Monday, 3 October 2011

நரபலி .

   .
                                                           

ஏதுக்கு இத்தனை கோபம் உனக்கெந்தன் மேல் அய்யா?
மோதிக்கு தொப்பி பரிசளித்தவரும் மனிதன் தானய்யா!! 

ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை  அல்லவா சத்பாவனையின் அர்த்தமே!
தொப்பி வேண்டாம் பொன்னாடை தாரும் ,சொல்வது சத்பாவனையா ? ச்வார்த்தமா?

உண்மையை காட்டி கார்ட்டூன் வரைத்தால்,
அது குற்றம்,என்று அரசாங்கம் நினைத்தால்?

குற்றம் உள்ள நெஞ்சம் குறு குறு என்கிறது.
குறுக்கே வந்தவனை சிறைக்குள் எறிகிறது.

சஞ்சீவ் பட் நடந்த உண்மையை சொன்னார்,
தெளிவும் அவர் கைவசம் இருக்குது என்றார் .

பதவி போய்விடும் என்ற பயமோ என்னவோ
சஞ்சீவை சிறையில போடும்  நோக்கமோ ?

நம்ம பாரதம் உண்மையில் ஜனநாயகமா?
எதிர்த்தவன் உயிருக்கே கொலை நடுக்கமா!!

பதவி பிரமாணம்!!சொல்வதெல்லாம் கம்பீரமே!
பதவியில் வந்ததும் செய்வதெல்லாம் விபரீதமே!

மக்களின் திண்டாட்டம் சாப்பாட்டு பஞ்சம்,
மந்த்ரியின் கொண்டாட்டம்,கைநீட்டி லஞ்சம்.

குட்டை குளம் அத்தனையும்  அடுக்கு மாடியாய் மாறுது,
மழை இல்லாமல் பூமியும் வறண்டு வெடித்து போகுது.

தண்ணீர் மட்டம் இறங்கி போய் ,குடிக்க தண்ணீர் குறையுது,
கடல் தண்ணீர் உள்ளே புகுந்து  உப்பு தண்ணீர் ஏறுது..

தாய் மண்ணை வெட்டி கீறி ஒபரேஷன் நடக்குதே,
மண்ணெல்லாம் தோண்டி நோண்டி வெளிநாட்டுக்கு கடக்குதே!

பூமி தன் விதியை நினைத்து பார்த்து விழிக்கிறாள்,
கொடுமை தாங்காமல் குலுங்கி குலுங்கி அழுகிறாள்.!!!

கலியுகத்தின் கண் கண்ட காட்சிதான்  நரபலி  ,
பூகம்பம் தாக்கும் இயற்கையின் எதிரொலி!!
சுபம் .
ஜெயம்.
2-10-2011

 

No comments:

Post a Comment