Wednesday, 7 November 2012

கட்கரியின் நெருக்கடி. --------------------------------


                                  

ஏனோ இப்படி கடு கடு என்று கறந்குகிறார் இந்த கட்கரீ?
லஞ்சத்தை முழுங்கி ஏப்பம் விடுகிறாரா குண்டு குறுநரி?

போடும் சட்டையில் பித்தானுக்கு பித்தான் பெரிய () காப் 
பாங்கில் இடமில்லாமல் தொப்பையில் தானோ ஸ்கோப் !

தொப்பையை தூக்கி நடக்கும் போஸே ஒரு தனி கவர்ச்சி 
தொப்பை வெடித்துவிட்டால் லஞ்சத்துக்கு வரும் தளர்ச்சி.

போதாகுறைக்கு பொன்னியும் வந்தது போல் அல்லவா பேச்சு !
விவேகானந்தரும்  தாவுத் இப்ராஹிமும் குணத்தில் ஒரே அச்சு! 

லஞ்சத்தை முழுங்கி முழிகள் பிதுங்கி வார்த்தைகள் வதங்கி,
உலகமே எதிர்த்தாலும்,விடுவேனா என் பதவியை தயங்கி?

வெக்கமே இல்லையா அரசியல்வாதிகளின் வர்கத்தில்,
பணத்தை பதுக்கி,ஹரிச்ச்சந்திரன் ஆகிறார்கள் தர்க்கத்தில்.

 மந்திரி பதவியில் இருந்து செய்வதோ  வெறும் பரதூஷணம் ,
இதுக்காகவே சில பிறவிகள் வஹிப்பது மந்திரியின் பூஷணம்.


பாரத மக்களுக்கு வாழ்வதற்கு வழி தெரியாமல் திண்டாட்டம்.
மிக்சி வாஷிங் மெஷீன்,டிவி இருந்தும் கரண்டுக்கு போராட்டம்.

காஸ் ஒன்று இருந்தாலே வேளா வேளைக்கு அஹாரம் நிச்சயம்,
அதையும் குறைத்து மட்டயடி மகாதேவா அல்லவா தற்சமயம்.

மந்திரியும் பாரதத்தின் ஒரு பிரஜை தானே அல்லவா சொல்லுங்கள்,
அவர்கள் வீட்டிலும் காஸ் ஒரு கனக்க்ஷன் தானா என்று கேளுங்கள்.

சட்டம் எல்லாம் பொது ஜனங்களுக்கு மட்டும் தான் சொந்தமா?
மந்திரி ஆகிவிட்டால் அவர்களுக்கு இரண்டு கொம்பு பொந்துமா ?

ஒரு கட்சி மற்றொரு கட்சியை தாக்கி பேசுவது தான் தினசரி வேலை,
தனக்காக ஒதுக்கப்பட்ட வேலையை செய்ய யாரும் தயார் இல்லை.

அண்ணாவை போல் ஒரு மகான் லஞ்சத்தை எதிர்த்து போராடுகிறார்,
லஞ்சம் இல்லா ஒரு அன்னை தேசத்தை கொண்டுவர துடிக்கிறார்.

மக்களே நாம் எல்லாம் அண்ணாவுக்கு உறுதுணையாக இருப்போம் ,
களங்கம் இல்லா மனிதர்களை மந்திரிகளாக தேர்ந்து எடுப்போம் .

                              ஜெய் ஹிந்த் .
                             --------------------                                                    சுபம் .
                                                                                                           ---------
                                                                                                         ஜெயம் (8-11-2012 )



Saturday, 3 November 2012

சத்தமே தான் சுருதி .


 
                                

அலைந்தோம் திரிந்தோம் அஞ்சுபேரும் அவுட்லான்டரில்,
இறங்கினோம் பரமனின்  தனி வீடு வாங்கும்  வேட்டையில் .

காலை ஒன்பது மணியியில் இருந்து மாலை ஏழு மணி வரை,
சனிதோறும் ஓபன் ஹவுஸ் வேட்டையில் இறங்கினோம்.

கையில் கட்டி சாதமும் ,இட்டலி சாம்பாறும் புளியோதரையும் ,
ரவாகேசரியும் மற்று பல பழங்களும் ஏந்தி உல்லாச பயணம் போல்.

வீடு வீடாய் இறங்கி ஏறினோம் ஓபன் ஹவுஸ் நடக்கும் வேளையில்,
வீடு எல்லோருக்கும் பிடித்திருந்தால் விலையோ வானத்தை தொடுது,

மற்று சில வீடுகள் மலையில் பாறாங்கல்லில் பணிதிருக்கிறார்கள் ,
ஏறி போகும் படிகெட்டுகளோ கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை,

அப்பாடா என்று மூச்சை பிடிச்சு ஏறி வாந்தால் பார்பதோ ஓர் அதிசயம் ,
யானை அளவில் ஒரு பாறாங்கல் சுவரில் முழைத்து காணும் பரவசம்..

திரைபடத்தில் காணும் பிளாஸ்டர் ஒப் பாரிஸ் கல்லோ? என் சந்தேஹம்,
தொட்டு பார்த்தேன் நல்ல  சோலிட் கல்லென்று சொல்லித்து மனகோசம் .

வரும்போது தமிழ் கடையில் ஒரு குடுமி தேங்காய் தயங்கி வாங்கினேன்,
முழைத்திருக்கும் பாறாங்கல்லில் குடுமி தேங்காயை ஓங்கி தட்டினேன் .

ஆஹா , தந்தம்  போல் முத்து பல்களை காட்டி தேங்காயும் சிரித்தது,
பாறாங்கல்லில் தும்பிக்கை செதுக்கலாமா என்று மண்டை வெடித்தது.

வேண்டாம் வீண் வம்பு என்று உடைத்த தேங்காயுடன் வேகமாக நடந்தேன்,
காறில் பொய் உட்கார்ந்து கத்தியால் தேங்காயை பத்தை போட்டு கீறினேன்.

சொக்ளைட்டை பொடித்து  தேங்காய் கீததை  ஒத்திக்கொண்டு,புஜித்தோம் 
இதே நம் நாட்டில் இருந்தால்,புள்ளையாருக்கு கோயில் கெட்டி பஜிப்போம் .

எங்களுக்கு எல்லாம் வீடு பிடித்திருந்தால் பரமனுக்கு ஏனோ பிடிக்காது.
ஏதோ  நொண்டி காரணம் சொல்லியே பரமன் தட்டி கழித்துவிடுவான் .

தற்போது அவன் வசிக்கும் வீட்டையும் வித்து விட்டான் பரமன்,
வீட்டை விட்டு போகும் நெருக்கடி பக்கத்திலே நெருங்கி விட்டது.

நினைத்தது போல் பரமனுக்கு ஸ்வந்தம் வீடு ஒன்றும் அமையவில்லை,
ரசவடைன்னா ரசவடை சொல்லி வாடகை வீடொன்று அமைத்து கொண்டான்.

சத்தமே இல்லாத வீட்டில் தான் வசிக்க வேண்டும் என்று பரமனின் ஆசை,
அனால் அவன் குடிவந்த வீட்டில் கேள்பதோ மைன்ரோடின் டிராபிக் ஓசை. 

ரோட்டில் போகும் கார்கள்  கேட்டது பரமா உனக்கு பைத்தியம் பிடிக்குதா?
இல்லவே இல்லை என் பயித்தியம் எல்லாம் தெளிந்து ,தெளிவாகி விட்டேன்.

உங்கள் ரீங்கார சத்தம்  எனக்கு பழகி சுருதி போல் அல்லவா த்வநிக்குது ,
இனிமேல் நீ இல்லாமல் நான் இல்லை சத்தமே தான் என் ஹம்ச த்வனி.

                                     -----------------------------------
                                                    சுபம்                                              ஜெயம் .
                                                                                                           4-11-2012

Sunday, 22 July 2012

அன்னிகாவின் அப்யாசம்.

                                                           
இந்த தர்த்தியில் நான் பிறந்து தொண்ணூறு நாள் ஓடிவிட்டது,
என் பெற்றோரின்  பெருமையோ எல்லை தாண்டி போய்விட்டது.

பதிமூன்றாவது நாளன்று என்னுடைய  பெயர் சூட்டு விழா நடந்தது,
தொட்டில் போட்டு காப்பணிந்து என்னை பார்க்க  ஊரெல்லாம் வந்தது.

அறுபது நாள் ஆயிற்றே,இன்னம் கழுத்து நிற்கவில்லையே கடவுளே?
லக்ஷ்மி க்ரயிண்டரை  போல்அல்லவா குழந்தையின் மண்டை ஆடுது?

என்னை பார்க்க வருவோரிடம்,கொள்ளின் டாபிக் என் மண்டை தான்,
தொண்டை கிழிய  பேசும் போது கொள்ளின் மண்டையும் ஆடுதே என் ?
அம்மாவுக்கும் கொள்ளு பாட்டிக்கும் வம்பு பேச வேறு விஷயமே இல்லையா?
நான் என்னா கொலுவில் வைத்து அழகு பார்க்கும் தஞ்சாவூர் பொம்மையா?

எனக்கென்று சில கொள்கைகள் இருப்பது இவர்களுக்கு ஒன்றும் தெரியாது,
எண்ணை தேத்து குளுப்பாட்டும்போது அம்மாவின் பாட்டை ரசித்திடுவேன்.

அம்மாவின் முகத்தை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டேகுளித்திடுவேன்,
குளித்த பிறகு அம்மா நறுமணம் கொண்ட ஜோன்சன் பௌடரை அப்பிடுவாள்.

மல்ட்டி களரில் பாபா சூட் போட்டு  எந்தன்  அழகை பார்த்து  ரசித்திடுவாள்,
என்னை அணைத்து முத்தம் கொடுத்து  கொள்ளிடம் மெல்ல தந்திடுவாள்.

கொள்ளும் ஆசையுடன்  என்னை  அணைத்து ரோக்கிங் செயரில் ஆடிடுவாள்,
கொள்ளின்  கையில் சுருண்டு படுத்து கொள்ளின் பாட்டில் மயங்கிடுவேன்.

தூககம் தெளிந்து பிரெஷ் ஆனதும் என்னை ப்ளே மாட்டில் போட்டிடுவாள்,
ப்ளே மாட்டில் படுத்ததும் நானும் என் கால்களை அடித்து விளையாடுவேன்.

கால்களை தூக்கி  மேலே வைத்து  கப்பல் சாய்வது போல் சரிந்துவிட்டேன்,
இன்று நான் பிறந்து மூன்றாவது மாதம் குப்ற மறிவதையும் கற்றுவிட்டேன்.

திடீர் என்று என் கொள்ளுப்பாட்டி என்னை காமறாவில் பிடித்து விட்டாள்,
கூடிய சீக்ரம் பார்ப்பீர்கள் நீங்கள் என்னை குப்பற போஸில் பெயிஸ் புக்கில்.

சரிந்து படுத்தால் என் கைகள் இரண்டும் என்  வாய்க்குள் நுழைய பரிச்ரமம்,
கட்டைவிரலை உள்ளே பூத்தி சப்பமுடியாமல் தவிக்கும் எந்தன் பராக்கிரமம்.

விரலை சப்பும் பராக்ரமத்தில் குப்ற மறிவதை சற்று மறந்தே விட்டேன்,
கிட்டே இருந்தும்  வாய்க்குள் நுழைய மறுப்பதேனோ  என் குஞ்சு  கரங்கள்?

வாயில் போடுவது  ஏன் கைகள் தான்  என்று எனக்கே இன்னம் தெரியாது,
ஒரு கைய்யால் மறு கையயை பிடித்து இழுத்து  வருவது எத்தனை சரமம்!

இரண்டு கைய்யும் சேர்ந்து வாயில் திணிப்பதும் ஒரு பகீரத பிரயத்தினம்,
வாயை நோக்கி வரும் கைகள் திசை மாறி  மூக்கை போய் இடிப்ப்தேன்?

மூக்கில் விழுந்த இடியின்  வலியால்  நான் அலறி புரண்டு அழுதிடுவேன்,
அக்கம்பக்கம் பார்த்து விட்டு தேடினேன் அம்மாவை என்  ஓரக்கண்ணால்.

அம்மா வந்தாள் வாரி எடுத்தாள்,முத்தம் கொடுத்து அணைத்து கொண்டாள்
ராக்கிங் செயறில் ஆடியவாறே பாடிகொண்டே எனக்கு தாய் பாலும்  ஊட்டினாள்.
                                                        சுபம் .
                                                       ---------------                                                       ஜெயம்.
                                                                                                                              22-7-2012.
                                                                                                                             -----------------

                   








Thursday, 12 July 2012

ஓட்டறைகுட்சி.

                                                                      
பரமனின் குடியிருப்பு ஒரு பிரம்மாண்டமான ஆறு மாடி கெட்டிடம்,
பரமன் வசிப்பது இரண்டு படுக்கை ரூம் கொண்ட இரண்டாவது மாடி.

பரமன் தடபுடலாக கால்களில் ஷூ போட்டு இறங்கி வந்தான் கீழே.
அவன் மூங்கில் மாளிகையின் அழகை பார்த்து ரசிக்கவந்தான் தாழே.

குண்டோட்டம் குதிரோட்டமாக ஓடி  வந்தான் அவன் தன் பிளாட்டிற்கு ,
குழந்தை ரசிகாவை தூக்கி போட்டு குதியோ குதி குதித்தான் தறையில்.

ஆறடி உயரவும் மிக பருமனான உடம்போடுகூடியவன் ஆச்சே பரமன்,
அவனுடைய கூச்சலும் குதித்தலும்  வீடே அதிரும் போல் ஓர் நடுக்கம்.

ஒன்றாம் மாடியில் வசிப்பவளோ ஒரு நடுவயது மாது  ஓர் தனி பிறவி,
யாரிடமும் ஓட்டும் உறவும் ஏதும் இல்லாமல் வஸிக்கும் ஸ்வயனலக்காரி.

பரமனின் தாண்டவம் அவளால் தங்கவே முடியாத்த பயங்கர கொலைவெறி.
எடுத்தாள் ஒட்டறை குச்சியை குத்தினாள் பரமனின் தட்டில் மேல் பலமுறை.

பரமன் நடக்குமிடமெல்லாம் கேக்குதே ஒட்டறகுட்சியின் டக் டக் சத்தம் ,
பரமன் முழித்தான்,புரண்டான் பொலம்பினான் பையித்தியம் பிடித்தவன் போல்.
அடுக்குமாடி கெட்டிடத்திலும் வருமா இது போல் ப்ரோப்ளம்
தரும் நிகழ்ச்சி?
படுத்து தூங்கவே பயப்படுகிறான் பரமன்,அந்த மாதுவின் கோலாட்ட பயிற்சி.
ரசிகாவை கொஞ்ச  தயங்கினான்,மனைவியிடம் குரல் கொடுத்து பேச
பயந்தான்,பிரமை பிடித்தவன் போல் தெரிந்தான் ஒட்டறகுட்சியின் டக் டக் சத்தம் கேடடு.
 
ஒருநாள் அவன் மாமன் வந்தான்,வேண்டுமென்றே அட்டஹசமாக சிரித்தான்,
சிரிப்பின் மொழக்கம் தாங்காமல் மாது படிஏறிவந்தாள் பரமனனின்  வீட்டிற்கு.

பரமனும் மாமனும் சேர்ந்து அடடஹாசமாக சிரித்தார்கள் மாதுவை பார்த்து,
வெளி உலகம் கண்ட பறவை போல் மாதுவின் மனமும் உல்லாசம் கொண்டது.

சிரித்தாள் அவளும் கூடவே வயிறு வெடிக்கும் வரை,சிரிப்பின் மகிமை எத்தனை?
பரமா நீ ஓடலாம் சாடலாம் சுதந்திரமாக,வேண்டாம் பயம் இனி ,என் ஓட்டற குச்சியால் 
 மாமா ,உங்களின் ராக்ஷஸ சிரிப்பில் கண்டேன் நான் மாதுவில் மனமாற்றத்தை,
எவ்வளவு சீக்ரம் பிரச்சனையை தீர்த்து வைத்தீர்கள் என் அருமை சங்கர்மாமா.

பரமா இதொன்றும் பெரிய விஷயமல்ல,நான் வருத்தம் அடைந்தால் சிரிப்பேன்,
நான் சிரிப்பதின் நோக்கமே என் கவலையை எவருக்கும்  தெரியாமல் இருக்க !!

பரமனும் படித்தான் ஒரு பாடம்,அவன் மாமாவின் சிரிப்பில் கலந்த ரகசியம்,
இனி பரமனும்  பதட்டம் அடையாமல்,சிரிதுகொண்டிருப்பது மிக அவசியம்.  
                              
                              சுபம்.
                              
                              ...........                                             ஜெயம் .
                              
                                                                                      13-7-2012.
                              
                                                                  

Tuesday, 10 July 2012

வேலி.

                                         
பரமனின் கூரையில்  சரமாரியாக கொட்டிதீர்த்தது கூழாங்கல் மழை,
குப்பனின் கோபமும் கொலைவெறியும் தான் இந்த கூழாங்கல்  மழை.

பரமன்  பவித்ரனோ பதட்டத்தில் புகார் புகைத்தான் போலீசிடம்,
போலீசும் மொம்மரமாக தேடி அலைந்தது குப்பன் இருக்குமிடம்.

ஒருநாள் அவனை பிடித்துவிட்டார்கள் காவல் துறை திடீர் என்று,
சிறிதும் அவன் எதிர்பார்க்காமல் ஏர்போர்ட் அருகில் பதுங்கி சென்று.

போலீஸிடம் சிக்கி திக்கு முக்காடினான் பாவம் கொலைவெறி குப்பன்.
முட்டிக்கு முட்டி தட்டி விழுந்தான் அவன் வலி தாங்காமல் குபறகுத்தி.

குப்பனின் தகப்பனோ முழிகள் பிதுங்க துர்வாசாவாக மாறிவிட்டான் ,
பரமனை நோக்கி பழிக்கு பழி வாங்க படை எடுக்க துணிந்து விட்டான்.

உன் மரத்தின் வேரினால் வந்தது என் வீட்டில் மிக பெரிய விரிசல்.
மரத்தை வெட்டு,வேலியை கெட்டு,விடமாட்டேன் உன்னை எளிதில்.

கெட்டிவிடுவோம் வேலியை உயரமாக உனக்கும் எனக்கும் நடுவில்,
வேலியின் செலவு நாம் இருவருக்கும் சமம்  என்றான் பரமன் முடிவில்.

குப்பனுடைய அப்பனும் வணங்கினான் வேலியின் செலவு வஹிக்க,
குப்பனும் நாய்களும் இனிமேல் பரமனின் கண்ணில் படாமல் இருக்க.

ஆள் உயரம் வேலி வந்தாலும் பரமனின் மனதில் இல்லையே நிம்மதி,
குள்ளனை நம்பலாம்  குப்பனை நம்பாதே என்று எச்சரித்தது அவன் மதி.

எலியை பயந்து இல்லம்  விற்ற  நம்பூதிரியின் கதை போல் தோன்றுதே,
குப்பனை பயந்து பரமனும் வீட்டை விற்றுவிடுவான் போல் தெரியுதே!

பரமன் மாட்டிகொண்டு முழிக்கிறான் மிகவும் பெரிய தர்மசங்கடத்தில்,
வீட்டை விற்றுவிட்டால் இனி வாங்கும் புதிய வீட்டின் ராசி எப்படியோ!

பரமன் புது வீடு வாங்கும் வேட்டையில் இரவும் பகலுமாய் அலைந்தான்,
நம்பூதிரி துப்பலை மெதிச்ச கதையை நினைத்து  கொஞ்சம் தயங்கினான்.

நம்பூதிரி  தெருவில் நடந்தான்  கால்களை தூக்கிவெச்சு மிக கவனத்துடன்,
எச்சிலை மெதிப்போமோ என்று பயத்துடன்  நடந்தார் அவர் மிக நாசூக்காக.

கடைசியில் அவர் பாதங்கள் மிதிச்சதோ சபக் என்று ஓர் எச்சில்துப்பலில்,
தன் புது வீட்டிலும் வந்திடுமோ பிரச்சனை பயந்தது அவன் மனம்,கடுப்பில்!

கவலையுடன் தென்பட்டான் பரமன் தான் குடும்பத்தின் பாதுகாப்பை தேடி,
கடந்ததெல்லாம் கடுகளவு,வரப்போவதோ ஒரு மலையளவு பரமனை நாடி!

வாங்கினான் பரமன் பிளாட் ஒன்று புத்தம் புதிது, அடுக்கு மாடி கெட்டிடத்தில்
தூங்கினான் பரமன் நிச்ச்சலமாக குப்பனோ வேலியோ கனவில் தென்படாமல்.
                                                 சுபம் .
                                                 ---------                                            ஜெயம்.
                                                                                                       11-7-2012
                                                                                                        --------------

Saturday, 16 June 2012

குப்பனின் கூத்தாட்டம் ,பரமனின் பதட்டம்.


பக்கத்து வீட்டு குப்பனின் அட்டஹாசம் போதை மருந்தின் மயக்கம்.
உயிர் தப்பி ஓடிவிட்டார்கள் அவன்  பெற்றோர்  மகனின்  ஹிம்சை தாங்காமல்.

போதை மருந்தில் சிக்கி தவிக்கிறான்  குப்பன் தர்ம சங்கடத்தில் ,
பெற்றோரையும் கொலை செய்ய  துணிந்துவிட்டான்  போதையின் வெறியில்.

பிஞ்சிலேயே  பெற்றோர்களின் பெரம்படி வாங்காமல்  வளந்ததின் விளைவுகள்  எத்தனை,
அறியாத வயதிலே அகப்பட்டு கொள்கிறான் வேண்டாத பழக்கத்தின் அடிமையாய்.


போதை மருந்தின் கிக்  ஏறிவிட்டால் எங்கிருந்து வருகிறது அசட்டு தய்ரியம்?
கல்லெறிந்து உடைத்துவிட்டான் அவன் பக்கத்து வீட்டு பரமனின் கண்ணாடி ஜனல்களை.

பரமனின் குணமோ ,ஒரு வம்புக்கும் போகாத கொவ்வாலா மாதிரி,
பூச்சிக்கு கூட துரோகம் நினைக்காத ஒரு  வித்யாசமான  பிறவி.

பக்கத்து வீட்டு குப்பனின்  குரோதம்  பரமனுக்கு தொடை நடுக்கம்.
மனைவிக்கும் குழந்தைக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்ற பதட்டம்.

போராகொறைக்கு பொன்னியும் வந்தாள் என்று சொல்வதை போல்
பக்கத்து வீட்டு புல் டாக் இரண்டு சுத்துது  மறுநாள் பரமனின் வீட்டில்.

பரமன்  பதட்டத்தில் எடுத்தான்,செலபோனை போலீசிடம் புகார் கொடுக்க,
பேச்சே வராமல் திக்கு முக்காடி வாயடைச்சு நின்றான் பரமன் கால்கடுக்க.

நாய்களை விரட்ட வாசல் கயிட்டை திறந்துவிட போகிறான் தயக்கமாய்
தப்பிக்க வழி இல்லாமல் நாய்கள் இரண்டும் பரக்கம் பாயுது பயத்தினால்,

பரமனை கண்டதும் வாலாட்டி கொண்டு அவன் மேல் பாயுது  இரண்டும்.
செல் போன் தெறிக்க பொத் என்று விழுந்தான் பரமன் அடைந்தான்.
மயக்கம்.

மயக்கம் தெளிந்ததும் பரமனின் உதடுகள் விறைத்து கொண்டு இருக்க,
கண் கலங்கி கேட்டானே ஒரு வார்த்தை ,என் குழந்தை ரசிகா  எங்கே?
வந்தாள் மனைவி  சிரித்துகொண்டேகொடுத்தாள் அவனிடம் ரசிகாவை,
மழலை சிரிப்புடன் வந்த ரசிகாவை  பார்த்து மகிழ்ச்சி அடைந்தான் பரமன்.
                                                    சுபம்
                                                   --------------                                           ஜெயம்.
                                                                                                               17-6-2012 
                                                                                                               -----------------

Tuesday, 12 June 2012

கண்டதெல்லாம் கனவா?

          

புத்தம் புதிய வீடு,பளங்குபோல் பளபளக்கும் டயில்ஸ்,
பிரமாண்டமான கிச்சென்,தேக்கில் இழைத்த வாசக்கால்

விசாலமான பெட் ரூம்ஸ் ஒவ்வொன்றுக்கும் தனி பாலக்கனி,
எதிரும் புதிரும் ப்ளாட்டுகள் ,எனக்கு வம்பு பேச நல்ல கம்பனி.

குடித்தனம்  வந்தோம் புது வீட்டிற்கு நாங்கள் இருவரும்,
வெளிநாட்டில் இருந்துவிட்டு  பசங்களுடன் பலவருஷம்.

சென்னை மண்ணில் அவர் பாதம் பதிஞ்ச அடுத்த நிமிஷமே
என் கணவரில்  கண்டேன் நான் அவர் நடையில் ஒரு மிடுக்கு.

கால் வலியால் துடிதுவிட்டார் அவர்  வெளிநாட்டின் குளிரில்,        வலியெல்லாம்  மயமாய் மறைந்தது தமிழ்நாட்டின் கத்திரியில்.

என் கணவன் காட்டும்  சுறுசுறுப்பில் நான் மெய் மறந்தேன்,
கையில் காப்பியுடன் கணவரை கண்டதும்  கண் திறந்தேன்.

பல் தேக்க வேண்டாம் ,பெட் காபி  குடிப்போமா நாமிருவரும்?
தேள் கொட்டினாப்போல்  வாய் பொத்தி நின்றேன் அதிர்ச்சியில்!!

வாசல் கதவை திறந்தேன் ,தெரிந்தது பளிச்சென்று மாக்கோலம்.
நம்பவே முடியாமல் சமையல் அறைக்கு சென்றேன்,அமக்களம்,

மேடையில் பார்த்தால் சமையலே முடித்த மாதிரி அல்லவா தோற்றம்,
சாம்பாறும்,பொரியலும் அப்பளமும் பொரித்து,கண்டேனே ஒரு மாற்றம்.

தொட்டியில் போட்ட பாத்திரங்கள்,எல்லாம் வாஷாகிவிட்டது ட்ரேயில்
துணிகள் அத்தனையும் மடித்து முடித்து அடுக்கி இருக்குது பீரோவில்.

ராதாவை கூப்பிட்டு செல் போனில் பேசினேன் என் கணவரின் மாற்றத்தை
பொல்லாத கனவில் தான் நீ பெத்துகிறாய் என்றாள் அவள் சந்தேகத்துடன்.

சந்தேக பேர்வழி நீ தாண்டி ராதா, என் கணவரை போல் ஒரு உத்தமர்  இல்லை,
வாடீ என் தொழீ,உனக்கு சந்தேஹமிருந்தால் என் வீட்டிற்கு வந்து தான் பாரேன்.

கொசு ஒன்று கடிக்க,பட்டென்று நான் அடிக்க செத்து விழுந்தது அந்த கொசு,
கொசுவலையில் சிக்கி  தப்பிக்க முடியாமல் உயிரை விட்டது அந்த கொசு.

மணி ஆகி விட்டதோ! தவறாமல் வந்துவிடும் ஜனலோரம் காக்காவின் சத்தம்,
கண்விழித்து கொண்டேன்,காலை காப்பிக்காக ஏங்கி நிற்கும் கணவரின் முகம்.

அப்பாடி ,கண்விழித்தாயா ஒருவழியாய், டைம் என்ன ஆச்சு என்று தெரியுமா,
கணவனை மறந்து அப்படி என்ன தூககம்,கனவேதும் கண்டாயா இன்பமாய்?

அய்யோ நான் கண்டது அத்தனையும் கனவா!  என் காலை கனவு பலிக்காதா?
தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை,என்னிடம் உன் கனவு ஒருநாளும் பலிக்காது.
                                             சுபம்.
                                            .............                                                    ஜெயம் .
                                                                                                            10-6-2012.

Saturday, 9 June 2012

யார் அந்த முதல் தாய்.

                  


இந்த உலகமே துளும்பி வழியுது பெரும் மக்கள் துகையால்,
அந்த ஒவ்வொரு மனிதனும் ஜனிப்பது ஒரு தாயின் வழியாய்.

எத்தனை ஜன்மங்கள்,எத்தனை பிறவிகள்,யார் நம் முதல் தாய்?
பித்தனை போலவே பித்து பிடித்திடும் சிந்திக்க வைத்திடும் மெய்.

அதிசயம் இல்லையா இந்த ஸ்ருஷ்ட்டியின் பொல்லாத ரகசியம்?
பரஸ்யம் இல்லாமலே அந்த உண்மையை தேடுவேன் நிச்சயம்.

புழுவாய்,பூச்சியாய்,எறும்பாய்,நான் பிறந்திருக்கலாம் இல்லையா?
அப்பவும்  என் ஜனனத்துக்கு  காரணம் ஒரு தாய் தான் அல்லவா?

புழுக்கம் தாங்காமல் ஸ்வயம்பூ ஆக சேற்றில் உதிக்கும் ஒரு புழுவாய்,
புழுவிலிருந்து பிறவி எடுத்தவள் தானோ என்னவோ நம் முதல் தாய்!


புழுவாய் பிறந்து,வழி வழியாக மாறி,பல பிறவிகள் எடுத்து மனிதனாய்
ஜனித்து,உன் பூர்வீக தாய் யாரென்று கேட்க்கிறாய் அல்லவா குடிமகனே?

உன் கேள்விக்கு பதிலை நீயே கண்டுபிடித்திடுவாய்  உடனே என் மகனே!
மற்றவர்களை போல் இல்லாமல் ,சிந்தித்து  செய்வாய் உன் சாதனையை.

கண்ணனுக்கு மட்டும் தெரிகின்ற அத்தனை பிறவி  கர்மாக்களை பற்றி,
மின்னல் போல மறக்க வைக்கிறான் நம்மை, நாம் திரும்பி பாராமல் இருக்க..


கண்ணனிடம் நீ கைகூப்பி  கேட்டிடுவாய் உன் கர்மாவின் பின் கதையெல்லாம்,
ஒன்று விடாமல் சொல்லிவிடுவான்  கண்ணன் நீ அவனிடம் சரணடைந்தால் .



                                                           சுபம்.
                                                           ..........                                        ஜெயம்.
                                                                                                            10-6-2012

Wednesday, 6 June 2012

கடலோட்டம் ஒரு சிணுகாட்டம்.

                       


வெளிநாடுகளில் வஸிக்கும் மனிதர்களின் தினசரி வழக்கம்?
தினமும் திரௌபதி வஸ்த்ராபஹரணம் செய்து தான் பழக்கம்.

அய்யய்யோ திரௌபதி வஸ்தராபஹரணம் செய்வது எப்படி?
அதுவும் வெளிநாட்டில் திரௌபதிக்கு என்ன வேலை அப்படி?

உன்னைப்போல் ஒரு அப்பாவியும் இருப்பார்களா இவ்வுலகில்? 
வீடடுக்கு வீடு பார்ப்போமே  த்ரோ -பேதி -இந்த டோயலட்ரோல்.

காலையில் எழுந்ததும் தொடங்கிவிடும்  வஸ்த்ராபஹரணம் ,
ஆளுக்கு ஆளாக இழுத்திடும் டோயலேட் ரோள்ளபஹரணம்.

ஒரு ரோல் முடிந்தபின்  மற்றொரு  ரோல்லின் ஆவாஹனம்,
சத்தமே போடாமல் இழுத்திடும் மனிதனின் நித்ய அபயாசனம் .

மூட்டை மூட்டையாக வந்தெறங்கும் டோயலேட் ரோளுகள் ,
கொட்டை எழ்த்துடன் வாங்கி அடுக்குகிறான் ச்டோரூமுக்குள்.

இந்த ஒரு சாண் வயட்டிற்க்கு  நமக்கு இத்தனையும் தேவையா?
எட்ட்ருமதியும் இறக்குமதியும் இருக்கின்ற வரை நோ அதர் வே .

பொறந்த குழந்தைக்கு கூட டயபர் என்றோன்னு போடறாங்களே,
அந்த குழந்தையும் எப்பவும் போவது ட்ரோப்-பேதி -இன்னில் தானா?

டயபர் போட்டால் அப்பா அம்மாவின் டிரஸ் அசிங்கம் ஆகாது.
அனால் பாவம் அந்த குழந்தையின் பாரமோ தாங்க முடியாது.


முகமெல்லாம் சிவந்து விறயலுடன் குழந்தை போடுமே ஓர் அலறல்!
டயப்பறை கயற்றினதும்  குழந்தையின் முகத்தில் வருமே ஓர் ஆறுதல்.

கால்களை அடித்து தன் நன்றியை காட்டுவான் பாருங்கள் அது சூப்பர்.
அனால் அடுத்த நிமிடமே வந்துவிடும் அவன் எதிரி மற்றொரு டயபர்.

எப்போத்தான் எனக்கு கிடைக்கும்  டயப்பரில் இருந்து விமோசனம்?
தர்போதொன்றும் கிடையாது மவனே  அழுது என்ன பிரயோஜனம்?

அம்மாவிடம் கற்றுப்பேன்  நான் கூடிய சீகிரம் டோயலட் ட்ரைனிங்
அப்பறம் தான்  பார்ப்பீர்கள் நீங்கள்  எந்தன் செஷ்ட்டைகளின் பிகினிங் .

உன் செல் போன் வைக்கும் இடம் எனக்கு  தெரியும் அம்மா நிச்சயம்,
உன் செல்ல மகனை விட முக்யமா உனக்கு அந்த செல்போன் ,பத்திரம்.

பொழுது விடிந்ததும் நீ தேடுவாயே உன்  செல் போணை மொம்மரமாய்,
 பொழுது போகாமல் நின்றேனா,உடனே வந்தது ஓர் ஐடியா பம்பரமாய்.
சட்டென்று சென்றேன் எடுத்தேன் அம்மாவின்  செல்போணை
பட்டென்று போட்டு விட்டேன் அதை இங்க்லீஷ் கம்மோடில்.

அத்தோட விட்டேனா நான் என் துடிக்கும்  செஷ்ட்டையை
ஆசை தீர அமுத்திவிட்டேன் டோயலட்டின்  பிளஷ் பட்டணை .

பாட்டோன்றும் பாடினேன் நான்  அம்மாவின் காதருகே குயிலாட்டம்,
அம்மா உன் செல் போணோ கடலோட்டம் விடிஞ்சா தெரியும் சிணுக்காட்டம் .                                        சுபம்.
                                       ,,,,,,,,,,,,,                                                   ஜெயம்.
                                                                                                        7-6-2012.

Monday, 4 June 2012

விடாத பொறுப்பு..
             -----------------------------

பதினெட்டு வயதினில்  நுழைந்தேன் புகுந்த வீடு,
ஒரு ஹிந்து மஹா சமுத்திரம் அப்பா அந்த வீடு!!

கணவனின் கூட பிறந்தவர்களோ பன்னிரண்டு
வீட்டின் தோற்றமோ ஓர் கல்யாணமண்டபம்.

நாத்தனார்கள்  வருவார்கள் தன் கணவர்களுடன்,
குழந்தைகள் பட்டாளம் வீடெல்லாம் மழுமந்திரம்.

சமையல் செய்வதோ  மருமகளின் பொறுப்பு ,
சமையல் கட்டில் அடைந்து கிடக்கும் பிறப்பு.

காலை முதல் இரவு வரை அடுப்படியில் தவிப்பு.
உடுத்திருக்கும் சேலையால் வேர்வையை துடைத்து,

அப்பாடீ என்று ஒருநிமிஷம் இடுப்பை நிமர்த்தினேன்,
வந்துவிட்டதே குட்டி பட்டாளம் சமையல் அறைக்குள்.

முட்டை வடிவில் தட்டுகளை போட்டு கொட்டமடிக்கும்
குட்டி வாண்டுகளின் அட்டஹாசமோ என்னத்தை சொல்ல!

தட்டின் முன் உட்கார்ந்து வாண்டுகளின் அரட்டை அரங்கம்,
காகம் கூட்டில் கல் எறிந்ததுபோல் வரும் கரகரா சத்தம்.

சமைத்து வைப்பது எளிது,அனால் பரிமாறுவதோ சுத்தம்.!
சாப்பாட்டின் நடுவே வந்துவிடுமே வாண்டுகளின் யுத்தம்.

அடிபிடி சண்டை கைகலப்பு மூத்து தட்டெல்லாம் தெறிக்கும்,
 நான் பாடு பாட்டு சமைத்ததெல்லாம் பூ மழை போல் பறக்கும்.

சமையல் அறை முழுவதும் வெத்தும் பசயுமாக கிடப்பு,
வாரி தொடைத்து சுத்தம் செய்வதோ மருமகளின் பொறுப்பு.

வாண்டுகள் கச்சேரி முடிந்த பின் வருவது இன் லாஸ் பட்டாளம்,
அத்தனை பேருக்கும் பரிமாறி என் இடுப்புத்தான் கழண்டுவிடும்.

ருசியாக சமைத்தோம்,ருசியுடன் சாப்பிட்டார்கள் enpathum illai 
சாப்பாடா இது!உப்புக்கு சப்பாணி!சொல்வதில் குறைச்சலில்லை.

எப்போத்தான் விடுதலை கிடைக்கும் எனக்கு கடவுளே,
மைத்துனர் கொழுந்தனார் மனைவிகளுடன் சென்றதுபோல்?

கடவுளும் கண் திறந்தார்,கணவர் செல்கிறார் தலைநகரம்,
கூடவே மூட்டை முடிச்சுடன் செல்கிறேன் தனிக்குடித்தனம்
.
மூன்று செல்வங்களின் தாய் ஆகிவிட்டேன் அடுக்கடுக்காக,
கொழந்தைகளை வளர்த்தி கல்வி கொடுப்பது என் பொறுப்பு.

கல்வியும் கொடுத்தேன் நல்ல வேலையிலும்அமர்ந்தார்கள்.
கொழந்தைகள் மூவர்க்கும் திருமணம்  செய்து வைத்தேன்.

இத்துடன் விடவில்லையே ஒரு தாயின் பொறுப்புணர்ச்சி!
பேர குட்டிகளை பார்க்கும் பேபி சிட்டிங் என் அடுத்த நிகழ்ச்சி.

மகனும் ,மருமகளும் காலையில் வேலைக்கு கிளம்புவார்கள்.
நாரதர் போல் எப்பவும் காதருகில் செல் போன் இருக்கும்,

அவசரம் அவசரமாக குரை ஏற டிபின் உள்ளே இறங்கும்,
பக்கத்தில் காபியும் கையுமாய் தாய் சென்று நிற்ப்பாள்.

லஞ்ச் போகஸ் கையில் ஏந்தி இருவரும் ஒரே பாய்ச்சல்,
ஹெல்மெட் தரித்து ஸ்கூட்டரில் ஏறும் தினசரி ரிஹர்சல்.

வீடெல்லாம் பார்த்தால் அலங்கோலமாக கிடக்கும் காழ்ச்சி
ஒவ்வொன்றாய் சீரமைப்பது ஒரு தாயின் பொறுப்புணர்ச்சி.

மின்சாரத்தின் வரியோ உச்சாணியை தொட்டு விட்டது ,
ஆனால் அத்தனை லைட்டும் பானும் ஓட்டமாய் ஓடுது.

ஒவ்வொன்றாய் அணைக்கும் வேலையும் தாயின் பொறுப்பு,
சிக்கனம் தானே சேமிப்பின் தொடக்கம் இது என் எதிர்பார்ப்பு.

மருமகளாக வந்தேன்,மாமியார் ஆகியும் இன்றும் அதே ரோல் தான்
சிலநேரங்களில் சில முதியோர்களின் வாழ்க்கை அப்படித்தான்.

ஆரோக்யமாக இருக்கும் வரை கவலையே இல்லை நிச்சயம்,
நம் குடும்பத்திற்கு நாம் உதவுவதில் என்னதான் பெரிய அதிசயம்?

உயிர் இருக்கும் வரை உதவுவதுதான் என் மிக பெரிய லக்ஷியம்
என்னுயிர்க்குயிராய் நான் நேசிக்கும் என் குடும்பத்தின் ரகசியம்.

கடவுளே எனக்கு அளித்திடுவாய் ஒரு அனாயாசேன மரணம்,
பராச்ரயமின்றி வாழவேண்டும்,இது தான் என் நித்ய ஸ்மரணம்.

ஆலமரம் போல் துளிர்த்திட வேண்டும் என் குடும்ப களைகள்,
ஆணிவேர் போல் தாங்க வேண்டியது என் விடாத பொறுப்பு.
                                சுபம்
                             ,,,,,,,,,,,,,,,,,                                            ஜெயம்.
                                                                                          ,,,,,,,,,,,,,,,,

நடப்பின் ஞாபகம் .



பள்ளியில் படிக்கும் காலம்,அது ஓர் சுவர்ண காலம்,
யூனிபோம் இல்லாமலே பள்ளிக்கு போகும் நேரம்

பாவாடையும் ஜாக்கெட்டும் தன்னிஷ்டம் தரித்து,
சப்பலே இல்லாமல் பள்ளிக்கு போகும் சிட்டுக்கள்,

மழைக்காலம் வாந்தால் வீதி எல்லாம் கொழ கொழா
சேற்றில் கால் வைத்ததால் பாதமெல்லாம் வழ வழா .

முட்டுக்கு தண்ணீரில் பாவாடை தடுக்க நடந்திடும் ,
சிட்டுக்குருவிகள் போகின்ற பாதையோ வெகுதூரம்.

 ஒற்றையடி பாதையிலே நெல் விளையும் வயலினிலே
அடிமேல் அடி வைத்து சிட்டுக்கள் போகும் அழகைப் பார்.

கட்டெறும்பை போல் நகரும் சிறுமிகளின் நமிட்டு சிரிப்பு,
சட்டென்று திரும்பினால் குட்டைக்குள் விழிந்திடும் பிரமிப்பு.

தினசரி நடக்கும்  இந்த சிறுமிகளின்  ஒற்றையடி பாத யாத்திரை,
வருஷங்கள் பல ஆகியும் ஓர் புத்தம் புதிய அழியாத முத்திரை.

என்னை போல் என் தோழிகளும் நினைத்து பார்பார்களா பழசை?
பழசென்ன புதிதயும் கத கதையாக பேசுவோம் வா பைஸ் புக்கில்.

உன்னைத்தான் தேடுகிறோம் நாங்கள் பலநாளாய் பைஸ் புக்கில்,
வந்துவிட்டேன்  பைஸ் புக்கில் குடும்ப வரலாறை பேசுவோமா?
C போல்  அகந்திருந்த நம் நடப்பின் தூரம்  இப்போ O ஆகிவிட்டது,
பிரிவோம் சந்திப்போம் என்ற டீவீ சீரியல் போல் அல்லவா இருக்குது!
பாராத ஒருக்கா பார்த்தோமே ,பழகின பிறகும் பிரிந்தோமே?
இனி பிரிந்தால் பார்ப்போமா,மாட்டவே மாட்டோம் சொல்லட்டுமா?
                                        சுபம் .
                                      -------------                                    ஜெயம்,
                                                                                          5-6-2012

                                         

Saturday, 14 April 2012

ஜலக் ஜலக் பாயல் பஜே


 ஜலக்.ஜலக்.பாயல் பாஜே,எங்கிருந்து வருது இந்த சலங்கை சத்தம்?
 என் அம்மாவின் திரு முகம் பார்க்க நான் போடும் கொலுசு  சத்தம்


குட்டியும் கட்டையும் குளிர் அறியாது என்பது உண்மையா?
குட்டி தன் கால்களால் தொட்டிலில் அடிப்பதில் தெரியுமே!

காலையில் எழுந்ததும் கால் அடிப்பது என்னுடைய மந்திரம்,
அம்மாவை என்னருகில்,வரவழைக்கும் என்னுடைய தந்திரம்.

குளிராம் குளிரு,என் கால்களில் சாக்ஸ் போடவேண்டுமாம்,
பாழாய் போன குளிர் என்னை என்னதான் பண்ணிவிடுமாம்?

குல்லாவும்  மொஜாவும் போட்டாத்தான் பாஷணா?
போட விடமாட்டேன் பார் ஏன் அம்மாவை சுலபமா.

ப்ரீ ஆக விட்டாத்தான் என்னவாம் இந்த அம்மாக்கு,
வீட்டில் தான்  எப்பவும் ஏசியும் ஹீட்டறும் ஓடுதே!

குல்லாவை போட்டால்
நான் கைகளால் பிடிங்கிடுவேன்
ஒரு மோஜா போட்டதும் மறு மோஜா தெறிச்சிடும் காற்றிலே.

போட்டத்தையே போட்டு அம்மாவும்  களைத்திடுவாள்
இதுதாண்டா சாக்கு  என்று கட்டை விரலை சப்புவேன்.

கட்டை விரல் திடீர் என்று வாயில் இருந்து நழுவி விடும்,
பொத்தென்று கைகால் விழ,பேந்த பேந்த முழித்திடுவேன்,

ட்ரை ட்ரை ட்ரை எகைன்,அம்மா சொல்லி கேட்டிருக்கேன்,
வீண்டும் கால்களை தூக்கிவிட்டு  கட்ட விரலை பிடித்திடுவேன்.

பிடித்த விரலை விடாமல்  நான் பவிழ வாயில் நுழைத்திடுவேன்.
சுவாரஸ்யமாக சப்பும்போது குடும்பமே என்னருகில் கூடிவிடும்.

கிளிக் ,கிளிக் கட்டை விரலை சப்பும் போஸ் காமறாவில் பதிஞ்சாச்சு,    
இனி ஈமைலாக இந்த போஸில் நான் உலகம் சுற்றும் வாலிபையோ?

அய்யோ அம்மா வெட்கக்கேடு அனுப்ப வேண்டாம் யாருக்குமே,,
பெரியவள் ஆனால் அதை பார்த்து என் மானமெல்லாம்  போய்விடுமே!

போடாதே என் போட்டோவை பெயஸ் புக் என்றும் டைம் பாஸில்,
வம்பை தவிர ஒன்றுமே இல்லையே கண்டறாவி  இந்த பெயஸ் புக்கில்.

 போடி போ பைத்தியக்காரி,பத்தாம்பசலியைப் போல் பேசாதே ,
பள்ளிக்கு  போகும் பாப்பா கூட டச் ஸ்க்ரீன் கேக்கும் காலமிது.

கால சக்ரம்  மாறும் போது நடப்பதெல்லாம் ஓர் அதிசயமாம்.
தேசம் போல வேஷம் போட்டால் தேடி வருவது அத்ரிஷடமாம்

அம்மா தாயே விட்டு விடு என்னை என் மனம் போகும் போக்கிலே,
நான் விரும்பும் வாழ்க்கை எல்லாம் என் எள்ளுபாட்டியின் ஈறாவிலே.

மாட்டை  கெட்டி,பால் கறந்து  ஒரு கிராமதில்த்தான் வாழுவேன் நான்,
பச்சை மரமும்,பிச்சை கொடியும் கொஞ்சும் கிளியும் இருக்குமிடம்.

மாங்காய்,தேங்காய்,பலாக்காய் தொங்கும் இடமே எனக்கு சொர்க்கம்,தான்,
பாத்தி போட்டு கீரை வெதச்சு ,காய்கறி தோட்டம் போட்டுடுவேன் நான்.

வேண்டாம் கண்ணே வீண் பிடிவாதம் தோட்ட கனவை மறந்துவிடு,
தோட்டம் போட்டு கொட்டை கெட்டும் மன கோட்டை சிதைந்துவிடும்.

மாட்டேன் தாயே விடமாட்டேன் நான் பசுமை நிறைந்த கிராமத்தை,
கூடிய சீக்ரம் தொடங்கிடுவேன் நான் புத்தம் புதிய பழமுதிர் சோலை!!!

                          சுபம்                                                    ஜெயம் .
                          --------
                                                                                         15-4-2012.

Tuesday, 10 April 2012

சேயின் கொண்டாட்டம்,தாயின் திண்டாட்டம்.

                 சேயின் கொண்டாட்டம்,தாயின் திண்டாட்டம்.
                   ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
                            

ஆராரோ ஆரிராரோ ஆரடிச்சாளோ என் சித்திர பைங்கிளியை,
யாருமே  அடிக்காமல் அழுவதேனோ என்னுயிர் கின்கிணியே.

அடிச்சாத்தான்  அழவேண்டும் என்று யார் அம்மா சொன்னது?
அழுத பிள்ளை தான் தக்கும் என்று நீ தானே சொல்லுவாய்.

அழுத பிள்ளைக்குத் தான் பால் என்று அடிக்கடி சொல்வதும் நீயே,
அறிந்திருந்தும்  வீணாக  கவலை படுவதில்அர்த்தமேயில்லையே.

அழுவேன்  நான் ஜோராக  எனக்கு  பசி எடுத்தால் மட்டுமே,
அழும்போது மூச்சு தெணறி  எனக்கு காக்காய்  ஜீவன் போய் விடுமே.

என் அலறலை கேடடு என் அருமை தாய்   கொழம்பிப்  போய் நிற்பாளே ,
கரைப் வாட்டர் பாட்டிலுடன் என் கொள்ளுப்பாட்டியும்  ஓடி வருவாளே.

பாட்டி என்னை தன் மடியில் நேசுக்கி அமர்த்தி பாலாடயால்  போட்டுவாள்,
கரைப் வாட்டரின்  சுவையை ரசித்து சப்பு கொட்டி கொள்ளுவேன் நான்.

குளுப்பாட்டும் போது நான் பார்ப்பது என் தாயின் முகம் மட்டுமே ,
என் தாயின் அழகை  ரசிப்பதிலும் இருக்குதே  ஒரு தனி சுகம்.

என் தாயின் முகத்தை நான் கண் கொட்டாமல் பார்ப்பேனே,
என் தாயைப் போலவே  நானும் ஒரு அழகி தானோ என்னவோ.

 என் உடம்பெல்லாம்  எண்ணை தேய்த்து  மசாஜும் பண்ணுவாள்,
தோசையை திருப்புவது போல் என்னை திருப்பி திருப்பி போடுவாள்.

இதெல்லாம் இப்போ எனக்கு ஒரு புத்தம் புதிய அனுபவம் அல்லவா,
நான் பெரியவள் ஆனதும்  என்னை ஜிம்முக்கு அனுப்புவாய் இல்லையா?

என் முகத்தில் மட்டும் சோப்பு தேய்த்து கெடுக்காதே என் ரசனையை.
என் முகத்தை விட்டு,உடம்பெல்லாம் போடுவாய் சோப்பின் வாசனையை,

பஞ்சு டவலால் தொடைத்து என்னை பஞ்சு மெத்தையில் போடுவாள்,தாய்,
 குளித்த குசியுடன் தாயை பார்த்து போக்கவாயால் சிருப்பேனே ஆவலாய்.

ஜோஹன்சன் பவுடர் அப்பி என்னை மணக்க மணக்க செய்வாயே அம்மா,
ஆஹா!  கைகாலுகளை அடித்து விளையாடும் என்னை கொஞ்சம் பாரம்மா!

கண்ணில் மை இடுவது மட்டும் எனக்கு பிடிக்காத விஷயம்,
இரு கைகளாலும் தட்டி கெட்டுவேனே  நான் ஒரு கரிவேஷம்.

தலை வழியா சட்டைபோட்டால்,வீடே அதிரும் விஷயம்.
ஒரு கை எடுத்தால் மறு கை போய் விடும் எப்படி என் விஷமம்?

ஒரு வழியாக சட்டை போட்டு  விடுவாளே என் அம்மா பெருமூச்சு,
தோல்வி ஒப்புக்கொள்ளாமல் நானும் அலறுவேனே ஒரே மூச்சாய்.

என் கத்தலை கேடடு தாயே நீ என்னை அணைத்திடுவாய் மாறோட,
கழுத்தை திருப்பி பால் குடிக்க பசியுடன் தப்புவேனே நான் கூறோட.

ஆசை தீர பால் குடித்து தாயின் அணைப்பில் மயங்கிடுவேன் நான்.
என்னை கெட்டி அணைத்தவாறே என் தாயும் என் அழகை ரசித்திடுவாள்.
                                          சுபம்
                                      --------------
                                                                                ஜெயம் .
                                                                               11-4-2012.
                                                                               -----------------
 

Tuesday, 3 April 2012

சேயின் சேச்ட்டை

                           சேயின் சேச்ட்டை.
                         -----------------------------
திருமணம்  ஆகி வருஷங்கள் ஐந்து ஓடிவிட்டது,
தாய் ஆக வேண்டும் என்று மனம் ஏங்கி கொண்டது..

வேண்டினேன் கடவுளை இரவும் பகலுமாய்,
வேண்டுதல் அத்தனையும் செய்தேனே கடினமாய்.

கடவுளே கண் திறப்பாய்,பிறப்பாயா என் குழந்தையாய்
அழகும் ஆரோக்யமும் தீர்காயுச்சும் முழும்மையாய்.

ஆடுவேன் பாடுவேன் உனக்காகவே வாழுவேன்
உன்னை வளர்த்தி ஆளாக்கி  அறிவையும் ஊட்டுவேன்.

வந்துவிடு குழந்தாய்,என் வயற்றில்  கனியாய்,
பழமாகி விட்டதும் நீ  வெளியே வந்துவிடு  தனியாய்.

நீ ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
கடவுளின் பிரசாதமாய்  கருதுவேன்  நான் எந்நாளும்.


வந்துவிட்டேன் தாயே நீ அறியாமல் உன் வயற்றில் ,
காத்திரு பொறுமையாய்,என் வாஸம் முடியும் வரை,

நீ போடும் கீர்த்தனைகள் கேள்க்கிறேன்  நான் ஆனந்தமாய்
நீ போடும் கூச்சலையும் கேட்க்கிறேன் நான் கவனமாய்.

நான் பிறந்ததும் என் தாய் எனக்காக மட்டும் தான்,
என்னை விட்டு ஒருபொழுதும் நகரவும் விடமாட்டேன் .

படா பாடு படுத்துவேன் பார் உன்னை நான் தினம்தோறும்,
கண்ணில் நீர் வராமலே அலறி அடிச்சு அழுவேன் நான்,

என்னாச்சு என்று தெரியாமல் திரு திருவென்று முழிப்பாய் நீ,
ஓரக்கண்ணால் உன்னை பார்த்து அழகுடன் சிரிப்பேன் நான்.

நீ பசியுடன் சாப்பிட உன்  தட்டின் முன்  உட்க்காருவாய்,
அசுர பசியுடன் அலறுவேன் நான் உன் போஜன சத்ருவாய்.

அய்யோ பாவம் குழந்தை பசியுடன் அழுவுதே,
பால் ஊட்டிவிட்டுத்  தான் மறுவேலை என்கிறாய்.

பால் குடிக்கும் போதே நான் பீச்சி விடுவேனே,மஞ்சளாய்,
செய்வதறியாமல்  கதி கலங்கி நிர்ப்பாயே ,நீ பஞ்சறாய்.

குடிப்பதை நிறுத்தினால் நான் க்ரீச் என்று அழுவேனே,
குடுப்பதா பால்,எடுப்பதா,தெரியாமல் ஒரு தாயின் தவிப்பு.

பக்கத்தில் நின்றிருக்கும் பாட்டியிடம் கை மாறுவேன்
பால் வழிந்த முகத்துடன் பவிழ வாயால்  சிரிப்பேனே.

குழந்தையோ பாட்டி மடியில் கோழி தூககம் போடுகிறாள்,
நேரத்தை வீணாக்காமல் மகளே நீ போஜனம்,சாப்பிடுவாய்.
                                          சுபம்
                                          ----------