Monday, 20 June 2011

இக்கரைக்கு அக்கரை பச்சை.




பாலூட்டி வளத்த கிளி
பவிழ  வாய் அழகு கிளி !

கடல் கடந்து பறந்த கிளி,
 
வெளியூரில் மோஹம் கொண்டு,
ஓஹோ மரத்தில் ஏறி,
உச்சாணி கொம்பில் அமர்ந்து,
வா வா என்று கூவி கொண்டது.!

கூவல் கேட்ட  இஷ்ட ஜனங்கள்,
பெட்டி படுக்கை கெட்டினார்கள்
இக்கரைக்கு அக்கரை பச்சை என்று,
 
ஓடி வந்து  ஒட்டி கொண்டார்கள்.

வளத்த கிளியும் மனம் மகிழ்ந்து,
சொந்தங்களை அணைத்து கொண்டது.

 பிள்ளை பாசம் கொண்ட சொந்தம்
வங்கியில் பணம் போட்டு கொஞ்சம்,
கூப்பிட்ட குரலுக்கு உதவும் நெஞ்சம்,
தஞ்சம் புகுந்தவனுக்கு ஏது வஞ்சம்!
வீட்டு  வேலைக்கா  இங்கே  பஞ்சம்?

 
என்னுடன் தான் இருக்க வேண்டும்,
 தாய் நாடொன்றும் திரும்ப வேண்டாம்.

 சுத்தமான
காற்றும், பசுமையான ஊரும் ,
 வத்தாத ஆறுகளும் ,ஸ்படிகம் போல் தண்ணீரும் !
அழகழகா பூங்காவும் ,சுத்தமான வீதிகளும் பார்,!
ஒட்டுபெரை வீடுகளும்,பூத்து குலுங்கும் தோட்டங்களும்,

ஆறாய் ஒழுகுது, பார், பசுவின் பாலும் வெண்ணையும் இங்கே
 தரமான பழங்களும் தான் லாபமாக கெடக்கும் ,இங்கே.

எப்போதும் இருக்கும் அம்மா மின்சாரம் இந்நாட்டில்,
கரண்டு கட்டு ஒருபோதும் இல்லை அம்மா இவ்வீட்டில்,

அத்தனை அறைகளிலும் இருக்குதம்மா ,கம்ப்யூட்டர்
,
மனம் மகிழ பாக்கலாமே தமிழ் சீரியல் முழுக்க,முழுக்க.
தாய் நாட்டு  வார்த்தைகளும் படிக்கலாமே தவறாமல்.

போடோஷோப்பும் இருக்குதம்மா,சித்திரமும்   போடலாம்,,    
இனி என்ன வேண்டும் அம்மா உங்கள் பொழுது போவதற்கு,
யோகாப்யாசம் செய்து ,கொஞ்சம் ஒய்வு எடுத்து கொள்ளுங்கள் அம்மா.

சிக்கனமா வாழ்ந்து விட்டு காசு பணம் சேர்க்க வேண்டும்,
இந்நாட்டில் வசிப்பதற்க்கு, ஸ்வந்தம் வீடும் வாங்க வேண்டும்..

வேலைக்காரி தொல்லை ஒன்றும் இல்லவே இல்லை  இங்கே!       
நம் வீட்டு வேலையெல்லாம் நாமே தானே செய்யணம்.!.

தெருவுக்கு தெருவு, இங்கே, இஸ்திரி வண்டியும் இல்லை,  
மொத்தமாக இஸ்த்ரிஎல்லாம் நாமே தான் போடணம்.!                    

கார்  எடுத்து சென்று தான் மளிகை சமான் வாங்க வேண்டும்,
போனில் பேசி சொன்னால் ஒன்றும்  வீட்டுக்கு அனுப்ப மாட்டார்கள்..

காய்கறி வண்டி ஒன்றும்  வீட்டு  வாசல் வருவதில்லை.
சூப்பர் மார்கட் போகவேண்டும் காய்கறி எல்லாம் வாங்குவதற்கு.

வேலைக்கு போகிறார்கள் ஆணும் பெண்ணும் இங்கே,
அவங்கள் ஓடும் ஓட்டம்  பார்க்கும்போது வேதனை தான் போங்க.

திங்கள் முதல் வெள்ளிவரை பேச நேரம் இல்லை,
தாமரை இலை தண்ணீர் போல் இருக்கும் அவர்கள்  தோற்றம்.

சனி  ஞாயர்  வாந்தால் தான் வீடு  சுத்தம்  ஆகும்  
குடும்பத்தினருடன் பேசி பழக இரண்டு நாள் மட்டுமே!.

குறை ஒன்றும்  இல்லைதான் வெளிநாட்டு வழக்கை,
நிறைவேதும் இல்லையே நிஜமாக பார்த்தால்.

வெளிநாட்டில் இருக்கும்போது தாய் நாட்டின்
நினைவு,
தாய்நாட்டில் இருக்கும்போது வெளிநாட்டு கனவு.

கனவும் நினைவும் சேர்ந்து  நம்மை ,ஆட்டி வைப்பதும் மனமே,
இக்கரைக்கு அக்கரை பச்சை என்று   ஓட  வைப்பதும்   மனமே!

ஜெயம்
19-6-2011

No comments:

Post a Comment