சேயின் சேச்ட்டை.
-----------------------------
திருமணம் ஆகி வருஷங்கள் ஐந்து ஓடிவிட்டது,
தாய் ஆக வேண்டும் என்று மனம் ஏங்கி கொண்டது..
வேண்டினேன் கடவுளை இரவும் பகலுமாய்,
வேண்டுதல் அத்தனையும் செய்தேனே கடினமாய்.
கடவுளே கண் திறப்பாய்,பிறப்பாயா என் குழந்தையாய்
அழகும் ஆரோக்யமும் தீர்காயுச்சும் முழும்மையாய்.
ஆடுவேன் பாடுவேன் உனக்காகவே வாழுவேன்
உன்னை வளர்த்தி ஆளாக்கி அறிவையும் ஊட்டுவேன்.
வந்துவிடு குழந்தாய்,என் வயற்றில் கனியாய்,
பழமாகி விட்டதும் நீ வெளியே வந்துவிடு தனியாய்.
நீ ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும்
கடவுளின் பிரசாதமாய் கருதுவேன் நான் எந்நாளும்.
வந்துவிட்டேன் தாயே நீ அறியாமல் உன் வயற்றில் ,
காத்திரு பொறுமையாய்,என் வாஸம் முடியும் வரை,
நீ போடும் கீர்த்தனைகள் கேள்க்கிறேன் நான் ஆனந்தமாய்
நீ போடும் கூச்சலையும் கேட்க்கிறேன் நான் கவனமாய்.
நான் பிறந்ததும் என் தாய் எனக்காக மட்டும் தான்,
என்னை விட்டு ஒருபொழுதும் நகரவும் விடமாட்டேன் .
படா பாடு படுத்துவேன் பார் உன்னை நான் தினம்தோறும்,
கண்ணில் நீர் வராமலே அலறி அடிச்சு அழுவேன் நான்,
என்னாச்சு என்று தெரியாமல் திரு திருவென்று முழிப்பாய் நீ,
ஓரக்கண்ணால் உன்னை பார்த்து அழகுடன் சிரிப்பேன் நான்.
நீ பசியுடன் சாப்பிட உன் தட்டின் முன் உட்க்காருவாய்,
அசுர பசியுடன் அலறுவேன் நான் உன் போஜன சத்ருவாய்.
அய்யோ பாவம் குழந்தை பசியுடன் அழுவுதே,
பால் ஊட்டிவிட்டுத் தான் மறுவேலை என்கிறாய்.
பால் குடிக்கும் போதே நான் பீச்சி விடுவேனே,மஞ்சளாய்,
செய்வதறியாமல் கதி கலங்கி நிர்ப்பாயே ,நீ பஞ்சறாய்.
குடிப்பதை நிறுத்தினால் நான் க்ரீச் என்று அழுவேனே,
குடுப்பதா பால்,எடுப்பதா,தெரியாமல் ஒரு தாயின் தவிப்பு.
பக்கத்தில் நின்றிருக்கும் பாட்டியிடம் கை மாறுவேன்
பால் வழிந்த முகத்துடன் பவிழ வாயால் சிரிப்பேனே.
குழந்தையோ பாட்டி மடியில் கோழி தூககம் போடுகிறாள்,
நேரத்தை வீணாக்காமல் மகளே நீ போஜனம்,சாப்பிடுவாய்.
சுபம்
----------

No comments:
Post a Comment