Thursday, 22 September 2011

காற்றா? காட்சியா?


            

 குளித்தேன்  குறி இட்டேன் ,பொன்னாடை அணிந்தேன்,
அமர்ந்தேன் த்யானத்தில் தர்பாசனத்தில்.

பூஜைக்கு கையில் பூ எடுத்தேன்,பூ மணம் வீசவில்லை.
சீரியல் ஓலி ஒன்று கணிர் என்று காதுக்குள் வீசுது.

மனம் அலை பாயுதே பக்கத்து அறைக்குள்.
எட்டி எட்டி பார்க்க மனம் துள்ளி விளையாடுதே,

என்னவென்று அறியாமல் மண்டையும் வெடிக்குதே!
பஞ்சாங்கம் பார்க்கும் சாக்கில் அறைக்குள் நுழைந்தேன்,

அம்மா பார்க்கும் "அம்மக்கிளி" மறைந்திருந்து பார்த்தேன்.
மலையாளம் கும்குமப்பூ பார்க்காமல் விடுவேனா?
அம்மாவுக்கு தெரியாமல் ஓரக்கண்னால் பார்ப்பேனே!

ஹரிச்சந்தனத்தில் மகாதேவன் படுபாவி வில்லனாம்,
உண்ணிமாயை என்ற பெண்ணோ பாவம் ஒரு அப்பாவி.

காலை முதல் இரவு வரை,தமிழ் சீரியல் பார்ப்பேன்,
பாத்து பாத்து சில சமயம் பாத்த படமே பார்ப்பேன்.

மொத்த படவும் பார்த்துவிட்டு என்னத்தை கண்டேன்?
பார்த்த படம் ஒன்றுமே ஞாபகவும் இல்லையே!

சீரியல் பார்த்துவிட்டு பித்து பிடித்த மனநிலை,
கொஞ்சநேரம் நடக்க போகவேண்டும் என்று தோன்றுது .

நான் போனவுடன் என் இடத்தில அம்மா வந்து அமருவாள்,
மணி கணக்கில் அவள் விரும்பி அரசியல் படிப்பாள்.

நெஞ்சத்தை தொட்டு சொல் அஞ்சாத மனமே,
காற்று உள்ளப்பவே தூற்றவா? காட்சிக்கு விலை கொடுக்கவா?

காற்றுக்கு என்ன பஞ்சம் ,மூச்சு விட்டால் காற்று தான்,
கண் இருக்கும் வரை தானே  காட்சியின் விலை மதிப்பு!

சின்னம் சிறு அசைகள் சிறகடிக்கும் அசைகள்,
உயிர் உள்ளவரை ஊட்டலாம் கண் குளிரும் காட்சியை.

உன் மனசாக்ஷி சொல்லுதேன் என் அருமை மவனே,
வாழ்க்கையின் மகிழ்ச்சியே கண் குளிரும் காட்சிதான்.

ஜெயம்.
23-9-2011

No comments:

Post a Comment