Monday, 4 September 2017

சிங்கார சென்னை



சென்னையில் குடிநீர் எல்லாம் வெத்தி போகும் காலம்,
நெருங்கி விட்டதாம் பஞ்சாங்கம் கூறும்  ஒரு ஸ்லோகம் 
.
பொசுக்கும் வெய்யிலில் தாகமெடுக்கும் வேளையில் 
குடிக்க தண்ணீர் இல்லாமல் தொண்டைவறளும் வேளையில் ,

எல்லா ஜீவராசிகளும் கொஞ்சம் கொஞ்சமா காணாமல் ,
போகும் காலம் நெருங்கி விட்டதாம் வெய்யில் தாங்காமல்
..
கடலில் இருந்து வரும் உப்புத்தண்ணீர் பெருவெள்ளமாக ,
வந்து நிறைந்திடுமாம் குட்டை கொளம் எல்லாம் வேகமாக 

தென்னை மரங்கள் வளர்ந்து காடாக மாறிடுமாம் சென்னை
 நாம் இருப்போம் செழிப்பாக இனி சென்னை மாநிலமெல்லாம் 

போய் தொலையட்டும் இந்த மானிட ஜென்மங்கள் எல்லாம்
காட்டுக்குள் ஜனிச்சுடுமாம்  பூச்சியும் புழுக்களும் தானாய் 

புழு பூச்சியாய் பூச்சியோ ஓர் அழகிய பட்டாம்பூச்சியாய் ,
சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியும் மின்மினியா பூச்சியும்

காட்டில் வசிச்சிடும் ஜீவராசிகள் அத்தனையும் குதூகலமாய் 
சின்ன சின்ன ஆசைகளும் சிறகடிக்கும் ஆசைகளுமாய் ,

ஒன்னாய் சேர்ந்து வாழ்ந்திடுவோம்  மனிதனின் மறைமுகமாய் 
ஒற்றுமையுடன் வாழ்ந்திடுவோம் காட்டில் மிக ரஹஸ்யமாய் ,

மனிதனை போல் ஓர்  காண்டாமிருகம் உலகில் எங்குமில்லயே 
அவனை இங்கு வரவிடாமல் தடுப்போம் சூழ்ச்சி ஒன்று செய்து .

தென்னை மரத்தில் ஏறி தேங்காயை பறிப்பவனும்  இல்லையே 
தித்திக்கும் தேங்காய் தண்ணியை குடிக்க மானிடனும்இல்லயே .

ரொம்பவும் துள்ளதே வந்துவிட்டேன் நான் வாநரனாய்  ,
ஏறிடுவேன் தென்னை மரத்தில் ,தேங்காயை போட்டுடுவேன்,

வயறு நிறையே சாப்பிடுங்கள் கொட்டாங்கச்சியை சேமியுங்கள்,
நல்ல குளிர் காலம்  வந்ததும் கொட்டாங்கச்சியை எரியுங்கள் .

கொட்டாங்கச்சி எரியும்போது கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள் 
வானரத்தான் சொல்வதெல்லாம்  நீங்கள் தட்டாமல் கேளுங்கள் .

.நல்லகாலம் வந்திடுமாம் இனி தென்னை மர சென்னையில்,
எல்லா வித மரங்களுடன் மாறிடுமாம் ஓர் சிங்கார சென்னையாய் ..
                                             சுபம் -------------------------

No comments:

Post a Comment