பள்ளியில் படிக்கும் காலம்,அது ஓர் சுவர்ண காலம்,
யூனிபோம் இல்லாமலே பள்ளிக்கு போகும் நேரம்
பாவாடையும் ஜாக்கெட்டும் தன்னிஷ்டம் தரித்து,
சப்பலே இல்லாமல் பள்ளிக்கு போகும் சிட்டுக்கள்,
மழைக்காலம் வாந்தால் வீதி எல்லாம் கொழ கொழா
சேற்றில் கால் வைத்ததால் பாதமெல்லாம் வழ வழா .
முட்டுக்கு தண்ணீரில் பாவாடை தடுக்க நடந்திடும் ,
சிட்டுக்குருவிகள் போகின்ற பாதையோ வெகுதூரம்.
ஒற்றையடி பாதையிலே நெல் விளையும் வயலினிலே
அடிமேல் அடி வைத்து சிட்டுக்கள் போகும் அழகைப் பார்.
கட்டெறும்பை போல் நகரும் சிறுமிகளின் நமிட்டு சிரிப்பு,
சட்டென்று திரும்பினால் குட்டைக்குள் விழிந்திடும் பிரமிப்பு.
தினசரி நடக்கும் இந்த சிறுமிகளின் ஒற்றையடி பாத யாத்திரை,
வருஷங்கள் பல ஆகியும் ஓர் புத்தம் புதிய அழியாத முத்திரை.
என்னை போல் என் தோழிகளும் நினைத்து பார்பார்களா பழசை?
பழசென்ன புதிதயும் கத கதையாக பேசுவோம் வா பைஸ் புக்கில்.
உன்னைத்தான் தேடுகிறோம் நாங்கள் பலநாளாய் பைஸ் புக்கில்,
வந்துவிட்டேன் பைஸ் புக்கில் குடும்ப வரலாறை பேசுவோமா?
C போல் அகந்திருந்த நம் நடப்பின் தூரம் இப்போ O ஆகிவிட்டது,
பிரிவோம் சந்திப்போம் என்ற டீவீ சீரியல் போல் அல்லவா இருக்குது!
பாராத ஒருக்கா பார்த்தோமே ,பழகின பிறகும் பிரிந்தோமே?
இனி பிரிந்தால் பார்ப்போமா,மாட்டவே மாட்டோம் சொல்லட்டுமா?
சுபம் .
------------- ஜெயம்,
5-6-2012
No comments:
Post a Comment