புத்தம் புதிய வீடு,பளங்குபோல் பளபளக்கும் டயில்ஸ்,
பிரமாண்டமான கிச்சென்,தேக்கில் இழைத்த வாசக்கால்
விசாலமான பெட் ரூம்ஸ் ஒவ்வொன்றுக்கும் தனி பாலக்கனி,
எதிரும் புதிரும் ப்ளாட்டுகள் ,எனக்கு வம்பு பேச நல்ல கம்பனி.
குடித்தனம் வந்தோம் புது வீட்டிற்கு நாங்கள் இருவரும்,
வெளிநாட்டில் இருந்துவிட்டு பசங்களுடன் பலவருஷம்.
சென்னை மண்ணில் அவர் பாதம் பதிஞ்ச அடுத்த நிமிஷமே
என் கணவரில் கண்டேன் நான் அவர் நடையில் ஒரு மிடுக்கு.
கால் வலியால் துடிதுவிட்டார் அவர் வெளிநாட்டின் குளிரில், வலியெல்லாம் மயமாய் மறைந்தது தமிழ்நாட்டின் கத்திரியில்.
என் கணவன் காட்டும் சுறுசுறுப்பில் நான் மெய் மறந்தேன்,
கையில் காப்பியுடன் கணவரை கண்டதும் கண் திறந்தேன்.
பல் தேக்க வேண்டாம் ,பெட் காபி குடிப்போமா நாமிருவரும்?
தேள் கொட்டினாப்போல் வாய் பொத்தி நின்றேன் அதிர்ச்சியில்!!
வாசல் கதவை திறந்தேன் ,தெரிந்தது பளிச்சென்று மாக்கோலம்.
நம்பவே முடியாமல் சமையல் அறைக்கு சென்றேன்,அமக்களம்,
மேடையில் பார்த்தால் சமையலே முடித்த மாதிரி அல்லவா தோற்றம்,
சாம்பாறும்,பொரியலும் அப்பளமும் பொரித்து,கண்டேனே ஒரு மாற்றம்.
தொட்டியில் போட்ட பாத்திரங்கள்,எல்லாம் வாஷாகிவிட்டது ட்ரேயில்
துணிகள் அத்தனையும் மடித்து முடித்து அடுக்கி இருக்குது பீரோவில்.
ராதாவை கூப்பிட்டு செல் போனில் பேசினேன் என் கணவரின் மாற்றத்தை
பொல்லாத கனவில் தான் நீ பெத்துகிறாய் என்றாள் அவள் சந்தேகத்துடன்.
சந்தேக பேர்வழி நீ தாண்டி ராதா, என் கணவரை போல் ஒரு உத்தமர் இல்லை,
வாடீ என் தொழீ,உனக்கு சந்தேஹமிருந்தால் என் வீட்டிற்கு வந்து தான் பாரேன்.
கொசு ஒன்று கடிக்க,பட்டென்று நான் அடிக்க செத்து விழுந்தது அந்த கொசு,
கொசுவலையில் சிக்கி தப்பிக்க முடியாமல் உயிரை விட்டது அந்த கொசு.
மணி ஆகி விட்டதோ! தவறாமல் வந்துவிடும் ஜனலோரம் காக்காவின் சத்தம்,
கண்விழித்து கொண்டேன்,காலை காப்பிக்காக ஏங்கி நிற்கும் கணவரின் முகம்.
அப்பாடி ,கண்விழித்தாயா ஒருவழியாய், டைம் என்ன ஆச்சு என்று தெரியுமா,
கணவனை மறந்து அப்படி என்ன தூககம்,கனவேதும் கண்டாயா இன்பமாய்?
அய்யோ நான் கண்டது அத்தனையும் கனவா! என் காலை கனவு பலிக்காதா?
தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை,என்னிடம் உன் கனவு ஒருநாளும் பலிக்காது.
சுபம்.
............. ஜெயம் .
10-6-2012.
No comments:
Post a Comment