Thursday, 5 October 2017

ஒரு பெண்ணின் மனமாற்றம் .

   
 தெரு தெருவா அலைந்து பூக்கள் திருடுவேன்  ஸிட்நியில் அப்பொ,
தெரு தெருவா அலைந்து " சில்க்கியின் " பூ எடுக்குகிறேன் இப்பொ.

ஏன் கணவர் பக்தி  ச்றத்தயா பூஜை பண்ணிக்கொண்டிருந்தார் அப்பொ,
மணக்கும் புஷ்ப்பங்களை நோக்கி தெருவெல்லாம் ஓடுவேன்  அப்பொ.

விதவிதமான பூக்களை திருடி தோளில் தொங்கும் பைய்யெல்லாம்  பூவாஸனை,
நம் வீட்டு மல்லிக்கு மணமே இல்லயெந்று தோண்ரும் நம்மள் மன யோசனை.

என் கணவர் பூஜை செய்யும் பழக்கம் ஒரேயடியாக நின்றுவிட்டது இப்போ,
நானும் பூ திருடும் பழக்கத்தை ஒரேயடியாக நிறுத்திவிட்டேன் இப்போ.

அன்று பூக்களை பூஜைக்காக திருடுவதை ரொம்பவே ரசித்தேன்,
இன்று பூக்கள் தாய் செடியில் பூத்து  குலுங்குவதை ரசிக்கிறேன்.

பூக்களே நீங்கள் தாயுடன் இருந்து உங்கள் அழகை காட்டுங்கள்,
உங்கள் நறுமணத்தால் உங்கள் தாயின் உள்ளத்தை மயக்குங்கள்.
                                                   சுபம் .
                                               ------------

No comments:

Post a Comment