Thursday, 18 April 2013

பஞ்சும் பிஞ்சும் .

                                     -----------------------                     


பத்து மாதம் பளங்கு தண்ணீரில் பல்டி அடித்து  ,
பிறகு ப்ரித்வியில் பிறந்து பெற்றோருடன்

 பஞ்சு ,மெத்தையில் படுத்து, பருத்தி ஆடைகள் பகிர்ந்து,
பல ஆண்டுகள் பகிட்டாக வாழ்ந்து,

போக போக பல ஆண்டுகள்  கழித்து பலவித ஆரோக்ய பிரச்னைகளால் ,
பாதிக்கப்பட்டு, பல் எல்லாம் போயி,பப்பி வாயுடன் படுத்த படுக்கை ஆயி

 பணமெல்லாம் பறிபோய்  ,பிராணனும் போயி,அந்த பட்டுபோய்  படுத்திருக்கும் பரலோக ப்ராப்தி அடைந்த ,பெண்மணியின்  பஞ்ச இந்த்ரியங்களும்

,பஞ்சினால் பழுதடைக்கபட்டு,புட்
பால் போல்  பொங்கியிருக்கும் பெரும்தொப்பையும் 
ஆக   படுத்திருப்பதை பார்த்து நான் என்னையே அவளாக சித்ரீகரிதுவிட்டேன்.

நான் இறந்த பிறகும்  இதுபோல் பார்க்க வருவோர் பிரசம்சை அடிப்பதை நினைத்து ,சிரிப்பு தாங்காமல் பிறர் பாற்க்கும்படி  பொட்டி  சிரித்துவிட்டேன்,

பார்த்திருந்த பத்மா பரம ரஹச்யமாக யாரும் பார்க்காமல் நறுக்கென்று என்னை "பிஞ்ச் " பண்ணினாள், பொட்டி பாம்பை போல் அடங்கி பச்சை பாவமாக பிரதிபலித்தேன்.
                                                                                                                   ஜெயம் 





No comments:

Post a Comment