Tuesday, 14 May 2013

கத்திரி சூடு ,கொசுவின் மூடு ===========================

                                   

அன்னையே என் ஆருயிர் சென்னையே அனல் அடிக்கும் திண்ணையே !
காலை வைத்தால் துள்ளி குதித்து தாண்டவம் ஆட வைக்கும் கத்திரி வெய்யிலே

பச்சை காய்கறி வாங்கிடும் முயற்ச்சியில் பழமுதிர் சோலை சென்றால்,
படு கிழவியின் உடம்பை போல் சுருங்கி கிடக்கும் பழமாகிப்போன பதார்த்தங்கள்.

பீர்க்கங்காயை உரித்தால்  உள்ளே ஒரு சுரங்கப்பதை மட்டும் தெரியுது,
பச்சை மிளகாய் என்றழைக்கும் பழுத்த மிளகாய் தான் கொட்டி கிடக்குது.

முருங்கைக்காய் சாம்பாறை நினைத்து சோத்து  காயை தேடி ஓடினேன்,
ஒட்டி உணங்கின மூன்று முருங்கைக்காய் என் கவனத்தை கவர்ந்தது.

மூன்று முருங்கைக்காயையும் சேர்த்து பின்னல் போல் பின்னினால் என்ன ?
எதோ சினிமாவில் அற்காணி ஆக நடித்த சுஹாசினியின் ஞாபகம் வந்தது.

பாலக் கீரை வாங்கிடலாம் நினைத்து கீரை கவுன்டரில் வேகமாக சென்றேன்,
என்னுடைய லக்கை பாருங்கள்,கீரையெல்லாம் ஒரே நக்ஷத்திர பங்களாவ் .

வெப்பத்தை விரும்பும் மாம்பழம்,மூக்கை தொளைக்குது வாசனை
வெக்கத்தை விட்டு சொல்கிறேன்,விலையை நினைத்து யோசனை !

கத்திரி வெய்யிலில் வேண்டாம் மாம்பழம்,வருமே காஸ் ப்ரோப்ளம் !
முதியோர்களை பார்க்க வரும் பந்துக்கள் கொடுக்கும் மாம்பழம் தாராளம்

காலையில் வருமே குழாய் தண்ணீர் கொஞ்சம் குளுமையாய் ,
அத்தனை பிளாஸ்டிக் வாளியிலும் குளிர் தண்ணீர் ரொப்பிவிடுவொம் '

காலை ஒன்பது மணிக்கு மேல் வருமே குழாயில் கொதிக்கும் தண்ணீர்,
ஷவரை திறந்து குளித்தால் தலையும் உடம்பும் வேந்துவிடுமே ,ஜாக்ருதை.!

போராகுறைக்கு பொன்னியும் வந்தது போல் நடக்கும் தினசரி கரண்டு கட்,
சென்னையில் ஜனங்கள் சிடு சிடு என்ரிருப்பத்தின் ரகசியம் வெப்பம் தான்..

சேலை கட்டி தெருவில் நடக்கும்போது,ஒரு கை எப்பவும் அடமானம் தான்,
இடது கையால் சேலையை தூக்கி பிடித்து,தெரிவதெல்லாம் அழுக்கு  பாவாடை !

நான் மட்டும்  ஒரு கேலி கூத்தா, வெக்கப்பட்டு கால்கள்க்கிடையில் போய் ஒட்டிக்கும்.
மறுகைய்யால் அதை இழுத்து வெளியே கொண்டுவருவது ஓர் பகீரத பிரயத்தனமே .

ஏசி ரூமில் பொய் சரணமடைந்தால்,கொசுவும் கூடவே வருது என்ஜாய் பண்ண,
ஒங்களுக்குத்தான் ஏ ஸிக்கு யமண்டன் பில்,எங்களுக்கு ஏ சி எப்பவும் ஓசி தான்.

மொட்டை மாடியில் போய் ப்ரெஷ்  காற்று கொண்டால் என்ன என்றொரு நப்பாசை,
வேட்டை ஆட காத்திருக்கும்  கொசுவுக்கும் நம்மை கடித்து கொதறுவதில் ஒரு பேராசை..

சுருக்கமாக சொன்னால் ,காலைவேளையில் கத்திரியால் படும் அவஸ்த்தை ,
மாலை வேளையில் கொசுக்களின் கடியால் அனுபவிக்கும்  ப்ரணாவஸ்த்தை.!                                                     சுபம் .
                             
                           ----------                                                  ஜெயம்