Thursday, 13 February 2014

கொலை


                        கொலை 


என் குடும்பம் காலை கனவு கண்டுகொண்டே அரை கண் மூடி நல்ல உறக்கம்,
என் வீட்டு வாசலில் சத்தமில்லாமல் ஓடுது மிக பெரிய சண்டையின் துடக்கம் .

யார் செரி  யார் தப்பு எதுக்காக இந்த யுத்தம் ஒண்ணுமே புரியாத நிலைமை,
சக்களத்தி சண்டையாக இருக்குமோ,இல்லை பழைய பகையின்  பாக்கியா?

தூசி பறக்குது பறவைகளின் இறகு சத்தம் போல் கேக்குது சண்டையின் உக்ரம் ,
நமக்கேன் வீண் வம்புன்னு வெளியே போக தய்ரியம் இல்லாத ஒரு மன துயரம்.

சண்டையின்  சத்தம் ஓஞ்சதும் மெதுவாக எட்டிப்பார்த்தேன் வாச திண்ணையை ,
ஓர் இடத்தில் ரக்த பாடுகள் வேறே இடத்தில குதி கீறி நீண்டு கிடக்கும் குடல்மாலை,

பஞ்சு போல் சிதறி கிடக்கும் பறவைகளின் இறகுகள்,கொலை நடந்திருக்குமோ ?
நெஞ்சு வெடிக்குது கொலை செய்ய பட்டுவிட்டது பாவம் அந்த தவிட்டு பக்ஷி .

வாய் திறந்து கண்கள் பிதுங்கி  மல்லாந்து கிடக்கும் பறவையின் சோக கதை  இது.
பறவைகளுக்கும் இத்தனை பகையும் பழியுமா என்று யோசிக்க வைக்கும் கதை இது.

No comments:

Post a Comment