நிறைவேதும் இல்லை, எனக்குள் குறை உண்டு கண்ணா
செய்வதென்நென்று அறியேன் மனம் குமறுதே மணிவண்ணா.
விடியற்காலையில் செல்வேன் நான் மொட்டைமாடிக்கு,
யோகாப்யாசவும் ப்ரனாயாமவும் என்னுடைய தினசரி பயிற்சி.ஒருமரகொம்பில் பார்ப்பேன் நித்யமும் இரு காகங்கள் ஜோடியாய்
செர்ந்தாபோல் உட்கார்ந்து அவங்க பாஷையில் கொஞ்சிகுலாவுவதை.
ஒருகாகம் குனிந்து கழுத்தை கோணலாக திருப்பி கிஸ் என்று சொல்லாமல் சொல்லும் ,
மறுகாகம் கழுத்தை மறுபக்கம் திருப்பி,நீ குடு மொதல்லே என்று குனிந்தே இருக்கும்.
நமக்குள்ளே எதுக்கு இந்த போட்டி மை டியர், நானே முந்துகிறேன் என்றது ஆண் காக்கா ,
வெற்றி நடையுடன் வந்து பெண் காகவும் ஆண் கக்காவுடன் உரசிகொண்டது
கொஞ்சி குலாவும் இந்த உல்லாச பறைவகளை பல மாதங்களாக பார்க்கிறேன் நான்.
பதி பத்தினியாக வாழும் இப்பறவைகளை பார்த்து நாம் படிக்க வேண்டியது ஏராளம்!
மானிட வர்கத்துக்கு இதுபோல் ஒரு பாசம் இருக்குமா ,எனக்குள் எழும்பியது ஓர் மெகா சந்தேஹம்,
இருக்கவே இருக்காதென்று என் மனம் உறுதியாக சொல்வது தான் என்னில் இருக்கும் குறையோ?
ஆணானாலும் பெண்ணானாலும் மனித வர்க்கமே ஈகோ பிடித்து அலைவதின் காரணம்?
ஸ்வயம் பீத்தலும் ஸ்வயநிலமும் நிறைந்த மனித குலத்துக்கு ,தெரியுமா பாசத்தின் அர்த்தம்?
காகங்களை பார்க்கிறேன்,இரு குயில்களை பார்க்கிறேன் அப்பப்பா என்ன அன்யோன்யம்!
ஒரு குயில் கூவினால் மறுகுயில் கூவுது என்னதான் பேசுதோ அவங்க பாஷையில்.
நான் மல்லாந்து படுத்து வானத்தை நோக்கிறேன் கூட்டமாய் பறக்கும் பச்சை கிளிகளின் உல்லாசபயணத்தை ,
கீச் கீச் என்று கூவி பறக்கும் இக்கிளிகளின் அழகை வர்ணிப்பதில் இருக்கே ஒரு தனி சுகம்
இதுபோல் நம்மால் ஏன் இருக்கமுடியவில்லை என்று எண்ணங்கள் பல ஓடுவது மனதில்.விடையேதும் இல்லை,உன்னிடம் அடைக்கலமானேன் என் குழலூதும் காற்முக வர்ணா.
விடை கிடைக்கும் பெண்ணே நிறைவையும் குறைவையும் நீ சமமாக பாவித்தால் ,
தடையேதும் இல்லை நிறைவுகள் காண, உன் கடமைகளை நீ தவறாமல் செய்தால்.
காலையிலும் மாலையிலும் தியானம் செய்வாய் உன் இஷ்ட்ட தேவதையை நினைத்து,
நிச்சயமாக உனக்கு தெளிவு கிடைத்திடும் குறையெல்லாம் நீங்கி நிறைவுகள் வந்திடும்.
சுபம் .
No comments:
Post a Comment