இந்த உலகமே துளும்பி வழியுது பெரும் மக்கள் துகையால்,
அந்த ஒவ்வொரு மனிதனும் ஜனிப்பது ஒரு தாயின் வழியாய்.
எத்தனை ஜன்மங்கள்,எத்தனை பிறவிகள்,யார் நம் முதல் தாய்?
பித்தனை போலவே பித்து பிடித்திடும் சிந்திக்க வைத்திடும் மெய்.
அதிசயம் இல்லையா இந்த ஸ்ருஷ்ட்டியின் பொல்லாத ரகசியம்?
பரஸ்யம் இல்லாமலே அந்த உண்மையை தேடுவேன் நிச்சயம்.
புழுவாய்,பூச்சியாய்,எறும்பாய்,
அப்பவும் என் ஜனனத்துக்கு காரணம் ஒரு தாய் தான் அல்லவா?
புழுக்கம் தாங்காமல் ஸ்வயம்பூ ஆக சேற்றில் உதிக்கும் ஒரு புழுவாய்,
புழுவிலிருந்து பிறவி எடுத்தவள் தானோ என்னவோ நம் முதல் தாய்!
புழுவாய் பிறந்து,வழி வழியாக மாறி,பல பிறவிகள் எடுத்து மனிதனாய்
ஜனித்து,உன் பூர்வீக தாய் யாரென்று கேட்க்கிறாய் அல்லவா குடிமகனே?
உன் கேள்விக்கு பதிலை நீயே கண்டுபிடித்திடுவாய் உடனே என் மகனே!
மற்றவர்களை போல் இல்லாமல் ,சிந்தித்து செய்வாய் உன் சாதனையை.
கண்ணனுக்கு மட்டும் தெரிகின்ற அத்தனை பிறவி கர்மாக்களை பற்றி,
மின்னல் போல மறக்க வைக்கிறான் நம்மை, நாம் திரும்பி பாராமல் இருக்க..
கண்ணனிடம் நீ கைகூப்பி கேட்டிடுவாய் உன் கர்மாவின் பின் கதையெல்லாம்,
ஒன்று விடாமல் சொல்லிவிடுவான் கண்ணன் நீ அவனிடம் சரணடைந்தால் .
No comments:
Post a Comment