பரமனின் கூரையில் சரமாரியாக கொட்டிதீர்த்தது கூழாங்கல் மழை,
குப்பனின் கோபமும் கொலைவெறியும் தான் இந்த கூழாங்கல் மழை.
பரமன் பவித்ரனோ பதட்டத்தில் புகார் புகைத்தான் போலீசிடம்,
போலீசும் மொம்மரமாக தேடி அலைந்தது குப்பன் இருக்குமிடம்.
ஒருநாள் அவனை பிடித்துவிட்டார்கள் காவல் துறை திடீர் என்று,
சிறிதும் அவன் எதிர்பார்க்காமல் ஏர்போர்ட் அருகில் பதுங்கி சென்று.
போலீஸிடம் சிக்கி திக்கு முக்காடினான் பாவம் கொலைவெறி குப்பன்.
முட்டிக்கு முட்டி தட்டி விழுந்தான் அவன் வலி தாங்காமல் குபறகுத்தி.
குப்பனின் தகப்பனோ முழிகள் பிதுங்க துர்வாசாவாக மாறிவிட்டான் ,
பரமனை நோக்கி பழிக்கு பழி வாங்க படை எடுக்க துணிந்து விட்டான்.
உன் மரத்தின் வேரினால் வந்தது என் வீட்டில் மிக பெரிய விரிசல்.
மரத்தை வெட்டு,வேலியை கெட்டு,விடமாட்டேன் உன்னை எளிதில்.
கெட்டிவிடுவோம் வேலியை உயரமாக உனக்கும் எனக்கும் நடுவில்,
வேலியின் செலவு நாம் இருவருக்கும் சமம் என்றான் பரமன் முடிவில்.
குப்பனுடைய அப்பனும் வணங்கினான் வேலியின் செலவு வஹிக்க,
குப்பனும் நாய்களும் இனிமேல் பரமனின் கண்ணில் படாமல் இருக்க.
ஆள் உயரம் வேலி வந்தாலும் பரமனின் மனதில் இல்லையே நிம்மதி,
குள்ளனை நம்பலாம் குப்பனை நம்பாதே என்று எச்சரித்தது அவன் மதி.
எலியை பயந்து இல்லம் விற்ற நம்பூதிரியின் கதை போல் தோன்றுதே,
குப்பனை பயந்து பரமனும் வீட்டை விற்றுவிடுவான் போல் தெரியுதே!
பரமன் மாட்டிகொண்டு முழிக்கிறான் மிகவும் பெரிய தர்மசங்கடத்தில்,
வீட்டை விற்றுவிட்டால் இனி வாங்கும் புதிய வீட்டின் ராசி எப்படியோ!
பரமன் புது வீடு வாங்கும் வேட்டையில் இரவும் பகலுமாய் அலைந்தான்,
நம்பூதிரி துப்பலை மெதிச்ச கதையை நினைத்து கொஞ்சம் தயங்கினான்.
நம்பூதிரி தெருவில் நடந்தான் கால்களை தூக்கிவெச்சு மிக கவனத்துடன்,
எச்சிலை மெதிப்போமோ என்று பயத்துடன் நடந்தார் அவர் மிக நாசூக்காக.
கடைசியில் அவர் பாதங்கள் மிதிச்சதோ சபக் என்று ஓர் எச்சில்துப்பலில்,
தன் புது வீட்டிலும் வந்திடுமோ பிரச்சனை பயந்தது அவன் மனம்,கடுப்பில்!
கவலையுடன் தென்பட்டான் பரமன் தான் குடும்பத்தின் பாதுகாப்பை தேடி,
கடந்ததெல்லாம் கடுகளவு,வரப்போவதோ ஒரு மலையளவு பரமனை நாடி!
வாங்கினான் பரமன் பிளாட் ஒன்று புத்தம் புதிது, அடுக்கு மாடி கெட்டிடத்தில்
தூங்கினான் பரமன் நிச்ச்சலமாக குப்பனோ வேலியோ கனவில் தென்படாமல்.
No comments:
Post a Comment