லஞ்சத்தை முழுங்கி ஏப்பம் விடுகிறாரா குண்டு குறுநரி?
போடும் சட்டையில் பித்தானுக்கு பித்தான் பெரிய () காப்
பாங்கில் இடமில்லாமல் தொப்பையில் தானோ ஸ்கோப் !
தொப்பையை தூக்கி நடக்கும் போஸே ஒரு தனி கவர்ச்சி
தொப்பை வெடித்துவிட்டால் லஞ்சத்துக்கு வரும் தளர்ச்சி.
போதாகுறைக்கு பொன்னியும் வந்தது போல் அல்லவா பேச்சு !
விவேகானந்தரும் தாவுத் இப்ராஹிமும் குணத்தில் ஒரே அச்சு!
லஞ்சத்தை முழுங்கி முழிகள் பிதுங்கி வார்த்தைகள் வதங்கி,
உலகமே எதிர்த்தாலும்,விடுவேனா என் பதவியை தயங்கி?
வெக்கமே இல்லையா அரசியல்வாதிகளின் வர்கத்தில்,
பணத்தை பதுக்கி,ஹரிச்ச்சந்திரன் ஆகிறார்கள் தர்க்கத்தில்.
மந்திரி பதவியில் இருந்து செய்வதோ வெறும் பரதூஷணம் ,
இதுக்காகவே சில பிறவிகள் வஹிப்பது மந்திரியின் பூஷணம்.
பாரத மக்களுக்கு வாழ்வதற்கு வழி தெரியாமல் திண்டாட்டம்.
மிக்சி வாஷிங் மெஷீன்,டிவி இருந்தும் கரண்டுக்கு போராட்டம்.
காஸ் ஒன்று இருந்தாலே வேளா வேளைக்கு அஹாரம் நிச்சயம்,
அதையும் குறைத்து மட்டயடி மகாதேவா அல்லவா தற்சமயம்.
மந்திரியும் பாரதத்தின் ஒரு பிரஜை தானே அல்லவா சொல்லுங்கள்,
அவர்கள் வீட்டிலும் காஸ் ஒரு கனக்க்ஷன் தானா என்று கேளுங்கள்.
சட்டம் எல்லாம் பொது ஜனங்களுக்கு மட்டும் தான் சொந்தமா?
மந்திரி ஆகிவிட்டால் அவர்களுக்கு இரண்டு கொம்பு பொந்துமா ?
ஒரு கட்சி மற்றொரு கட்சியை தாக்கி பேசுவது தான் தினசரி வேலை,
தனக்காக ஒதுக்கப்பட்ட வேலையை செய்ய யாரும் தயார் இல்லை.
அண்ணாவை போல் ஒரு மகான் லஞ்சத்தை எதிர்த்து போராடுகிறார்,
லஞ்சம் இல்லா ஒரு அன்னை தேசத்தை கொண்டுவர துடிக்கிறார்.
மக்களே நாம் எல்லாம் அண்ணாவுக்கு உறுதுணையாக இருப்போம் ,
களங்கம் இல்லா மனிதர்களை மந்திரிகளாக தேர்ந்து எடுப்போம் .
ஜெய் ஹிந்த் .
-------------------- சுபம் .
---------
ஜெயம் (8-11-2012 )
No comments:
Post a Comment