Monday, 13 June 2011

பாபாவின் திருவிளையாடல்.

பாபா  குரு ராம்தேவ்  தலைநகரம் வந்தாராம்,
கருப்பு பணத்தை மீட்க்க  வழி ஒன்று கண்டாராம்.
ராம லீலா மைதானத்தில்,திட்டமிட்டு வந்தாராம்,
சாகும் வரை உண்ணாவ்ருதம் சபதம் செய்து கொண்டாராம்.

ஏர்போர்ட்டில் பாபாவுக்கு,சிவப்பு கார்பெட் வரவேர்ப்பாம் ,
மந்த்ரிமார்  ஐந்துபேர்  அவர் திட்டத்தை கலைக்க சென்றார்களாம்.
இரண்டு மணி நேரம் பேசி தொண்டை தண்ணீர் வத்தித்தாம்
குருதேவ் ராம்தேவும் அசைந்து குடுக்கவில்லயாம்.

மக்களுடைய வசதிக்காக,பந்தல் ஒன்று போட்டாராம்,
குளிக்க,கழிக்க மக்களுக்கு வசதியும் செய்தாரம்.
குடிக்க தண்ணீன்,உண்ண கான்டீன்,பான்களும் போட்டாராம்.
சீடர்களும் பக்தியுடன் கை கூப்பி நின்றார்களாம்.

சனியன்று காலையில் யோகாப்யாசம் ஆனது,
அப்பவே தொடங்கியது ராம்தேவின் உண்ணாவ்ருதம்.

உண்ணாவ்ருதம் தேவையில்லை அரசாங்கம் சொல்லியது,
கருப்புப்பணம் மீட்பதற்கு கமிட்டியை போடுவோம்,
மீட்டிங்கிலே பேசி பேசி தீர்ப்பொன்று காணுவோம்.

அரசாங்கத்தின் குறுக்கு வழி எங்களுக்கும் தெரியும்,
அண்ணாவை திட்டம் இட்டு ,மடக்கியதும் தெரியும்.
எங்களிடம் செல்லாது  உங்கள் பித்தலாட்டம்,
கருப்பு பணம் திரும்பாமல் நங்கள் ஓயமாட்டோம்.

செய்வதறியாமல் அரசாங்கம் முழித்தது,
ராமதேவை கடத்த தீருமானம் கொண்டது.

பந்தலுக்குள் மக்களெல்லாம் தூங்கி  கொண்டிருந்தார்கள்,
பாதி ராத்திரி  போலீஸாரும் பூனையைப்போல் நுழைந்தார்கள்.
ராமதேவை தட்டி எழுப்பி கடத்தி செல்ல முயன்றார்கள்.
மக்களெல்லாம் முழித்து கொண்டு வளயம் போட்டார்கள்,

ராம்தேவோ கீழே குதித்து கூட்டத்துக்குள் மறைந்தார்.
போலீஸும் ராம்தேவை தப்பி தப்பி அலைந்தார்கள்.
பாபாவோ  பெண் வேஷம் போட்டு விட்டு      கூட்டத்தினுள்  ஒளிந்தார்,
பொலிஸாரை கொஞ்ச நேரம் திண்டாடவும் வைத்தார் .

போலீஸ் அவரை வலை வீசி கடத்தி சென்று விட்டது,
இனி டெல்லி பக்கம் வந்தாய் அனால்  கொலை நடக்கும் என்றது.
பூச்சாண்டி கட்டினால் நான் பயன்திடுவேனா
பத்து மடங்கு சக்தியுடன் படையெடுத்து வருவேனே.

மந்த்ரி என்ற பதவிக்கு ஏங்குவதும் ஏனோ? கொள்ளையடிப்பதற்கு தக்க  இடமும் இதுதானோ?
வெக்கமே இல்லாமல் வெள்ளை சட்டை போடுறேள்,
வக்கணையாய் சேத்தி வைப்பது                கருப்பு பணம் மட்டுமே,

அத்தனை மக்களும் ராம்தேவின்  பக்ஷம் தான்,
எமர்ஜென்சியை போல் நடத்தலாமா மக்களை?
பிரதமர்தான்  நிச்சயம்  பதில் சொல்ல வேண்டும்,
மறைந்திருந்து,பாபாவை தாக்கியதும் சரியா?
மக்களை லாத்தியால் அடித்ததும்  சரியா?
பெண்கள் என்றும் பாராமல் மிதித்ததும் சரியா?
உறங்கும் மக்களை விரட்டியதும் சரியா?
பிரதமராக நீர் இருந்தும் மக்கள் கதி இதுவா?

அமைதியாக நடத்தும் இந்த  சத்யாக்ரஹத்தில்,
பூந்து விளையாடினத்தின் ரகசியமும்  என்னவோ?
ராம்தேவ் சொல்வதிலும் நியாயமும் இருக்குதே!
கருப்பு பணம் அத்தனையும் மக்களின் உழைப்பே!

 கண் மும்பில் காணுதே ஒரு குருக்ஷேத்திர  யுத்தம் !
 யுத்தம் வராமல் தடுப்பதே  தான்  உசிதம்.

ராமதேவும் ஹசாரேயும் சொல்வதுபோல் செய்யுங்கள்,
பதவி விலகி கொடுத்து விட்டு  பாய் -  பாய் சொல்லுங்கள்.
எந்த அரசு வந்தாலும் நங்கள் விட மாட்டோம்,
கருப்பு பணத்தை மீட்க்காமல்  நாங்கள் அடங்க மாட்டோம்.
ஜெயம்.
6-6-2011

No comments:

Post a Comment