Monday, 13 June 2011

சொறி நாய்

பக்கத்து காம்பௌண்டில்  சொறி  நாய் ஒன்று வந்தது,
மோப்பம் பிடித்து  குழி ஒன்று தோண்டியது.


ஜநெல்  வழியாக  நான் வேடிக்கை    பார்த்தேன்         
நாய்  ஒரு  நிறைமாச தாய் என்றறிந்தேன் .

வாடிய முகத்துடன் குழியில் படுத்தது,
பத்தே நிமிஷத்தில் குஞ் எட்டு போட்டது.

குஞ்சுகள்  எட்டும் மாம்ஸ பிண்டங்கள்,
கண் திறக்காமலே பால் ஊட்டி கொண்டது.

தாயோ பெருமையுடன்  கால்களை நீட்டியது,
ஒரு தாயின் அன்புடன் பாலை ஊட்டியது.

சிறுநேரம் கழித்து தாய் வெளியே சென்றது,
குஞ்சுகள் அனைத்தும் தூக்கம் கொண்டதும்.

ஒருநாள் நாய்குட்டி ஒன்று தன்னிச்சையாக
கால் ஊரி  வந்தது   தன்னம் தனியாக
குறும்புடன் சென்றது, சாக்கடைக்குள் விழுந்தது,
விழுந்ததோ விழுந்தது,தலை கீழாய் விழுந்தது.
பாவம் அது வெளியே வர தவித்தது.,

பின் கால் இரண்டையும்  ஆட்டிக்கொண்டே இருந்தது. 
பாவம் அதை காபாத்த யாருமே இல்லையா?
இரை தேடி போன தாயும் வரவில்லையே என் ?
அய்யோ பாவம் என்று நான் காபத்த போனேன்,
மெதுவா எடுத்து அதை என்  மாறுடன் அணைத்தேன்.
விறைத்தது  அதின்  உடல் குளிர் தாங்க மாட்டாமல் ,
கிடத்தினேன்  குழியில்,அதின் கூட பிறந்தவர்களுடன்.

சந்தோஷத்துடன் நான் வெளிப்பக்கம்  வந்தேன்,
செய்தேனே  நான் இன்று புண்ய கார்யம் ஒன்று.
,
வேகமாய்  நான்  வருவதை கண்டதும்
தாய்  நாய் என்னிடம்  சந்தேகம்  கொண்டது.

கோபத்துடன் என் மேல்  சீறி  பாய்ந்தது.
பல்லை காட்டி என்னை  கடிக்கவும் வந்தது       
அதுவரை  வேடிக்கை பார்த்த இருவரும்
ஓடி விட்டார்கள் என் பேரனும் பேத்தியும்,

என்னை காப்பாத்த யாருமே இல்லையா?  அகபெட்டு  கொண்டேனே  நான் ஒரு  மூலையில்.
நிச்சயம்  நாய் கடி உண்டெனக்கு இன்று
சாமியை கும்பிட்டேன் மானசீகமாக.

நாயுமோ என்னை  விட்ட பாடில்லையே
கொழந்தைகளை  விட  நான் என்ன முக்யமோ ?
கல்லோன்றும் இல்லையே , கம்புகளும் இல்லையே
நாயை விரட்ட  எதுவுமே இல்லையே!
.
நான் என்ன செய்வேன்,செய்வதறியாமல், ,
தலையை  சொறிந்தேன் அட்டஹாசமாக.
,
அப்போது   சிக்கியது  சீப்போன்று கையில், ,
,வீசினேன்  நாயின்மேல் ஆங்காரம் தீர.

சீப்பை கண்டதும்  நாயும்  மிரண்டது,
குழந்தைகள்  ஞாபகம் உடனே வந்தது.

சீப்பாக வந்தார் கடவுள் என்னை காக்க
நாயும் போச்சு தன் செல்வங்களை  பாக்க.
ஜெயம்
29-5-2011

.

No comments:

Post a Comment