எர்ணாகுளம் என்று அழைக்கும் அழகான ஊரு,
வெள்ளைக்காரன்,குடியிருந்த சின்னம் சிறு நாடு..
சித்தூர் ரோடில் எங்கள் ஒட்டுப்பெரை வீடு,,
நான் பிறந்து வளந்து வந்த வெள்ளை மணல் நாடு ,
.நான் படித்த பள்ளிக்கூடம்,மாமா வீட்டு பக்கம்,
மத்தியானம் பெல் அடித்தால்,மாமா வீடு போவேன்,
மாமியோ எனக்காக வாசலிலே நிப்பாள்,
ஆசையாக சாதம் பிசைந்து கையிலே குடுப்பாள்.
அஞ்சாம் வகுப்பில் படிக்கும்போது நடந்த இந்த சம்பவம்,
இப்போது நினைக்கும்போதும் வருதே எனக்கு சங்கடம்.
பாட புஸ்தகத்தில் வரும் குள்ளநரியின் சிறுகதை,
வால் இருக்கும் ஒரு படம்,வாலில்லாமல் ஒரு படம்.
கல்யாணியும் பார்வதியும் இரட்டை பிறவிகள்,
நீளமான முடியும் பின்னி இருவரும் வருவார்கள்.
திடீர் என்று கல்யாணிக்கு காச்சல் ஜவரம் வந்தது,
அவள் வீட்டில் அவள் தலையை மொட்டை போட்டு விட்டார்கள்.
மொட்டைதலை கல்யாணியோ பள்ளிக்கூடம் வந்தாள்,
அவளை பாத்து நானும் நமிட்டு சிரி சிரித்தேன்.
திடீர் என்று வந்தது எனக்கு குள்ளநரியின் ஞாபகம்.
வாலு போன குள்ளநரியும் கல்யாணியும் ஒன்று.
வாலிருக்கும் குள்ளநரியும் பார்வதியும் ஒன்று.
படத்தை காட்டி பக்கத்திலிருக்கும் சாரு விடம் சொன்னேன்,
சண்டைக்காரி சாருவோ அமைதியாக கேட்டாள்.
மத்தியானம் லஞ்சுக்காக பெல் அடித்துவிட்டது.
நானும் என் பாகுடன் மாமாவீடு சென்றேன்.
திரும்பி வந்து என் பெஞ்சில் அமைதியாக அமர்தேன் ,
சித்தநேரம் கழித்து வந்தாள் டீச்சரும் ஒரு கம்புடன்.
யார் அந்த ஜெயலக்ஷ்மி ,உடனே வா என் பக்கம் ,
போச்சு போ சண்டைக்காரி சாருவின் திருவிளயாடளிது.
எப்படியும் சமாளிப்போம் பொய்யொன்று சொல்லி.
சொன்னாயா சாருவிடம் கல்யாணியை பத்தி?
இல்லவே இல்லை டீச்சர் ,சாரு தான் சொன்னாள்,
யாரிடவும் சொல்லாதே என்றும் என்னிடம் அவள் சொன்னாள்.
வாலு போன குள்ளநரி மொட்ட தலை கல்யாணியாம்,
வாலிருக்கும் குள்ளநரி முடியிருக்கும் பார்வதியாம்.
என் அப்பாவி முகத்தை பார்த்து நம்பிவிட்டாள் டீச்சறும்,
சாருதான் பொல்லாதவள் என்று டீச்சர் நம்பினாள்.
சாப்பிட்டு , திரும்பி வந்தாள் சாரு மிக குஷியுடன்,
வெளியிலேயே ,நில் என்றாள் சாருவிடம் டீச்சரும் .
நூத்தெட்டு ஹக்கி போடவேண்டும் என்றும் சொன்னாள்.
சாருவோ பாவம் ,அவள் விக்கி விக்கி அழுதாள்,
நூத்தெட்டு ஹக்கி போட்டு காலும் கையும் வலித்தது.
அபமானம் தாங்காமல் முகம் பொத்தி நின்றாள்.
செய்யாத குற்றத்திற்கு சாரு பலியாகினாள் செஞ்ச தவறை நினைத்து நினைத்து,கூனி குறுகி நின்றேன்.
ஜெயம்
2-6-2011
No comments:
Post a Comment