இறங்கினோம் பரமனின் தனி வீடு வாங்கும் வேட்டையில் .
காலை ஒன்பது மணியியில் இருந்து மாலை ஏழு மணி வரை,
சனிதோறும் ஓபன் ஹவுஸ் வேட்டையில் இறங்கினோம்.
கையில் கட்டி சாதமும் ,இட்டலி சாம்பாறும் புளியோதரையும் ,
ரவாகேசரியும் மற்று பல பழங்களும் ஏந்தி உல்லாச பயணம் போல்.
வீடு வீடாய் இறங்கி ஏறினோம் ஓபன் ஹவுஸ் நடக்கும் வேளையில்,
வீடு எல்லோருக்கும் பிடித்திருந்தால் விலையோ வானத்தை தொடுது,
மற்று சில வீடுகள் மலையில் பாறாங்கல்லில் பணிதிருக்கிறார்கள் ,
ஏறி போகும் படிகெட்டுகளோ கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை,
அப்பாடா என்று மூச்சை பிடிச்சு ஏறி வாந்தால் பார்பதோ ஓர் அதிசயம் ,
யானை அளவில் ஒரு பாறாங்கல் சுவரில் முழைத்து காணும் பரவசம்..
திரைபடத்தில் காணும் பிளாஸ்டர் ஒப் பாரிஸ் கல்லோ? என் சந்தேஹம்,
தொட்டு பார்த்தேன் நல்ல சோலிட் கல்லென்று சொல்லித்து மனகோசம் .
வரும்போது தமிழ் கடையில் ஒரு குடுமி தேங்காய் தயங்கி வாங்கினேன்,
முழைத்திருக்கும் பாறாங்கல்லில் குடுமி தேங்காயை ஓங்கி தட்டினேன் .
ஆஹா , தந்தம் போல் முத்து பல்களை காட்டி தேங்காயும் சிரித்தது,
பாறாங்கல்லில் தும்பிக்கை செதுக்கலாமா என்று மண்டை வெடித்தது.
வேண்டாம் வீண் வம்பு என்று உடைத்த தேங்காயுடன் வேகமாக நடந்தேன்,
காறில் பொய் உட்கார்ந்து கத்தியால் தேங்காயை பத்தை போட்டு கீறினேன்.
சொக்ளைட்டை பொடித்து தேங்காய் கீததை ஒத்திக்கொண்டு,புஜித்தோம்
இதே நம் நாட்டில் இருந்தால்,புள்ளையாருக்கு கோயில் கெட்டி பஜிப்போம் .
எங்களுக்கு எல்லாம் வீடு பிடித்திருந்தால் பரமனுக்கு ஏனோ பிடிக்காது.
ஏதோ நொண்டி காரணம் சொல்லியே பரமன் தட்டி கழித்துவிடுவான் .
தற்போது அவன் வசிக்கும் வீட்டையும் வித்து விட்டான் பரமன்,
வீட்டை விட்டு போகும் நெருக்கடி பக்கத்திலே நெருங்கி விட்டது.
நினைத்தது போல் பரமனுக்கு ஸ்வந்தம் வீடு ஒன்றும் அமையவில்லை,
ரசவடைன்னா ரசவடை சொல்லி வாடகை வீடொன்று அமைத்து கொண்டான்.
சத்தமே இல்லாத வீட்டில் தான் வசிக்க வேண்டும் என்று பரமனின் ஆசை,
அனால் அவன் குடிவந்த வீட்டில் கேள்பதோ மைன்ரோடின் டிராபிக் ஓசை.
ரோட்டில் போகும் கார்கள் கேட்டது பரமா உனக்கு பைத்தியம் பிடிக்குதா?
இல்லவே இல்லை என் பயித்தியம் எல்லாம் தெளிந்து ,தெளிவாகி விட்டேன்.
உங்கள் ரீங்கார சத்தம் எனக்கு பழகி சுருதி போல் அல்லவா த்வநிக்குது ,
இனிமேல் நீ இல்லாமல் நான் இல்லை சத்தமே தான் என் ஹம்ச த்வனி.
----------------------------- ------
சுபம் ஜெயம் .
4-11-2012
No comments:
Post a Comment