Monday, 13 June 2011

சமாதியாய் மாறிய சந்நிதி.


இதோ நம்ம  பூமி ,கோயில் நிறைந்த பூமி,
கோபுரமாம் கோபுரம் ,எங்க பாரு கோபுரம்.

என்னோடு வந்தார்கள் என் மகனும் குடும்பவும்,
வெளிநாட்டிலிருந்து வந்து தீர்த்தாடனம் செய்ய.

தமிழ்நாடு  முடிந்தப்பின்  கேரளாவும் போனோம்,
திருச்சூரில்   தோழி வீடு திருவம்பாடி சென்றோம்.

தேக்கின்காடு மைதானத்தில் சிவாலயம் ஒன்று,
வடக்குநாதன் என்ற  பேரில் பிரம்மாண்ட கோயில்.

பட்டையாக விபூதி இட்டு என் மகனும் வந்தான் ,
கூட்டத்துடன் கலந்து கோயிலுள்ளே நுழைந்தோம்.

சுத்தமான வேஷ்டியணிந்து கை கூப்பி நின்றான்,
பக்தியுடன்  கண்  மூடி ஜபம் எதோ செய்தான்.

சட்டென்று அவன் மனதில் எதோ  ஒன்று உதித்தது,
வேகமாக வந்து அவன் எங்களிடம் சொன்னான்.

இதோ பார்  இங்கே தான் ராமரின் சமாதி,
அந்தபக்கமோ  பக்த ஹனுமான் சமாதி.
அதோ பார் அதுதான் புள்ளையார் சமாதி,
பக்கத்திலே இருப்பதுதான் முருகன் சமாதி.

சிவ சிவ ,சிவ சிவ ,இதுதான் ஈசனின் சமாதி,
பின்பக்கம் போவோம் அங்கே பார்வதியின் சமாதி.

கண்ணை மூடி எல்லோரும் பிரார்த்தனை செய்தோம்,
சமாதியும் பார்த்தோம் நிம்மதியும் அடைந்தோம்.

இனி என்ன வேலை இங்கே வெளியே போகலாம்
சந்தன பிரசாதமும்  இலையில் வாங்கிகொண்டு.

வெளியே  வந்து நாங்கள்  கல்லில் அமர்ந்து  கொண்டோம்,
பொட்டி பொட்டி சிரித்தேன் குலுங்க குலுங்க சிரித்தேன்.

தட்டி கேட்டான் என் மகன் விஷயம் என்ன வென்று,
பொறுமை இல்லை அம்மா ஏனோ இந்த  சிரிப்பு.

சொல்லுவேண்டா  மகனே நீயும் சேர்ந்து சிரிப்பாய்,
உன்னுடைய பாஷை நீ அறிந்து கொண்டாய் அனால்.

ஸ்வாமிகள்  இருக்கும் இடம் சந்நிதியாம் மகனே,
சமாதி  அல்லவென்று  தெரிந்துகொள்  மகனே.

தெரிந்து கொண்டேன் அம்மா  இனி வாயை திறக்கமாட்டேன் ,
தப்பான  வார்த்தையால் , முந்திரிகொட்டை ஆட்டம்.

ஜெயம்
30-5-2011

No comments:

Post a Comment