Sunday, 12 June 2011

ஜனனி



ஜனனீ ,ஜனனீ  ஜகமே ஜனனீ .
மனிதனின்  உதயம்  ஜனனியின்  உதரம்,
மனிதனின் பிறவி  பூமியின்  உபரி,
மனிதனின் நிறைவு அவன்  சொந்த  தாய்.
மனிதனின் தெய்வம்  அவன் கண்ட தாய்.
மனிதனின் தாய் கண் கண்ட தெய்வம்.
பிறந்தான், வளந்தான்,படித்தான் ,உயர்ந்தான்,
அவனுக்கென்று ஒரு சிகரத்தில் அமர்ந்தான்.
அவனுடன் வாழ வந்தாள் ஒருவள்,
இருவருக்கும் பிறந்தார் இருவர் .

காலமே காலமே ,ஓடோடி போனாய்,
அவன் தாய் நீயும் முத்தாட்டி ஆனாய் .
ஐயோ பாவமே நீ என்ன செய்வாய் ,
உன்னால் இப்போ நடக்கவும் இயலாது .

உன்னை பார்ப்பதே இல்லையே உன் மகன்,
தாய் தினத்தன்றும் வரவில்லை யாரும்.
ஏங்கினாய் ஏங்கினாய் ஒரு தரம் பார்க்க,
பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.
முதியோர் இல்லத்தில் உன்னைப்போல் அனைவர்
பழைய  நினைவில்  வாழ்வார்கள்  அல்லவா?

முதியோர் இல்லத்தில் உன் மூச்சு நின்றதும்
உன் பக்கத்து கட்டில் முத்தாட்டி வருவாள்,
உன்னை பொத்தி வாக்கரிசி போடுவாள்,
உன்னை எடுத்து ஊர்வலம் செல்வார்.
ராம் நாம்  சத்தியமே  ,ராம் நாம் சத்தியமே . .

No comments:

Post a Comment