Monday, 13 June 2011

பூச்சி.

புக்கொன்று எடுத்தேன் ,கதவை தாழிட்டேன்,
டோயலேட்டில் அமர்ந்தேன்,புக்கை  திறந்தேன்.

பூச்சி ஒன்று வந்தது,வளயம் வந்தது,
என் கண் மும்பில் ,வந்து  விளையாட்டு காட்டித்து.
பூச்சி தான் என்று பொறுமையில் அமர்தேன்,
திரும்பவும் என் விழி புஸ்தகத்தில் சென்றது

பூச்சியோ விடுமா துணைவியுடன் வந்தது,
இரண்டுமாய் சேர்ந்து தொந்தரவு செய்தது.

பூச்சிக்கு கொண்டாட்டம் ,எனக்கோ திண்டாட்டம்.
கை வீசி பிடித்தேன்,தப்பி சென்று விட்டது.

நிச்சயம் நான் உன்னை சும்மா விட மாட்டேன்,
இன்று  நீ உயிருடன் தப்பி செல்ல மாட்டாய் .

ரெண்டில் ஒன்று பார்ப்போம்,நீயா ,நானா  ,
வேண்டாம் வீண் வம்பு சாவாய் நிச்சயமா ..

பூச்சியும் வந்தது, படை எடுத்து வந்தது ,
புஸ்தகம் படிப்பயா,உனக்கு வேறே இடம் இல்லையா?

பூச்சியோ சொல்லித்து இது எங்கள் இருப்பிடம்,
யார்  இங்கே வந்தாலும் ஆக்ரமம் ,நிச்சயம்.

சண்டை பெருத்தது ,புஸ்தகம் நனைந்தது,
வந்த கார்யமோ ,நிறைவேறவில்லை.

எடுத்தேன் ஓட்டம் பூச்சியை பயந்து,
அழாத குறையா ,கதவை திறந்து.
ஜெயம்
28-5-2011



No comments:

Post a Comment