Monday, 4 June 2012

விடாத பொறுப்பு..
             -----------------------------

பதினெட்டு வயதினில்  நுழைந்தேன் புகுந்த வீடு,
ஒரு ஹிந்து மஹா சமுத்திரம் அப்பா அந்த வீடு!!

கணவனின் கூட பிறந்தவர்களோ பன்னிரண்டு
வீட்டின் தோற்றமோ ஓர் கல்யாணமண்டபம்.

நாத்தனார்கள்  வருவார்கள் தன் கணவர்களுடன்,
குழந்தைகள் பட்டாளம் வீடெல்லாம் மழுமந்திரம்.

சமையல் செய்வதோ  மருமகளின் பொறுப்பு ,
சமையல் கட்டில் அடைந்து கிடக்கும் பிறப்பு.

காலை முதல் இரவு வரை அடுப்படியில் தவிப்பு.
உடுத்திருக்கும் சேலையால் வேர்வையை துடைத்து,

அப்பாடீ என்று ஒருநிமிஷம் இடுப்பை நிமர்த்தினேன்,
வந்துவிட்டதே குட்டி பட்டாளம் சமையல் அறைக்குள்.

முட்டை வடிவில் தட்டுகளை போட்டு கொட்டமடிக்கும்
குட்டி வாண்டுகளின் அட்டஹாசமோ என்னத்தை சொல்ல!

தட்டின் முன் உட்கார்ந்து வாண்டுகளின் அரட்டை அரங்கம்,
காகம் கூட்டில் கல் எறிந்ததுபோல் வரும் கரகரா சத்தம்.

சமைத்து வைப்பது எளிது,அனால் பரிமாறுவதோ சுத்தம்.!
சாப்பாட்டின் நடுவே வந்துவிடுமே வாண்டுகளின் யுத்தம்.

அடிபிடி சண்டை கைகலப்பு மூத்து தட்டெல்லாம் தெறிக்கும்,
 நான் பாடு பாட்டு சமைத்ததெல்லாம் பூ மழை போல் பறக்கும்.

சமையல் அறை முழுவதும் வெத்தும் பசயுமாக கிடப்பு,
வாரி தொடைத்து சுத்தம் செய்வதோ மருமகளின் பொறுப்பு.

வாண்டுகள் கச்சேரி முடிந்த பின் வருவது இன் லாஸ் பட்டாளம்,
அத்தனை பேருக்கும் பரிமாறி என் இடுப்புத்தான் கழண்டுவிடும்.

ருசியாக சமைத்தோம்,ருசியுடன் சாப்பிட்டார்கள் enpathum illai 
சாப்பாடா இது!உப்புக்கு சப்பாணி!சொல்வதில் குறைச்சலில்லை.

எப்போத்தான் விடுதலை கிடைக்கும் எனக்கு கடவுளே,
மைத்துனர் கொழுந்தனார் மனைவிகளுடன் சென்றதுபோல்?

கடவுளும் கண் திறந்தார்,கணவர் செல்கிறார் தலைநகரம்,
கூடவே மூட்டை முடிச்சுடன் செல்கிறேன் தனிக்குடித்தனம்
.
மூன்று செல்வங்களின் தாய் ஆகிவிட்டேன் அடுக்கடுக்காக,
கொழந்தைகளை வளர்த்தி கல்வி கொடுப்பது என் பொறுப்பு.

கல்வியும் கொடுத்தேன் நல்ல வேலையிலும்அமர்ந்தார்கள்.
கொழந்தைகள் மூவர்க்கும் திருமணம்  செய்து வைத்தேன்.

இத்துடன் விடவில்லையே ஒரு தாயின் பொறுப்புணர்ச்சி!
பேர குட்டிகளை பார்க்கும் பேபி சிட்டிங் என் அடுத்த நிகழ்ச்சி.

மகனும் ,மருமகளும் காலையில் வேலைக்கு கிளம்புவார்கள்.
நாரதர் போல் எப்பவும் காதருகில் செல் போன் இருக்கும்,

அவசரம் அவசரமாக குரை ஏற டிபின் உள்ளே இறங்கும்,
பக்கத்தில் காபியும் கையுமாய் தாய் சென்று நிற்ப்பாள்.

லஞ்ச் போகஸ் கையில் ஏந்தி இருவரும் ஒரே பாய்ச்சல்,
ஹெல்மெட் தரித்து ஸ்கூட்டரில் ஏறும் தினசரி ரிஹர்சல்.

வீடெல்லாம் பார்த்தால் அலங்கோலமாக கிடக்கும் காழ்ச்சி
ஒவ்வொன்றாய் சீரமைப்பது ஒரு தாயின் பொறுப்புணர்ச்சி.

மின்சாரத்தின் வரியோ உச்சாணியை தொட்டு விட்டது ,
ஆனால் அத்தனை லைட்டும் பானும் ஓட்டமாய் ஓடுது.

ஒவ்வொன்றாய் அணைக்கும் வேலையும் தாயின் பொறுப்பு,
சிக்கனம் தானே சேமிப்பின் தொடக்கம் இது என் எதிர்பார்ப்பு.

மருமகளாக வந்தேன்,மாமியார் ஆகியும் இன்றும் அதே ரோல் தான்
சிலநேரங்களில் சில முதியோர்களின் வாழ்க்கை அப்படித்தான்.

ஆரோக்யமாக இருக்கும் வரை கவலையே இல்லை நிச்சயம்,
நம் குடும்பத்திற்கு நாம் உதவுவதில் என்னதான் பெரிய அதிசயம்?

உயிர் இருக்கும் வரை உதவுவதுதான் என் மிக பெரிய லக்ஷியம்
என்னுயிர்க்குயிராய் நான் நேசிக்கும் என் குடும்பத்தின் ரகசியம்.

கடவுளே எனக்கு அளித்திடுவாய் ஒரு அனாயாசேன மரணம்,
பராச்ரயமின்றி வாழவேண்டும்,இது தான் என் நித்ய ஸ்மரணம்.

ஆலமரம் போல் துளிர்த்திட வேண்டும் என் குடும்ப களைகள்,
ஆணிவேர் போல் தாங்க வேண்டியது என் விடாத பொறுப்பு.
                                சுபம்
                             ,,,,,,,,,,,,,,,,,                                            ஜெயம்.
                                                                                          ,,,,,,,,,,,,,,,,

No comments:

Post a Comment