Sunday, 18 September 2011

மதம் பிடித்த மதம்


         
யானை மதம் கொண்டால் ஓடுமாம் பின்னோக்கி,
மனிதன் மதம் கொண்டால் ஓடுகிறான் முன்னோக்கி

அப்பாவி மக்களோ பொசுங்கி போகிறார் ஓடும் ரயிலில்,
பழிக்கு பழி ஒரே பல்லவி குஜராத் கலவரம் வீடுகளில்,

எல்லா மக்களும் ஒரு தாய் பெற்ற மக்கள் தானே ,
ஆண் ஜாதி பெண் ஜாதி இந்த இரண்டு ரகம் தானே,

ஹிந்து முஸ்லிம் என்று தேவையில்லாமல் மோதி,
பாவம் மோதி என்ற நரேந்திரனின் பட்டினி செய்தி,

கேட்டிர்களா இந்த புத்தம் புதிய புளித்த செய்தியை?
மோதியின் பட்டினி வரலாற்றின் நீண்ட லிஸ்ட்டை ?

அஞ்சு கோடி செலவில் பிரம்மாண்ட பந்தலில்,
எயர் கண்டிஷனும் பாஞ்சு மெத்தையும் பக்கத்தில்

நாடி பிடிக்க டக்ட்டர்கள் பத்துபேர் கூட்டத்தில்,
காலை பிடித்துவிட சம்ச்சாக்கள் நாலுபேர் போட்டியாம்,

எதுக்கப்பா மோதி உன்னுடைய இந்த கபட நாடகம்
தப்பு செய்தால் போது மன்னிப்பு தானப்பா ச்லாக்யம்.

புளித்து போய்விட்டது மந்த்ரிகளே உங்கள் நாட்டியம்,
முழித்து கொண்டு விட்டோம் ,போதும் உங்கள் ஆட்டம் .

பணமும் குமியுது மலைபோல் உங்களுடன் பாபமும் குமியுது ,
குவித்த பணமெல்லாம் ,சி.பி .ஐ.கையில் அல்லவா சிக்குகிறது

கேள்விமேல் கேளிவி கேடடு ,திண்டாடுகிறதே உங்கள் மூச்சு,
ஒழுக்கமாய் வாழ்ந்து விட்டால்,வேண்டாமே வீண் பேச்சு .

கும்பலில் கைவீசி,கும்பலுக்கு கை கூப்பி ,ஆகிவிட்டாய் நீ கோமாளி,
கும்பலின் வரிபணத்தில்அல்லவா உன் இந்த கோமாளி வேஷம்?

ரொம்பநாள் செல்லாது அப்பனே உன் வேஷமும் பித்தலாட்டமும் ,
தாமதம் இல்லாமல் வந்துவிடும் உங்களுக்கெல்லாம் சிறைவாசம்.

கொட்டாரம் வாழ்க்கை என்ன,கை சொடக்கில் கிட்டும் சேவை என்ன!!
எல்லாமே ஒரு கனவாய் மாறிவிடும் அப்பனே சிறையின் இருளில்!!!
ஜெயம்.18-9-2011


1 comment:

  1. சாதியும் மதமும் சமயுமும் காணா
    ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

    சாதியும் மதமும் சமயமும் பொய் என
    ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

    திருவடி தீக்ஷை(Self realization)

    இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
    நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
    சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


    Utube videos:
    (First 2 mins audio may not be clear... sorry for that)
    http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
    http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
    www.youtube.com/watch?v=FOF51gv5uCo


    Online Books
    http://www.vallalyaar.com/?p=409


    Contact guru :
    Shiva Selvaraj,
    Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
    17/49p, “Thanga Jothi “,
    Kalaignar kudi-iruppu – Madhavapuram,
    Kanyakumari – 629702.
    Cell : 92451 53454

    ReplyDelete