்காமல் ஓட போறேன்.
ஓடி ஓடி உழைக்கணம் ,லஞ்சத்தை ஒழிக்கணம்,
அண்ணாவை போலவே நானும் ஆண்டியாக வாழணம்.
கூட்டணி கக்ஷி தொல்லையோ ,போதுமடா சாமி,அண்ணாவை போலவே நானும் ஆண்டியாக வாழணம்.
போதாகுறைக்கு குழிதோண்டும் சுப்ரமண்யம் சாமி!!
பிரணாபின் நியூயார்க்பிரயாணம்,திடுக்கிடு ம் அவசியமோ?
பிரணாப் பிரதமர் சந்திப்பும் ஒரு சிதம்பர ரகசியமோ?
பூனை போல் பதுங்கும் நம்ம பிரதமர் மௌன சிங்கை பாரு,
பிரணாப் பிரதமர் சந்திப்பும் ஒரு சிதம்பர ரகசியமோ?
பூனை போல் பதுங்கும் நம்ம பிரதமர் மௌன சிங்கை பாரு,
சிதம்பர ரகசியம் கேட்டால் புலியை போல பாய்கிறார் பாரு.
சிதம்பரத்தை எதிர்த்து விட்டால் பிரதமர் கோபம் கொள்வதேனோ?
சிதம்பரத்தின் ராஜினாமா பிரதமர் மறுப்பதும் ஏனோ?
சிதம்பரம் தன் குற்ற சம்மதம் ஏற்று சொன்னால்,
பிரதமரும் அதில் மாட்டி கொள்வாரோ பின்னால்?
சுப்ரீம் கோர்ட் அளிக்கும் தீர்ப்பை பொறுத்திருந்து பாப்போம்
அரசியல் வாதிகளின் விதியை துணிச்சலுடன் ரசிப்போம்.
கை நிறைய பணம் கிடைத்தால்,போதும் என்று சொல்லும் மனிதனும் இல்லையே ,
வயறு நிறைய சோறு போட்டால் வாய் நிறைய வாழ்த்தாத மனிதனும் இல்லையே!!
சுபம் .
ஜெயம்.
28-9-2011